கால சர்ப்ப தோஷத்திர்க்கு சிறந்த பரிகாரம்
ஒரு ஜாதகத்தில் ராகு & கேது இருக்கும் இடங்களுக்குள் உள்ள ஏழு ராசிகளுக்குள் மற்ற ஏழு கிரகங்களும் இருந்து மீதி ஐந்து ராசிகள் காலியாக இருக்கும் நிலைதான் கால சர்ப்ப தோஷம் ஆகும்! இது 32 வயது வரை மிக வீரியமாகவும் பின்பு சிறிது மட்டுப்பட்டும் இருக்கும். அனுபவித்தவர்களுக்கு அனுபவிப்பவர்களுக்கு தான் தெரியும் இந்த தோஷத்தின் கொடுமை !
இங்கே கொடுக்ககப்படுபவை மிகவும் சக்தி வாய்ந்த அதே சமயம் செலவில்லாத எளிய பரிகாரங்கள். முயன்று பாருங்கள்.
(1) தினமும் இரும்பால் செய்த பாத்திரத்தில் சிறிது பாலுடன் சேர்த்த தண்ணீரை அரச மரத்திற்க்கு விட்டு வழிபட்டு வர வேண்டும்.
(2) தினசரி மஹா மிருத்யுஞ்சய மந்திர பாராயணம் மிகுந்த பலன் கொடுக்கும்
(3) அமாவாசை அன்று மூன்று தேங்காய்களையும் சிறிதளவு நிலக்கரி துண்டுகளையும் எடுத்து கொண்டு ஓடும் நதி அல்லது நீர் நிலைகளில் ஒன்றன் பின் ஒன்றாக தேங்காயை எறிந்து பின்பு கரித்துண்டுகளையும் எறிந்து திரும்பி பார்க்காமல் வீடு வந்து சேர வேண்டும். பின்பு குளிக்கலாம். இது தோஷத்தின் கடுமையை குறைக்கும்.
--நன்றி ஸ்ரீ விஸ்வ ஆன்மிகம்
No comments:
Post a Comment