நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Thursday, 11 September 2014

கையில் சித்த மருத்துவக் குடுவையுடன் காட்சியளிக்கும் அகத்தியர்

கையில் சித்த மருத்துவக் குடுவையுடன் காட்சியளிக்கும் அகத்தியர்

Photo: கையில் சித்த மருத்துவக் குடுவையுடன் காட்சியளிக்கும் அகத்தியர்

தஞ்சை மாவட்டம், திருவையாறில் உள்ள ஒத்தத்தெருவில் அகத்தியருக்கு தனிக் கோயில் உள்ளது. அகத்தியரோடு அவருடைய மனைவி லோபா முத்திரையும் இணைந்து அருள் பாலிக்கின்றனர்.  மூலவர் கருங்கல் விக்ரஹமாக நின்ற கோலத்தில் வீற்றிருக்கிறார்.

அகத்தியர்தான் காவிரியை மீட்டுத் தந்ததாக வரலாறு. சித்த வைத்தியத்திற்கும் இவரே தலைவர். அகத்தியரை வழிபட்டால் தீராத நோயும் தீரும். இதை மெய்ப்பிக்கும் வகையில் இக்கோயிலிலுள்ள அகத்தியர், கையில் சித்த மருத்துவக் குடுவையுடன் காட்சியளிப்பது சிறப்பு. உற்ஸவ மூர்த்தியும் இக்கோவிலில் உள்ளது.

தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் அகத்தியருக்கு அபிஷேகம் செய்கின்றனர். அந்த நீரைப் பருகுபவர்களுக்கு நோய் தீரும் என்பது நம்பிக்கை. வியாழன் மற்றும் பௌர்ணமி தினங்களில் இந்த அபிஷேங்கள் நடக்கின்றன.

இக்கோவிலை பற்றி மேலும் தகவல்கள் அறிய விரும்பினால் 94428 88281 என்ற தொலைபேசி எண்னை தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment