நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Thursday, 24 April 2014

விட்டகுறை தொட்டகுறை என்று கூறுவதன் அர்த்தம் என்ன?



பூர்வ ஜென்மத் தொடர்பையே ‘விட்டகுறை தொட்டகுறை’ என்று கூறுகின்றனர்.

ஒரு சிலர் பெண்களை மையப்படுத்தி இதனைப் பொருள் கொள்கின்றனர். ஒரு பெண்ணைத் தொட்டு விட்டு, அநாதையாக விட்டு விட்டதால் அவருக்குபாவம் ஏற்பட்டு விட்டது என்றும் கூறுகின்றனர். இது தவறான அர்த்தம் கற்பிக்கிறது.

தொட்டு வந்த துறை, விட்டு வந்த துறை என்று கூறுவதே இந்தப் கூற்றுக்கு சரியான அர்த்தமாக அமையும். கடந்த பிறவியில் என்ன கர்ம வினைகள் செய்தோமோ அதற்குத் தகுந்தார் போல் இந்தப் பிறவியில் பலனை (நல்லது/கெட்டது) அனுபவிப்பதையே விட்டகுறை தொட்டகுறை என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.

வாழ்க்கை என்பது தனிப்பிறவி எடுப்பது அல்ல.

பூர்வ ஜென்மத்தில் எந்த இடத்தில் விட்டு வந்தோமோ அதனை மறுபிறவில் வேறு உடலில் இருந்து தொடர்கிறோம் என்பதே விட்டகுறை தொட்டகுறை என்று கூறுவதன் உண்மையான உட்பொருள்.

No comments:

Post a Comment