நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Saturday, 13 September 2014

திதி


திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தொலைவு தான். அமாவாசை அன்று சூரியனும் சந்திரனும் சேர்ந்து இருப்பார்கள். தினமும் சூரியனைவிட்டு சந்திரன் 12டிகிரி விலகிசென்றுகொண்டிருக்கும். பௌர்ணமி அன்று சந்திரன் சூரியனலில் இருந்து 180 டிகிரி தூரத்தில் இருக்கும். அமாவாசையில் இருந்து பௌர்ணமி முடிய 15 நாட்கள் பௌர்ணமியில் இருந்து அம்மாவாசை முடிய 15 நாட்கள் ஆக மொத்தம் 30 நாட்கள்.
அமாவாசைக்கு அடுத்த நாள் பெயர் பிரதமை அதற்கு அடுத்த நாள் துதியை மூன்றாம் நாள் திருதியை 4 ஆம் நாள் சதுர்த்தி 5 ஆம் நாள் பஞ்சமி 6 ஆம் நாள் சஷ்டி 7 ஆம் நாள் சப்தமி 8 ஆம் நாள் அஷ்டமி 9 ஆம் நாள் நவமி 10 ஆம் நாள் தசமி 11 ஆம் நாள் ஏகாதசி 12 ஆம் நாள் துவாதசி 13 ஆம் நாள் திரியோதசி 14 ஆம் நாள் சதுர்தசி 15 ஆம் நாள் பௌர்ணமி இவ்வாறு பெயர் வைத்து அழைப்பார்கள்.
சந்திரன் அமாவாசையில் இருந்து சிறிது சிறிதாக வளர்வதால் எல்லா திதிகளும் வளர்பிறை திதிகள் எனப்படும். இந்த வளர்பிறை திதிகளை சுக்கில பட்ஷ திதிகள் என அழைக்கிறார்கள். இவை அனைத்தும் நல்ல திதிகள் ஆகும். பௌர்ணமியில் இருந்து வரும் திதிகளை கிருஷ்ணபட்ச திதிகள் அதாவது தேய்பிறை திதிகள் எனப்படும்.

சுபகாரியங்கள் செய்ய ஆகாத திதிகள் பிரதமை
, சஷ்டி, ஏகாதசி, துவிதியை,சப்தமி,துவாதசி ஆகிய திதிகளில் சுபகாரியங்கள் செய்ய ஆகாது. அஷ்டமி திதியும் கெட்ட திதி என்று கூறுகிறார்கள். அந்த திதியிலும் நல்ல் காரியங்கள் செய்யலாம். ஆனால் வியாழகிழமை வரும் அஷ்டமியில் மட்டும் செய்யக்கூடாது.

No comments:

Post a Comment