நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Sunday, 27 April 2014

ஆன்மீக வாழ்வு குரு வாழ்க குருவே துணை மந்திர ஜபம்:-



காலகாலமாக உலகெங்கிலும் உள்ள மக்கள் யாவரும் தமக்கு பிரியமான வழியில் இறைவழிபாடு செய்து வருகின்றனர்.இங்கு நான் உங்களுடன் பகிரவிருப்பது இந்து சமய தெய்வ வழிபாட்டுமுறை பற்றி.

இந்து சமயம் பல நூற்றாண்டுகள் கடந்தும் உயிர்ப்புடன் இருந்து வருகின்றது.அவ்வப்போது அது தன் வீரியத்தை இழக்கும் போதும்,வேற்று சமயத்தவரால் தொல்
லைகள் வந்த போதும் அதனை எதிர்கொண்டு மீண்டு வந்தவண்ணம் இருக்கிறது.மற்ற எந்த சமயத்தைக் காட்டிலும் பல்லாயிரம் ஞானியரை,சித்தமஹா புருஷர்களையும்,இறை அவதாரங்களையும் காலந்தோறும் தொடர்ந்து தோற்றுவிக்கும் இறை கற்பகவிருட்சம் இந்து தர்மம் .

ரிஷிகள் ,முனிவர்கள் ,சித்தர்கள்,ஞானியர் இவர்களே இறைவன் எனும் கடலில் சிறிதேனும் நீந்தியவர்கள் அந்த கடல் நீரை பருகியவர்கள்.நம்மை போன்ற சாதாரண மனிதர்கள் அந்த கடலை தள்ளி நின்று வேடிக்கை பார்த்து ஆச்சர்யப்பட்டு நிற்பவர்கள்.நமது ஞானப்பெருமக்கள் அவர்கள் கண்ட ஆன்மானுபவத்தை நாமும் காண வழிவகைகளைக் கூறிச் சென்றுள்ளார்கள்.
அதை வைராக்யத்துடன் தொடர்ந்து அப்யாசித்தால் நாமும் இறைவனை அடையலாம்.

ரிஷி என்ற வார்த்தையின் பொருள் ''மந்திர த்ரஷ்டா '' அதாவது மந்திரங்களை நேரில் கண்டவர்கள் என்று அர்த்தம்.மந்திரங்கள் பிரபஞ்சத்தில் காலாகாலத்திற்கும் சாஸ்வதமாக இருப்பவை.ரிஷிகளும் சித்தர்களும் தமது மனம் கடந்த நிலையில் இறைக்கருணையால் அதை உணர்ந்தவர்கள்.

எந்த மனிதனும் யாருக்கும் பணிந்து வாழ ஆசைப்படுவதில்லை அடிமையும் கூட.அப்படியிருக்க நாம் சிறுவயது முதலே இறைவழிபாடு செய்து வருகிறோம்.இத்தனை வருட பக்தியில் ஏதேனும் சொல்லிக் கொள்ளத்தக்க இறையனுபவம் நமக்கு உண்டா என்று நமக்கு நாமே கேள்வி கேட்டுக்கொண்டால் வெட்கமின்றி சொல்வதானால் இல்லை என்பதே பதிலாக இருக்கும்.

வெறுமனே வேண்டுதல்கள் பலிப்பதும் ,செல்வமும் மட்டும் இறைவழிபாட்டின் பயன்களல்ல.படைப்புகளில் எல்லா ஜீவராசியின் வாழ்க்கையும் ஒரு கட்டுப்பாட்டிற்குட்பட்டது.ஆனால் மனிதன் மட்டும் அதற்கு விதிவிலக்காக சிறிது அதிக சுதந்திரம் அளிக்கப்பட்டவன்.ஏனென்றால் எந்த மரமும்,விலங்கும்,பறவையும் இன்ன பிறவும் விரும்பினால் வேறொன்றாக மாறச் சுதந்திரம் அற்றவை .மனிதன் மட்டுமே நல்லவன்,கெட்டவன்,உயர்ந்தவன்,தாழ்ந்தவன்,யோகி,ஞானி,மகான்என தான் விரும்பியபடி வாழவும் ,விரும்பிய யாவையும் முயற்சியால் அடையவும் வல்லவன்.அந்த சாய்ஸ் உடன் படைக்கப்பட்ட நாம் என்னவாக வேண்டுமானாலும் ஆகலாம் கடவுளாய் கூட. 

இன்று நாம் வழிபட்டு வரும் பல தெய்வங்கள் மனிதர்களாய்ப் பிறந்து பின் உயர்ந்த நிலை அடைந்தவர்கள்தான்.அது குறித்து பின்னர் விரிவாய் காண்போம்.

No comments:

Post a Comment