நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Sunday, 7 September 2014

காரிய சித்திக்கான ஸ்ரீ ஹனுமான் மந்திரங்கள்



1.ஆரோக்யமான வலிமையான உடலைப் பெற

ஓம் நமோ ஹனுமதே ருத்ராவதாராய | வஜ்ர தேஹாய |வஜ்ர நகாய |வஜ்ர முஹாய| வஜ்ர ரோம்னே |வஜ்ர நேத்ராய|வஜ்ர தந்தாய |வஜ்ர கராய| வஜ்ர பக்தாய|ராம தூதாய ஸ்வாஹா||

2.எதிரிகள் நோய்கள் தீர

ஓம் நமோ ஹனுமதே ருத்ராவதாராய | சர்வ சத்ரு சம்ஹரணாய| சர்வ ரோகஹராய |சர்வ வசீகரணாய| ராம தூதாய ஸ்வாஹா||

3.மந்திர மாந்திரீகம் ,எதிரிகள்,த்ருஷ்டி,வியாதி ,பயம் நீங்க ,காரியன் சித்திக்க


ஓம் நமோ ஹனுமதே ருத்ராவதாராய | சர்வ யந்த்ர மந்த்ர தந்த்ர த்ராடக நாசகாய | சர்வ ஜ்வரச் சேதகாய|சர்வ வ்யாதி நிக்ருந்தகாய |சர்வ பய ப்ரசமனாய |சர்வ துஷ்ட முக ஸ்தம்பனாய|சர்வ கார்ய சித்திப்ரதாய | ராம தூதாய ஸ்வாஹா||

4. துர்தேவதைகளின் உபத்ரவம் நீங்க 

ஓம் நமோ ஹனுமதே ருத்ராவதாராய |தேவ தானவ யக்ஷ ராக்ஷஸ| பூத பிரேத பிசாச |டாகினி சாகினி துஷ்ட க்ரஹ பந்தனாய | ராம தூதாய ஸ்வாஹா||

இந்த மந்திரத்தைச் செவ்வாய்க்கிழமை அன்று 1008 தடவை ஜெபித்து அந்த நீரை வீட்டில் தெற்குத் திசை தொடங்கி கடிகாரச் சுற்றில்,தென்மேற்கு,மேற்கு , ,வடமேற்கு ,வடக்கு,வடகிழக்கு,கிழக்கு ,தென்கிழக்கு என 8 திசைகளிலும் தெளித்து பின்னர் வீட்டின் தலை வாயிலிலும்  தெளித்து அதன் பின்னர் வீட்டில் உள்ளோர் யாவரின் மீதும் தெளித்துக் கொள்ள துஷ்ட சக்திகளின் உபத்ரவம் நீங்கும்.  

செவ்வாய்க்கிழமை அல்லது வியாழக்கிழமை அன்று வெற்றிலை, பாக்கு, கொய்யாப்பழம்,பழங்கள் ,வைத்துத் தேவையான மந்திரத்தை 108 வீதம் வேண்டிய காரியம் நிறைவேறும் வரை ஜெபித்து வரவும். 

தீய சக்திகளால் பாதிப்பு ஏற்படாமல் இருக்கப் புற்று மண்ணில் உருவேற்றி பூஜிக்கப்பட்ட ஸ்ரீ ஹனுமான் ,பூஜிக்கப்பட்ட யந்திரம், ரக்ஷை, குங்கும பிரசாதம் தேவைக்கு தொடர்பு கொள்க

1 comment: