நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Sunday, 28 September 2014

கடன் தொல்லை தீர ஒரு அரிய வாய்ப்பு நாளை மைத்ர முகூர்த்தம்

கடன் தொல்லை தீர ஒரு அரிய வாய்ப்பு
நாளை மைத்ர முகூர்த்தம் 29.9.14 திங்கள்
காலை 9.44 முதல் 11.44 வரை;


ஜோதிடத்தில் மைத்ர முகூர்த்தம் என்று ஒரு குறிப்பிட்டநேரம் உண்டு.இந்த நேரத்தில் நீங்கள்
வாங்கியுள்ளகடனில் ஒரு சிறு பகுதியை
(அசலைத் திருப்பி கொடுக்க வேண்டும்.அசலில் 10ல் ஒரு பங்காகக் கூட இருக்கலாம்)
திருப்பித் கொடுக்க வேண்டும்.அப்படி
ஒரு முறை கொடுக்க உங்களது கடன்
பல கோடி ரூபாய்களாக இருந்தால் கூட அது
விரைவில் அடைபட்டு விடும்

உங்கள் தீராத கடன் முழுவதும் விரைவில் தீரும் அதிசயத்தை நீங்கள் கண்கூடாக உணர முடியும்..
இந்த மைத்ர முகூர்த்தம் நேரம் காலப்பிரகாசிகை என்ற புராதன ஜோதிடப்புத்தகத்திலிருந்துகண்டறியப்பட்டு,பரிசோதிக்கப்பட்டு
உலக மக்கள்நலனுக்காக வெளியிடப்படுகிறது.

நாளை 

மைத்ர முகூர்த்தம் 
29.9.14 திங்கள் காலை 9.44 முதல் 11.44 வரை;

(india time) 

malaysia time morning 12.14 to 2.14

No comments:

Post a Comment