நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Wednesday, 10 September 2014


பஞ்ச பூத சிவத்தலங்கள், பஞ்ச லிங்க தலங்கள், பஞ்ச கேதரங்கள், பஞ்ச தாண்டவ தலங்கள் & பஞ்ச சபைகள்



பஞ்ச பூத சிவத்தலங்கள்
மண் (பிருத்திவித்தலம்) – காஞ்சிபுரம், திருவாரூர், (திரு + ஆர் + ஊர் ; ஆர் = மண்)
நீர் (அப்புத்தலம்) -திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில், திருச்சிராப்பள்ளி
தீ (தேயுத்தலம்) – திருவண்ணாமலை
வளி (வாயுத்தலம்)- திருக்காளத்தி
வான் (ஆகாயத்தலம்)- சிதம்பரம்
பஞ்ச லிங்க தலங்கள்
அர்கேசுவரர் லிங்கத்தலம்
பாதாளேசுவரர் லிங்கத்தலம்
மரனேசுவரர் லிங்கத்தலம்
மல்லிகார்ச்சுனர் லிங்கத்தலம்
வைத்தியநாதேசுவரர் லிங்கத்தலம்
பஞ்ச கேதரங்கள்
கேதார்நாத் – உடல்
துங்கநாத் – புஜம்
ருத்ரநாத் – முகம்
மத்மஹேஷ்வர் – தொப்புள்
கபிலேஷ்வர் – தலைமுடி
பஞ்ச தாண்டவ தலங்கள்
தில்லை(சிதம்பரம்)-ஆனந்த தாண்டவம்.
திருவாரூர்-அசபா தாண்டவம்.
மதுரை-ஞானசுந்தர தாண்டவம்.
அவிநாசி-ஊர்த்தவ தாண்டவம்.
திருமுருகன்பூண்டி-பிரம தாண்டவம்.
பஞ்ச சபைகள்
தில்லை(சிதம்பரம்)-பொன் மன்றம் (கனக சபை).
திருவாலங்காடு -மணி மன்றம் (இரத்தின சபை).
மதுரை-வெள்ளி மன்றம் (இரஜத சபை).
திருநெல்வேலி-செப்பு மன்றம் (தாமிர சபை).
திருக்குற்றாலம்-ஓவிய மன்றம் (சித்திர சபை).
முக்தி தரவல்ல சிவத்தலங்கள்
திருவாரூர்-பிறக்க முக்தி தருவது
சிதம்பரம்-தரிசிக்க முக்தி தருவது
திருவண்ணாமலை-நினைக்க முக்தி தருவது
காசி-இறக்க முக்தி தருவது

No comments:

Post a Comment