நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Thursday, 26 July 2018

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி ஸாக்த மடாலயத்தில் நடைபெறும் 16ம் ஆண்டு ஸ்ரீ சகஸ்ர சண்டீ மஹா யக்ஞம்


மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி ஸாக்த மடாலயத்தில் நடைபெறும் 16ம் ஆண்டு ஸ்ரீ சகஸ்ர சண்டீ மஹா யக்ஞம்


ஸ்ரீ குரு :சர்வ காரண புதா சக்தி :சத்ய மேவ ஜெயத் !

ஸ்ரீ காந்தோ:மாது லோயஸ்ய:


ஜனனீ சர்வ மங்களா ஜனக:

சங்கரோதேவ :தம் வந்தே .குஞ்ஜரனனம் .

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

நிகழ்ச்சி நிரல்

04-08-2018 சனி கிழமை ஆடி மாதம் 19

காலை

ஸ்ரீ லக்ஷ்மி கணபதி ஹோமம்,

(செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றி பெற )

அங்குரார்ப்பணம் ரட்சபந்தனம்

மாலை 03-00 மணிக்கு அஷ்டமி ஏக சண்டி ஹோமம்

05-08-2018 ஞாயிற்று கிழமை ஆடி மாதம் 20

ஸ்ரீ கணபதி ஹோமம்,

(நினைத்த காரியங்கள் சித்தி பெற )

சூர்ய நமஸ்காரம்

நவக்கிரக ஹோமம்

மாலை சண்டி பாராயணம்

06-08-2018,திங்கட்க்கிழமைஆடி மாதம்21

ஸ்ரீ மஹா ம்ருத்ஞ்ஜய ஹோமம்,

(ஆயுள் விருத்தி )

சண்டி பாராயணம்

மாலை

ஸ்ரீ ராஜமாதங்கி ஹோமம்

(கல்வி,கல்விதுறை வளர்ச்சி கிடைக்க )

07-08-2018, செவ்வாய் கிழமை ஆடி மாதம் 22

ஸ்ரீ கணபதி ஹோமம்,

ஸ்ரீ சாந்தி துர்காஹோமம்

சண்டி பாராயணம்

மாலை ஸ்ரீ தக்ஷிண காளி ஹோமம்

(வளங்கள் அணைத்தும் பெற)

08-08-2018, புதன் கிழமை ஆடி மாதம் 23

ஸ்ரீ மஹா புத்ர காமேஷ்டி ஹோமம்

(மகப்பேறு -குழந்தைச்செல்வம் பெற )

ஸ்ரீ மஹா சுதர்ஸ்ன ஹோமம்,

(நினைத்த காரியங்கள் தடையின்றி நடைபெற )

ஸ்ரீ மஹா தன்வந்த்ரீ ஹோமம்

(நோயற்ற வாழ்வு நீண்டஆயுளை பெற)

09-08-2018, வியாழக்கிழமை ஆடி மாதம் 24

ஸ்ரீ கணபதி ஹோமம்,

ஸ்ரீ சண்டி ஹோமம்

1000 சண்டி மஹா யக்ஞம்

10-08-2018, வெள்ளிக்கிழமை ஆடி மாதம் 25

ஸ்ரீ லக்ஷ்மி நாராயண ஹோமம்,

(செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றி பெற)

ஸ்ரீ சாம்ராஜ்ய லக்ஷ்மீ ஹோமம்,

(26 வகையான செல்வம் கிடைக்க )

ஸ்ரீ ஸ்வயம்வரா பார்வதி ஹோமம்

(திருமணத் தடை நீங்கித் திருமணம் நடைபெற)

ஸ்ரீமஹா பஞ்சமுக பிரத்யகிரா அமாவாசை யாகம்

11-08-2018, சனிக்கிழமை ஆடி மாதம் 26

ஸ்ரீ கணபதி ஹோமம்,

சாந்தி பாட ஜபம் ,

ஸ்ரீ தச மஹா வித்யா ஹோமம்

ஸ்ரீ சதுஷ் ஷஷ்டி பைரவ பூஜை

(பொன் பொருள் நிலைத்திட

கடம் புறப்பாடு, அம்பாளுக்கு பாத சமர்ப்பணம்,

திபாராதனை

ப்ரஸாதம் ,விநியோகம்,

அனைவரும் இந்த ஸ்ரீ சகஸ்ரசண்டி மஹா யாக பெருவிழாவில் கலந்து கொண்டு

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள்ஆசிர்வாதம் பெற்று ஆனந்த்தமாய் வாழ வேண்டும் என்று மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி ஸாக்த மடாலயத்தின் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.

அனுமதி இலவசம் ,24மணி நேரம் நித்திய அன்னதானம்

மேலும் தகவல்கள்களுக்கு

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி ஸாக்த மடாலயம்

பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,

மானாமதுரை-630606

cell : +91 98428 58236

No comments:

Post a Comment