நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Wednesday, 16 July 2014

ரகசியமாய் வைக்கபட்டுள்ள ஜன வசியம்

ரகசியமாய் வைக்கபட்டுள்ள ஜன வசியம்
வசியத்தில் ஜன வசியம், தன வசியம்,சத்ரு வசியம்,ஸ்த்ரீ (பெண்) வசியம், புருஷ (ஆண்) வசியம், மிருக வசியம், தேவவசியம்,லோக வசியம்,ராஜ வசியம்,மூலிகையினால் வசியம், யந்திரத்தினால் வசியம் என பல உள்ளது. இங்கே கொடுக்கபட்டுள்ளது பொதுவான ஆனால் சக்தி வாய்ந்த ஒன்றாகும்.ரகசியமாய் வைக்கப்பட்டிருக்கும் ஒன்றும் ஆகும்.
கோரோசனையுடன், மச்ச கல், சிறுதேன் என அழைக்கப்படும் புற்றுதேனையும் சேர்த்து இழைத்து நெற்றியிலோ, உள்ளங்கால்களிலோ தடவிக்கொண்டு செல்ல, நமது எதிரிகள் முதற் கொண்டு சகலரும் வசியமாவார்கள். இது அனுபவத்தில் கைகண்ட முறையாகும். இதற்கு அளவு முறை ஏதும் இல்லை.அவரவர் தேவைக்கேற்ப்ப செய்து கொள்ளலாம்.
கோரோசனையை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும்.மச்ச கல் என்பது கடலில் வாழும் சுறா மீன் வகைகளில் மிக அபூர்வமாக அதன் தலை பகுதியில் கிடைக்க கூடிய ஒரு கல் ஆகும். புற்று தேன்-இது மண் குடிசை கரையான் புற்று போன்ற இடங்களில் சிறிய கொசுவை போல உள்ள தேனீக்களால் கட்டப்படும் கூட்டில் கிடைக்கும் தேன். இந்த கூடுகளில் அதிகபட்சம் 50 முதல் 100 மில்லி வரை தான் தேன் இருக்கும். கொசுததேன் எனவும் இதை கூறுகிறார்கள். (எங்கள் தேவைக்கு மலை மற்றும் வன பகுதிகளில் வாழும் மக்களின் மூலம் பெறுகிறோம்) 

No comments:

Post a Comment