நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Sunday, 7 September 2014

திருமணத்தடை நீங்க ,விரைவில் திருமணம் நடைபெற ,நல்ல குணமுடைய கணவன் அமையப் பெண்கள் ஜெபிக்க வேண்டிய மந்திரங்கள் :-


திருமணத்தடை நீங்க ,விரைவில் திருமணம் நடைபெற ,நல்ல குணமுடைய கணவன் அமையப் பெண்கள் ஜெபிக்க வேண்டிய மந்திரங்கள் :-

1. ஓம் |
    காத்யாயனி மஹாமாயே |
    மகாயோகின்யதீச்வரி |
    நந்தகோபசுதம் தேவீ  |
    பதிம் மே குருதே நமஹ ||


ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமை தொடங்கித் தினமும் மேற்கு நோக்கி அமர்ந்து ,தாமரைத்தண்டுத் திரியினால்  விளக்கேற்றி மந்திரத்தைக் குறைந்தது 27 எண்ணிக்கையிலும் அதிகமாக எவ்வளவு வேண்டுமானாலும் ஜெபித்து வர விரைவில் திருமணமாகும்.


2. துர்கா மந்த்ரம் :-

ஓம்|ஞானினாமபி சேதாம்சி தேவி பகவதி ஹிஸா |
    பலாதாக்ருஷ்ய மோஹாய மஹாமாயா பிரயச்சதிஹி || 

ஒரு வளர்பிறை செவ்வாய்க்கிழமை தொடங்கித் தினமும் மேற்கு நோக்கி அமர்ந்து ,தாமரைத்தண்டுத் திரியினால்  விளக்கேற்றி,  இம்மந்திரத்தைக் குறைந்தது 27 எண்ணிக்கையிலும் அதிகமாக எவ்வளவு வேண்டுமானாலும் ஜெபித்து வர விரைவில் திருமணமாகும்.

3.ஜாதகப்படி தாமதத் திருமண அமைப்புள்ளவர்கள் இந்த மந்திரம் ஜெபித்து வர விரைவில் திருமணம் நிகழும்.  


ஓம் |
ஹ்ரீம் ஸ்ரீம் த்ராம் த்ரீம் க்லீம் க்லூம்  ஜம் ஜம் |
வனாக்யே காமேச்வரி வனதேவதே ஸ்வாஹா||

4.திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணமாகக் கீழ்க்கண்ட   மந்திரங்களில் ஒன்றைத் தினமும் 108 முறை கிழக்கு அல்லது மேற்கு முகமாக அமர்ந்து ஜெபித்து வரவும்.

ஸ்ரீ கணேஷ மந்திரம் :-

ஓம் |ஸ்ரீகணேஷம் விக்னேஷம் விவாஹார்த்ததே நமஹா ||

வேத மந்திரம்:-

ஓம் யக்ஞோ பவித்ரம் சஹஜம் ரஹத் பிரஜாபதி ஸ்வாஹா ||


5.லக்னம் அல்லது ராசிக்கு 7 ல் சனி,ராகு,கேது கிரகங்கள் அமையப்பெற்றவர்கள் சிவாலயத்தில் உள்ள காலபைரவர் முன் அமர்ந்து "ஓம் ஹ்ரீம் வம் காலபைரவாய நமஹா " என்ற மந்திரத்தை 108 தடவை ஜெபித்து வரவும் மேலும் தேய்பிறை அஷ்டமி அன்று தயிர்சாதம் நிவேதனமும் செய்துவர தோஷத்தால் தடைபட்ட விவாஹம் விரைவில் நிகழும்.


6.அம்மன் குங்கும பரிகாரம்:-

பேரம் பேசாமல் குங்குமம் வாங்கி செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை அன்று அம்மன் ஆலயம் சென்று அந்தக் குங்குமத்தை அம்மன் காலடியில்
வைத்து உங்கள் பெயருக்கு விரைவில் திருமணமாக வேண்டும் என்று அர்ச்சனை செய்து அந்தக் குங்குமத்தை அம்மன் பிரசாதமாக வாங்கி வீட்டில் விளக்கு முன் வைத்து கொள்ளவும்.தினமும் குளித்து முடித்ததும் கிழக்கு முகமாய் நின்று அந்தக் குங்குமத்தை வலது கை மோதிர மற்றும் பெருவிரலால் எடுத்து "ஓம் ஹ்ரீம் சிவப்ரியாயை நம" என்று 3 தடவை ஜெபித்துக் குங்குமம் இட்டுக் கொள்ளவும்.விரைவில் திருமணம் நடக்க ஏதுவான சமயம் வாய்க்கும்.

No comments:

Post a Comment