நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Tuesday, 22 April 2014

எல்லாம் விதிப்படி தான் நடக்கும் என்றால் கடவுள் எதற்க்கு பரிகாரங்கள் என பலரிடம் இருக்கும் கேள்வி ?
இதற்க்கு ஓரு எளிய விளக்கம்
2 நபர்க்கு
ராம்,ராஜாக்கு
விதிப்படி காலில் அடிப்படும் என இருந்து.
இதை அறிந்துக்கொண்ட இருவரில்
ராம் அவர் விதிப்படி நடக்கும் என இருந்தார்.
ஆனால் ராஜா பல கோவில்களிலில் சென்று இறைவனை வேண்டினார்.
இறுதியில் விதிபயன் நிறைவேறும் நாள் வந்தது.
ராம் அவர்களுக்கு வாகனத்தில் சொல்லும்போது அடிப்பட்டு எலும்பு முறிந்தது.
ராஜா அவர்களுக்கு அடிப்பட்டது ஆனால் வேண்டுதல் பலனாக சிறிய சிராய்ப்புகள் மட்டுமே.
ஆகவே விதிபயன் என்பது போன ஜென்ம கர்மக்கள் மட்டுமே
அதனை மாற்ற இறைவன் மட்டும் பரிகாரம் உள்ளது.
பரிகாரங்களை அதன் உட்பொருளை அறிந்து செய்தல் நல்லபலனை காணலாம்.
உண்மையான பரிகாரங்களை முறையாக செய்தால் விதி பயனில் இருந்து 60%வெளியேறலாம்.
பரம்பொருளை சரன் அடைந்த எல்லா விதிபயனை மறைந்து போகும்
ஓம் நமசிவாய
ஓம் நமோ நாரயணா நய:

No comments:

Post a Comment