நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Tuesday, 9 September 2014

பஞ்ச பக்ஷி சாஸ்திரம்

பஞ்ச பக்ஷி சாஸ்திரம் பற்றி நாம் அனைவரும் ஒரு சில மேம்போக்கான விஷயங்களை கேள்விப்பட்டிருக்கிறோம். சூஷ்மம் நிறைய இருக்கு. அதில் ஒன்று தான் நான் சொல்ல ஆசைபடுகிறேன். பஞ்சாங்கம்,பஞ்சகம்,பஞ்சபக்ஷி, இவை அனைத்துமே இயற்கையின் வடிவமான, நீர்,நிலம்,காற்று,ஆகாயம்,நெருப்பு , தத்துவங்கள் சம்பந்தப்பட்டவை ஆகும். ஒன்றுக்கொன்று தொடர்புடையது.இதில்,அக்னி எப்போதும் மேல்நோக்கியே போகும் தன்மை உடையது,நீர் எப்போதும் கீழ்நோக்கியே போகக்கூடிய தன்மை உடையது. நாம் கொடுப்பதையெல்லாம் அக்னி பகவான் கடவுளுக்கு கொண்டு செல்கிறார். பகவான் நமக்கு அருள நீர் ரூபத்தில் பூமிக்கு அனுப்புகிறார்.இரண்டையும் சம்பந்தப்படுத்துவது, பூமியும், ஆகாயமும்.காற்று இவை அனைத்தையும் ஒன்று சேர்கிறது(pressure). நாம் இயற்கையை வணங்குகிறோம்.பல வடிவங்களில். அப்போது, பஞ்ச பட்சியையும் வணங்குகிறோம்.இதில் வல்லூறு , ஆந்தை,காக்கை,மயில், கோழி , இந்த ஐந்தும், வளர்பிறை, தேய்பிறை இரண்டிலும் தனது குணத்தை அஹர்க்கு தக்க, அந்த ஜாதகனுக்கு கொடுக்கிறது. இதில் ஒரு பக்ஷி நல்லதையும், அடுத்தது கெடுதலையும் செய்கின்றபடியாகவே அமைந்துள்ளது.மேல்படி நாம் வணங்கவேண்டிய இடத்தில் இவை ஐந்தும் உள்ளபடியால்,இவைகளுக்கு தனி அந்தஸ்து இருக்கிறது. இதில் மயில், முருகப்பெருமானுக்கு வாகனமாகவும் ,காக்கை சனீஸ்வர பெருமானுக்கு வாகனமாகவும் அமைந்துவிட்டது.சேவல் கொடியாக ஆகிவிட்டது. அப்படி இருக்கிற இடத்தில், நமக்கு தோஷத்தை ஏற்படுத்தும் வகையில்,கோழி இருக்கிறபடியால், தயவுசைது, யாரும் எப்போதும், அதுவும் குறிப்பாக, ஜோதிடம் சொல்லுபவர்கள், இதை சாப்பிடலாகாது. இது ஒரு மறைமுக தோஷம்.ஐந்தில், இது ஒன்றைத்தான் மனிதன் உன்னுகின்றான். இதற்க்கு பெயர் பக்ஷி தோஷம் - படு பக்ஷி ஆகும். இதை நிறுத்தினால் நமக்கு வியாதி வராது. இல்லையென்றால் கண்டகண்ட பெயர்களில் புதிது புதிதாக வந்துகொண்டேதான் இருக்கும்.. ஆகையால்தான் காக்கைக்கு அன்னம் தினமும் படைக்க சொன்னார்கள்

No comments:

Post a Comment