நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Tuesday, 30 September 2014

பணப்பிரச்சனைகள் நிரந்தரமாக தீர அமானுஷ்ய பரிகாரம்.


வெள்ளிக்கிழமை தோறும் ஸ்ரீவித்யா குங்குமத்தில் சுத்தமான பசு நெய் கலந்து ஒரு எலுமிச்சம் பழத்தில் இந்த கலவையில் ஸ்வஸ்திக் சின்னம் வரைந்து மஹாலக்ஷ்மி விளக்கின் பாதத்தில் வைக்கவும். இவை காலை 6-7 அல்லது மதியம் 1-2 அல்லது இரவு 8-9 செய்தல் நலம். இதை ஒரு வருடம் செய்ய வேண்டும். ஒரு வருடம் முடிந்ததும் அனைத்து பழங்களுடன் 12 ஒரு ரூபாய் நாணயங்களை சேர்த்து ஓடும் ஆற்றில் அல்லது நீர் நிலைகளில் கிழக்கு முகமாக நின்று விட்டு விடவும். பின்பு அங்கேயே குல தெய்வம் மற்றும் விநாயகருக்கு மூல மந்திரம் கூறி பூஜையை செய்து வீடு திரும்பவும். இதன் பின் பண பிரச்னை என்பதே இல்லாமல் போவது உறுதி. மேலும் இந்த ஒரு வருட காலமும் 

வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு ஏதேனும் பசு மாட்டிற்க்கு 6 மொந்‌தன் வாழை பழம் கொடுத்து வர பலன் இரட்டிப்பாகும்.

--நன்றி ஸ்ரீ விஸ்வ ஆன்மீகம் 

No comments:

Post a Comment