நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Sunday, 20 April 2014

ஒளி மயமான பாதை


முனிவர்கள் மாய வித்தைகள் பல செய்ய வல்லவர்கள்’ என்ற நம்பிக்கையில், இரவில் காட்டைக்கடக்க , ‘’தான் போகும் பாதையெல்லாம் ஒளிமயமாக வேண்டும் ‘’என்ற வரத்தினை கேட்டார் ஒருவர்.
 
அதாவதுமுனிவர் மாய வித்தைகளை பயன்படுத்தி தெரு விளக்குகள் போல் எதையாவது பாதையெங்கும்உருவாக்கி ஒளிமயமாக்குவார் என எதிர்பார்த்தார்.
ஆனால் முனிவரோஒரு லாந்தர் விளக்கை அவரிடம் கொடுத்து எடுத்துச் செல்லச் சொன்னார்ஏதோமாயமந்திரம் செய்து தன் பாதையை ஒளிமயமாக்குவார் என்று பார்த்தால் இந்த விளக்கைக் கொடுக்கிறாரேஇதுபத்து அடிக்கு தானே வெளிச்சம் கொடுக்கும் என்ற சந்தேக்த்தை முனிவரிடம் கேட்டே விட்டார்
முனிவர், “அப்பனேநான் மாயம் செய்து உன் பாதையை ஒளிமயமாக்கக முடியும்ஆனால் அதனால் உனக்குஒன்றும் பயனில்லைஎப்படியும் உன்னால் அடுத்த பத்து அடியைத்தான் பார்க்க முடியும்இந்த விளக்கைப்பயன்படுத்தி உன் முன் உள்ள பத்து அடிகளைக் கடந்தால் அடுத்த பத்து அடிகளுக்கு உனக்கு வெளிச்சம்கிடைக்கும்அப்படியே நீ காட்டைக் கடந்து நீ செல்ல வேண்டிய இடத்திற்கு நாளை காலை தவறாமல்சென்றடைவாய்” என்றார்.
நம்மில் பலரும் இது போலத்தான்எதிர்காலத்தைப் பற்றியே சிந்தனைநம் முன் உள்ள நிகழ்காலத்தை விட்டுவிட்டு அறியாத எதிர்காலத்திற்கே நம் சிந்தனைகளை செலவு செய்து திட்டமிட்டு வருகிறோம்கடவுளிடமும்சென்று கும்பிட்டு நம் எதிர்காலத்தை ‘insure’ செய்ய முயல்கிறோம்
நம் கண் முன் உள்ளதைநம்மால் அறிய முடிவதை மறந்து விட்டு காணாதஅறியாத ஒன்றைப் பற்றி கற்பனைசெய்து கனவு கண்டுகொண்டோகவலைப்பட்டுக் கொண்டோ இருந்தால் எங்கும் செல்ல முடியாதுஇன்றுநாம் செய்ய வேண்டியதில் கவனம் செலுத்தி சரியாகச் செய்து ஒவ்வொரு நாளும் இவ்வாறே அன்றன்று செய்யவேண்டிவற்றை அன்றன்று சிறப்பாகச் செய்து ,வாழ்க்கைப் பயணத்தை அனுபவித்தால் தான் அடையவேண்டிய இலக்கை அடைய முடியும்

No comments:

Post a Comment