
இந்து மதத்தில் பல தெய்வ வழிபாடுகள் உள்ளன. அவற்றில் பல தெய்வங்களுக்கு பல்வேறு நறுமணம் வீசும் மலர்களால் மாலை சூட்டி வழிபடுவார்கள். ஆனால் விநாயகருக்கு அருகம்புல் மாலையே மிகவும் பிடித்தது.
உலகில் முதன் முதலில் தோன்றியது இந்த அருகம்புல்தான் என்ற கூற்று உள்ளது. விநாயகர் பூஜை செய்வதற்கு அன்னம், மோதகம், அவல், பழங்கள் இல்லாது போனாலும் அருகம்புல்லும், தண்ணீரும் இருந்தால் போதும் என்பார்கள்.
ஒரு முறை தேவர்களை கொடுமைப்படுத்திய அனலாசுரன் என்ற அசுரனுடன் விநாயகப்பெருமான் போர் புரிந்தார். அப்போது அனலாசுரனை, தன் வாயில் போட்டு விழுங்கிவிட்டார். உள்ளே சென்றதும் அசுரனின் அனல் காரணமாக, விநாயகரால் வெப்பத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை.
இந்த நிலையில் முனிவர்கள், சித்தர்கள் பலரும் பல முயற்சிகள் செய்தும் பலன் இல்லாமல் போய்விட்டது. இறுதியில் அருகம்புல்லை எடுத்து மாலையாக கட்டி அதனை விநாயகரின் உடல் முழுவதும் வைத்து தடவிவிட்டார்கள். அனல் குறைந்து குளிர்ச்சி ஏற்பட்டது. அது முதல் விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவிப்பது வழிபாடாக மாறியது.
No comments:
Post a Comment