=====================
தேவதைகளுக்கும் மனிதர்களுக்குமிடையில் பாலமாக விளங்குபவர்கள் மக ரிஷிகள்.
யஸ்ய நிஸ்வஸிதோ வேதா:
பகவானின் மூச்சு காற்று வேத மந்திரங்கள்.
இந்த மந்திரங்களை உள்ளுணர்வில் கண்டறிபவர்கள் மந்திர திரஷ்டாக்கள்.
வாய் வழியாகவே வேதத்தை தம் சீடர்களூக்கு உபதேசித்து பரப்பினார்கள்.இதனால்தான் வேதங்களை எழுதா கிளவி என்பர்.
வாஸ்தவத்தில் வேத மந்திரங்கள் இவர்களுடைய உயர்ந்த தியான நிலையில் தோன்றியவை. கண்கள் பார்க்காமலும் காதுகள் கேட்காமலும் இருக்கும் நிலையில் =பரமாத்மாவின் ஸ்வாசகதிகளை உணர்ந்து அவற்றை பரப்பினர்.
அனாஹதத்தில் மணியடிக்கும் என்பது இதுதான்!
உயர்ந்த இறை நிலையில் இது சாத்தியமாகிறது.
ஒழுக்கம் தவம் நிரம்ப பெற்றவர்கள் இந்த மந்திர த்ரஷ்டாக்கள். ஆதியில் இவர்கள் இருந்து வழி காட்டி, மந்திரங்களையெல்லாம் கண்டுணர்ந்த பின், இனி மந்திரங்கள் எதுவும் புதிதில்ல என்ற நிலை ஏற்பட்டது. அப்பொழுதும் பல தவ சீலர்கள் தோன்றினர். இவர்களும் மக ரிஷிகளே.ஆனால் த்ரஷ்டாக்கள் அல்லர்.
நமக்கு பரிச்ச்யமான பல ரிஷிகள் மந்திர த்ரஷ்டாக்கள் இல்லை.
வியாசர்
நாரதர்
சுகர்
வால்மீகி
கபிலர்
நசிகேதச்
ஸ்வேதகேது
உத்தாலக ஆருணி
சத்தியகாம ஜாபாலர்
இவர்கள் அனைவரும் ரிஷிகள். ஆனால் த்ரஷ்டாக்கள் இல்லை.
மகரிஷிகளை ப்ரம்ம ரிஷி ராஜ ரிஷி தேவ ரிஷி என மூன்றாக பிரிக்கலாம்.
வசிஷ்டர்/அத்திரி/அங்கிரஸ்/வீசுவா மித்ரர் -ப்ரம்ம ரிஷிகள்
ஜனகர்/மனு/சிபி/ரிது பர்ணர்-ராஜ ரிஷிகள்
நாரதர்/கஸ்யபர்-தேவ ரிஷிகள்.
48000 ரிஷிகள் உண்டாம்.ஆனால் சுமார் 150 பேர் பற்றிதான் குறிப்பு இருக்கிறது.யாஸ்கர் என்ற மக ரிஷி ந்ருக்ததை இயற்றினார். ந்ருக்த்தம் என்பது வேத சொற்களஞ்சியம். வேறு தகவல் எதுவும் தெரியாது. கிருஸ்தமதர் என்ற ரிஷி ரிக் வேதத்தின் 2 ஆம் காண்டத்தில் பல சூக்தங்களுக்கு ரிஷி. வேறொன்றும் இவரை பற்றி தெரியாது.
முக்கியமான விஷயம்-ரிஷிகள் ஜாதிக்கு அப்பாற்பட்டவர்கள். வால்மீகியும் சபரியும் வேடுவர்கள். வேதத்தை தொகுத்து நமக்களித்த வியாசர் செம்படவ பெண்ணுக்கு பிறந்தவர்.1897 ஆம் ஆண்டு ஸ்வாமி விவேகானந்தர் சென்னையில் ஆற்றிய சொற்பொழிவு:=//நாம் எல்லோரும் ரிஷிகள் ஆக வேண்டும்.அதுதான் மோட்சம்./
No comments:
Post a Comment