நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Wednesday, 10 September 2014

குழந்தைப்பேறு அருளும் மந்திரம்



16 செல்வங்களுள் குழந்தைபேறு சிறந்த செல்வமாக கருதப்படுகிறது.குழந்தைப்பேறு  இல்லாதவர்கள் படும் மனக்கவலை சொல்ல முடியாதது அதற்கு வெறுமனே ஆறுதல் மட்டும் சொல்லி ஆற்றமுடியாது. எனக்குத்  தெரிய பல மந்திர ஜெபம்,பிரயோகம் இருப்பினும் அவற்றில் எளிய முறைகளை இங்கு பதிகிறேன்.


1.கிருஷ்ண மந்திரம்:-

ஓம்| க்லீம் கிருஷ்ணாய |கோவிந்தாய| கோபிஜன வல்லபாய நமஹா ||

இம்மந்திரத்திற்கு   ரிஷி நாரதர்  அவரை மந்திரம் பலிக்க வேண்டிக்கொண்டு  பின் ஜெபிக்கவும்.இதனை 27/54/108 என்ற எண்ணிக்கையில் கிழக்கு நோக்கி அமர்ந்து தொடர்ந்து ஜெபித்து வர   விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும்.அம்மன் அல்லது பெருமாள் கோயிலில் வைத்து ஜெபிக்க சிறப்பு.ஜெபிக்கும் போது அருகில் கொஞ்சம் வெண்ணை வைத்து மந்திரம் ஜெபித்தபின் மந்திரத்தின் சக்தி   இந்த வெண்ணையில் இறங்கட்டும் என வேண்டி அந்த வெண்ணையை சாப்பிட்டு வர  மந்திரத்தின் சக்தியைக்  கூட்டும்.


2.கிருஷ்ண மந்திரம்: 

தேவகி சுத கோவிந்த வாசுதேவ ஜகத்பதே |
தேஹிமே தனயம் கிருஷ்ண த்வாமஹம் சரணம் கத:|
தேவ தேவ ஜகன்னாத கோத்ர வ்ருத்திகரப்ரபோ|
தேஹிமே தனயம் சீக்ரம் ஆயுஷ் மந்தம் யசஸ்விஸ்நம்||

இதனை 27/54/108 என்ற எண்ணிக்கையில் கிழக்கு நோக்கி அமர்ந்து  தொடர்ந்து  ஜெபித்து வர  விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும்.அம்மன் அல்லது பெருமாள் கோயிலில் வைத்து ஜெபிக்க சிறப்பு.ஜெபிக்கும் போது அருகில் கொஞ்சம் வெண்ணை வைத்து மந்திரம் ஜெபித்தபின் மந்திரத்தின் சக்தி   இந்த வெண்ணையில் இறங்கட்டும் என வேண்டி அந்த வெண்ணையை சாப்பிட்டு வர மந்திரத்தின் சக்தியைக்  கூட்டும்.


3.கிருஷ்ண மந்திரம்: 

இந்திரா நீல  சமயச்சாயம் பீதாம்பரதரம் ஹரிம் |
சங்க: சக்ர:கதாபத்மை :லசத்பாஹு விசிந்தயேத்|| 

இதனை ஒரு தேய்பிறை அஷ்டமியில் இருந்து மறு தேய்பிறை அஷ்டமி வரை 1 மாதம் தினம் 8 தடவை கிழக்கு நோக்கி அமர்ந்து  ஜெபித்து   வர   விரைவில்  குழந்தை பாக்கியம் கிட்டும்.இம்மந்திரம் குழந்தை பாக்கியம் மட்டுமின்றி எண்ணிய எண்ணங்களையும் நிறைவேற்றும்.


நன்றி  சூர்யா

No comments:

Post a Comment