நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Sunday, 7 September 2014

ஸ்ரீ கார்த்தவீர்யன் மந்திரம்

ஸ்ரீ கார்த்தவீர்யன் மந்திரம்





க்ருத யுகத்தில் உலகம் நன்முறையில் இயங்க மஹாவிஷ்ணுவின் அம்சமாக ஸ்ரீ கார்த்தவீர்யன் அரசராக அவதரித்தார் இவர் ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனன் என்றும் அழைக்கப்படுகிறார்.இவர் முதலில் ஸ்ரீ அத்ரி முனிவரிடம் சகல வித்தைகளையும் கற்றார்.பின்னர் ஸ்ரீ அத்ரி முனிவரின் புதல்வரும் அவதூத சத்குருவுமான ஸ்ரீ தத்தாத்ரேயரை வழிபட்டு

1.விரும்பிய போதெல்லாம் ஆயிரம் கைகள் வரும் வரம்.

2.இவரது ராஜ்யத்தில் யாராவது அதர்மம் செய்ய நினைத்தால் அவர்கள் பயமடைந்து அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிடும் வரம்.

3.எல்லா உலகங்களையும் வென்று அரசாளும் வரம்.

4.இவரை யுத்தத்தில் எதிர்ப்பவர்களை விட இவரிடத்தில் அதிகமான சேனை வீரர்கள் உருவாகும் வரம். 

இந்த நான்கு வரங்களைப் பெற்று அவரது சீடர்களுள் ஒருவராகவும் விளங்கினார்.


ராவணனை விடப் பலம் பொருந்தியவர். ஒரு சமயம் ராவணணைக் கட்டி இழுத்துச் சிறைப் பிடித்தார் பின்னர் ராவணனின் தந்தையின் வேண்டுகோளுக்கு இணங்கி அவனை விடிதலை செய்தார்.

இவரை வழிபடுபவர்களுக்கும், இவர் சரிதத்தைப் படிப்பவர்கள், கேட்பவர்கள் யாவருக்கும் பெரும் நன்மை உண்டாகும்.

இவரது மந்திரம் காணாமல் போன நபர் அல்லது பொருள் திரும்பக் கிடைக்க,இழந்த செல்வ நிலையைத் திரும்பப் பெற , அடகு வைத்த நிலம், நகையை விரைவில் மீட்ட,கடன் தீர போன்ற நன்மைகளை நிறைவாய் அருள வல்லது.

தொலைந்து போன நபர்  அல்லது பொருள் திரும்பக் கிடைக்க,

ஓம் ஆம் ஹ்ரீம் க்ரோம் கார்த்த வீர்யார்ஜுனாய நமஹ |
ஓம் கார்த்த வீர்யார்ஜுனோ நாம| 
ராஜ சஹஸ்த்ரபாஹுகம் ||
யஸ்ய ஸ்மரண மாத்ரேன||
(........... )கதம் நஷ்டம் சலப்யதே  || 


கதம் என்ற சொல்லின் முன்னால் காணாமல் போன நபர் அல்லது பொருளின் பெயர் சேர்த்து ஜெபிக்க வேண்டும்.

இழந்த செல்வ நிலையைத் திரும்பபெற,அடகுவைத்த நிலம், நகையை விரைவில் மீட்ட  கீழ்க்கண்ட இரண்டு மந்திரத்தில் ஏதேனும் ஒன்றை ஜெபித்து வரலாம்.:-

மந்திரம் 1.

ஓம் ஆம் ஹ்ரீம் க்ரோம் கார்த்த வீர்யார்ஜுனாய நமஹ |
கார்த்த வீர்யார்ஜுனோ நாம ராஜ பாஹு சஹஸ்த்ரவான்|
தஸ்ய ஸ்மரநாத் தேவ ஹ்ருதம் நஷ்டம் ச லப்யதே  ||

மந்திரம் 2.

க்ருத வீர்ய சுதோ ராஜா சஹஸ்ர புஜமண்டலஹ |
அவதாரோ ஹரே சாக்ஷாத் பாவயேத் சகலம் மம|
கார்த்த வீர்யார்ஜுனோ நாம ராஜ பாஹு சஹஸ்த்ரவான்|
தஸ்ய ஸ்மரன மாத்ரேன நஷ்டத்ரவ்யம் ச லப்யதே  ||



இதில் தேவையான மந்திரத்தை உங்களுக்கு படுபக்ஷி இல்லாத நாளில் அரசு அல்லது ஊண் காலத்தில் ஜெபம் செய்ய ஆரம்பித்து 1008 உரு குறைந்தது 7 நாட்கள் ஜெபிக்கவும். 
  
செவ்வாய் அல்லது புதன்கிழமைகளில் இவரை வழிபடச் சிறப்பு.

மந்திர சாஸ்திரத்தில் இவரது மந்திரஜபம் கொண்டு சத்ருஜெயம், நேர்மையான காரியங்களில் வெற்றி பெற எனப்  பலவிதமான  பிரயோக முறைகள் உள்ளன.தவறாகப் பயன்படுத்தக்கூடும் என்று அஞ்சி வெளியிடவில்லை.

இவரது யந்திரத்தை வெள்ளி அல்லது தாமிரத்தகட்டில் வரைந்து முன்னால் வைத்து மந்திரம் ஜெபிக்க விரைவான பலன் கிடைக்கும்.

யந்திரம் தேவைக்கு மேலும் விளக்கங்களுக்கு கீழ்க்கண்ட மொபைல் எண்ணில் தொடர்பு கொள்க 



மேலும் விபரங்களுக்கு:-

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072

No comments:

Post a Comment