தாடிக்கொம்பு ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு 05-10-2015திங்கள் கிழமைதேய்பிறை அஷ்டமி
.jpg)
-திண்டுக்கல்லில் இருந்து கரூர் செல்லும் வழியில், சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது தாடிக்கொம்பு. இங்கே சிற்ப நயத்துடன் அழகுறத் திகழ்கிறது ஸ்ரீசௌந்தரராஜ பெருமாள் கோயில். விஜய நகரப் பேரரசு ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட, கலை நுட்பத்துடன் கூடிய அற்புதமான கோயில்
இழந்த செல்வங்களை மீண்டும் பெறவும் தொழிலில் வளர்ச்சி காணவும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும் செல்வ செழிப்போடு வாழவும் தேய்பிறை அஷ்டமியன்று ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்யவும்
அஷ்ட பைரவர்களில், ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரும் ஒருவர். இந்தக் கோயிலில், ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் ரொம்பவே விசேஷம்!
அஷ்ட பைரவர்களில், ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரும் ஒருவர். இந்தக் கோயிலில், ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் ரொம்பவே விசேஷம்!
இவரை வணங்கினால், நமக்குச் செல்வங்களைத் தந்தருள்வார். நமது பொருளாதாரப் பிரச்னைகள் யாவும் நீங்கி, வீட்டில் சகல செல்வங்களும் குடிகொள்ளும் என்பது ஐதீகம்!
தேய்பிறை அஷ்டமி நாளில் வரும் ராகு காலத்தில்ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டால் வழிபட்டால், செல்வத்தின் பிரபஞ்ச அதிபதியை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்;அதனால்,நமது ஏழு ஜன்மங்கள் மற்றும் ஏழு தலைமுறை முன்னோர்களில் பாவ வினைகள் தீரத் துவங்கும்;அப்படி பாவ வினைகள் தீரத்து நமது செல்வச் செழிப்பும் அதிகரிக்கத் துவங்கும்
நாம் ஏன் தேய்பிறை அஷ்டமியில்
ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை வணங்க வேண்டும் என்றால்? அஷ்ட லட்சுமிகளும் அஷ்டமில் அன்று தான் பைரவரை வணங்கி தங்களுக்கு தேவையான சக்தியை பெற்று மக்களுக்கு மற்ற எல்லா நாட்களும் செல்வங்கள் வழங்கி வருகின்றனர் என்பது ஆன்றோர்கள் மற்றும் சித்தர்களின் நம்பிக்கை
No comments:
Post a Comment