குரு சொன்னக் குட்டிக் கதை!
தர்மத்தைக் கடைப்பிடிப்பது பற்றி குரு ஒருவர் உபதேசித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு சீடன், ‘‘குருவே, தர்மத்தை கடைப் பிடித்தால்தான் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்கிறீர்கள். ஆனால், சிலர் அதர்மத்தை மட்டுமே செய்தும் நன்றாக வாழ்கிறார்களே, எப்படி?’’ என்று கேட்டான்.
குரு, ‘‘சீடனே, மரத்தில் இருக்கும் வரைதான் இலை செழித்து இருக்கும். அது தர்மம். அதே இலை, மரத்திலிருந்து உதிர்ந்து விட்டால் அதன் உயிர் உடனே போகாது. சில நாட்கள் கழித்துதான் அது வாடும். அதுபோல அதர்மத்தைப் பின்பற்றுபவர்கள் சில காலம் நன்றாக வாழ்வர். பின்னர் அழிந்து போவர். அதர்மம் செய்பவர்கள் திருந்துவதற்குக் கடவுள் சிறிது அவகாசம் கொடுப்பார். புரிந்து கொள்ளாதவர்கள் அழிவர். இதைத்தான் ‘தர்மோ ரக்ஷதி ரக்ஷத:’ என்று கூறுவர். நாம் தர்மத்தைக் காத்தால், அது நம்மைக் காக்கும்’’ என்றார்.

No comments:
Post a Comment