நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Saturday, 19 July 2014

அங்கிரஸ் ரிஷி



--------------------------
பிரத்யங்கரா தேவியை பற்றி தெரியாதவர் யாரும் இருக்க முடியாது.
அந்த பிரத்யங்கரா தேவியின் மந்திரத்தை கண்டுரைத்தவர்தான் அங்கிரஸ் மஹ ரிஷி.
அங்கிரஸ் ரிஷி ப்ரஹ்ம்மாவின் 6 மானஸ புத்திரர்களில் ஒருவர். அங்கார என்ற வட மொழி சொல்லுக்கு எரியும் கரித்துண்டு என்று பொருள்.
ருத்ரன் செய்த வேள்வியில் ப்ரஹ்ம்மா ஆஹுதி செய்த பொழுது சில மஹ ரிஷிகள் வெளி வந்தனர். அவர்களில் முதலாவது வந்தவர் அங்கிரஸ்.
இவர் ப்ரஹ்ம்மாவால் உலகை ஸ்ருஷ்டி செய்ய படைக்கப்பட்ட ஏழு பிரஜாபதிகளில் ஒருவர்.
இவர் அதர்வ வேதத்தில் சிறந்தவர், இந்திரன் இவரை அதர்வாங்கிரஸ் என்ற பட்டத்தை வழங்கினான்.
இவரை பற்றி மஹா பாரதம் மிக விரிவாக பேசுகிறது.
தவத்தின் உயர்வால் ஒரு சமயம் இவர் கொள்ந்து விட்டெரியும் நெருப்பாக பிரகாசித்து கொண்டிருந்தார். மக்கள் அக்னி பகவானை கை விட்டு விட்டு இவரை தொழ ஆரம்பித்தனர்.
வருத்தமடைந்த அக்னி பகவான் காட்டில் ஒளிந்து கொண்டார். அவரை சமாதானப்படுத்தி , நான் உங்கள் புத்திரனாக இருப்பேன் என்று சொல்லி அழைத்து வந்தார் அங்கிரஸ்.இவரை ரிக் வேதம் பல இடங்களில் குறிப்ப்டுகிறது.
அக்னி பகவான் ஒரு முறை இவருக்கு மரியாதை செய்யாததால், நெருப்பிலிருந்து எப்போதும் புகை வரட்டும் என்று சபித்தவர் இவர்!
அகத்தியரைப்போல இவரும் ஒரு முறை தாகம் அதிகமாக இருந்ததால் எல்லா கடல் நீரையும் குடித்து விட்டார். அப்படியும் தாகம் தீராமல் பூமியை தோண்டி தண்ணீர் எடுத்து குடித்தார்.
இந்திரனின் பசுக்களை ஒரு முறை அரக்கர்கள் கவர்ந்து செட்ர போது அதை கண்டு பிடிக்க இந்திரனின் நாயான சரம்மவை அனுப்பி வைக்க ஆலோசனை சொன்னவர் அங்கிரஸ்.-முதல் மோப்ப நாய்! இது ரிக் வேதம் 1-62-3 ல் சொல்லப்பட்டுள்ள செய்தி.
அங்கிரஸுக்கு ஹிரண்ய ஸ்தூப ரிஷி என்ற புதல்வர் உண்டு.( ஹிரண்ய ஸ்தூபர் நவ கிரஹ சூக்தத்தில் சில மந்திரங்களுக்கு ரிஷியாக வருவார்-எந்த மந்திரங்கள் என்பது நினைவில்லை). இந்திரனக்கு நிகராக தனக்கு ஒர் மகன் வேண்டி இவர் யாகம் செய்யும் பொழுது நடுங்கிய இந்திரன் தாணே அவருக்கு மகனாக பிறந்தான்.அவர் பெயர் ஸவ்யர். இரண்டு மகங்களும் மஹ ரிஷிகளே.
ஒரு முறை அங்கிரஸ் வாயு தேவனிடம் சினம் கொண்ட போது அவன் ஒடி ஒளிந்து கொண்டாணாம்.அவ்வளவு தெய்வீக சக்தி இவருக்கு.
இவர் சௌனகருக்கு செய்த உபதேசம்-
பரா வித்தை அபரா வித்தை என்று இரண்டு வித்யைகளையும் அறிய வேண்டும்.
அபரா என்பது வேதம், வியாகரணம்,சிக்ஷை,சந்தம்,நிருக்தம், ஜோதிடம்,கல்பம் என்றவையுடன் கூடியவை.பரா வித்யையால்தான் கடவுளை அடைய முடியும்.
பிரணவம் என்ற வில்லில் ஆத்மா என்ற அம்பை பூட்டினால் அது ப்ரம்மம் என்ற இலக்கில் பாயும்.
அங்கிரஸ் சொல்லி தந்த அதர்வ வேதத்தை நங்கு பரப்பியவ்ர்கள் இருவர்.
ஒருவர்-பிப்பலாதர் இன்னொருவர்-சௌனகர்.
அந்த சௌனகர்தான் இவர்.

No comments:

Post a Comment