இன்று 17.09.2014 விஸ்வகர்மா ஜெயந்தி
விஸ்வகர்மா 27 லட்சத்து 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சுயம்புவாக அவதரித்தார் என்றும், அவரே படைப்பிற்கு மூல காரணமாக அமைந்தார் என்றும் நம்பப்படுகிறது. ஐந்து முகங்களுடனும், முகத்திற்கு மூன்று கண்கள் வீதம் 15 கண்களுடனும், 10 கைகளுடனும் விஸ்வகர்மா காட்சியளிக்கிறார். ஐந்து முகங்களும் பச்சை, மஞ்சள், கறுப்பு, நீலம் என ஐந்து நிறங்களில் காட்சியளிக்கிறார்.மஞ்சள் ஆடையில் மலர் மாலை, ருத்ராட்ச மாலை, புலித்தோல், நாகம் போன்றவற்றை அணிந்து கைகளில் ஜெபமாலை, சூலம், தாமரை, வீணை, டமாரம், அம்பு, சங்கு, சக்கரம் போன்றவற்றை தாங்கி கருணா மூர்த்தியாக அவர் காட்சியளிக்கிறார்.பஞ்ச கோத்திரங்களும், பஞ்ச கோத்திர சிற்பிகளான மனு,மயன், த்வாஸ்டா, சில்பி, விஸ்வக்ஞா ஆகியோர் விஸ்வகர்மாவின் முகத்தில் இருந்து தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன. தேவர்கள் பயன்படுத்திய புஷ்பக விமானம், வருணன் தண்ணீருக்கு அடியில் அமைத்துள்ள அழகான மாளிகை, ராவணனின் இலங்காபுரி அரண்மனை போன்றவை விஸ்வகர்மாவால் உருவாக்கப்பட்டவை என்று கருதப்படுகிறது.
மேலும் நீர், நெருப்பு, காற்று, பிரம்மன், விஷ்ணு, சிவன், இந்திரர் ஆகிய தேவர்கள், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் என்று எதுவுமே இல்லாமல் இருந்த போது ஒளி ஒன்றே பிரகாசித்தது. அந்த ஒளியில் இருந்து "ஓம்' என்ற பிரணவம் தோன்றியது. அந்த பிரணவத்தில் 10 வித நாதங்கள் காணப்பட்டன. அதில் 5 முகங்களில் விஸ்வகர்மா தோன்றினார். சத்யோஜாதம் என்ற முகத்தில் இருந்து மனு பிரம்மாவால் ரிக் வேதமும், வாமதேவ முகத்தில் இருந்து தோன்றிய மய பிரம்மாவால் யஜூர் வேதமும், அகோர முகத்தில் இருந்து தோன்றிய த்வாஸ்டா பிரம்மாவால் சாம வேதமும், தத் புருஷம் என்ற முகத்தில் தோன்றிய சிற்ப பிரம்மாவால் அதர்வண வேதமும், ஈசான்யம் என்ற முகத்தில் இருந்து தோன்றிய விஸ்வஞ் பிரம்மாவால் பிரணவ வேதமும் தோன்றியதாக நம்பப்படுகிறது. இவர்களின் சந்ததியினரே இரும்பு, மரம், உலோகம், சிற்பம், தங்க வேலைகளை செய்து வருகின்றனர் என்பது நம்பிக்கையாகும், விஸ்வகர்மாவின் அவதார தினத்தை ஆண்டுதோறும் விஸ்வகர்ம ஜெயந்தி விழாவை கொண்டாடி வருகின்றனர்.
இதைமுன்னிட்டு காலை 7 மணிக்கு சிறப்பு ஹோமமும், 9 மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனையும், 10 மணிக்கு பஞ்சவர்ண ரக்ஷை(கயிறு) கட்டும் நிகழ்ச்சியும், 11 மணிக்கு மக்களின் நலன் விரும்பும் குடும்ப நலஷேம அர்ச்சனையும் நடந்தது. மாலையில் சுப்பிரமணியன் குழுவினரின் நாதஸ்வர இன்னிசை கச்சேரி நடந்தது.தொடர்ந்து இரவு 7 மணிக்கு விஸ்வகர்ம சுவாமியின் சப்பர வீதியுலா நட்நதது. இதில் பரசமய கோளரிநாத ஆதீன ஸ்ரீகார்யம் சிவராஜ சுவாமிகள் அருளாசி வழங்கினார்.இதனையடுத்து விஸ்வகர்ம ஜெயந்தி குழு சார்பில் கல்வி ஊக்க தொகை வழங்கும் நிகழ்ச்சியும், இரவு 8.30 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை விஸ்வகர்ம ஜெயந்தி விழாக் குழுவினர் செய்திருந்தனர்

No comments:
Post a Comment