ஸ்ரீ ராகவ மந்திராலயம் - ஆத்துப்பொள்ளாச்சி
ஸ்ரீ ராகவ மந்திராலயம்
பொள்ளாச்சியில் இருந்து சுமார் 15km தொலைவில் அம்பராம்பளையம் அருகில் ஆத்துபொள்ளாச்சி என்ற ஊரில் உள்ள G.M.தோட்டம் என்ற இடத்தில் தாத்தா சாமிகள் ஜீவசமாதியும், ராகவா சாமிகள் ஜீவசமாதியும் இயற்கை சூழ அமைந்துள்ளது.
(மேலும் விவரங்கள் பின்னர் இணைக்கப்படும்)
| தாத்தா சாமிகள் ஜீவசமாதி |
| ராகவா சாமிகள் ஜீவசமாதி |
| செல்லும் வழியில்... |
| செல்லும் வழியில்... |
| இரு ஜீவசமாதிகள் அமைந்துள்ள இடம் |
| செல்லும் வழியில்... |
| செல்லும் வழியில்... |
| செல்லும் வழியில்... |
Wednesday, June 12, 2013
பழனி மூட்டை சாமிகள்-பக்தரின் அனுபவம்(3)
இறை தரிசனம் கிடைத்தவுடன் குரு தரிசனம்:-
நான் எனது குடும்பத்துடன் 28.05.2013 அன்று மாலை மதுரையில் இருந்து பழனிக்கு என்னுடைய மகனுக்கு முடி காணிக்கை நிறைவேற்றும் வேண்டுதலுக்காக சென்றோம். அன்று இரவு பழனியில் தங்கி விட்டு அடுத்த நாள் (29.05.2013) காலை முடிக்காணிக்கையை அடிவாரத்தில் செலுத்தி விட்டு பின் இறை தரிசனம் காண வேண்டி என் அப்பன் முருகனை நோக்கி மலைக்குச் சென்றோம்.
குமரக் கடவுளின் அற்புதமான தரிசனம் கிடைக்கபெற்று மலையை விட்டு இறங்க மனமில்லாமல் அவனது அருள் உணர்வுடன் அடிவாரம் வந்து சேர்ந்தோம்.
பின்பு அங்கிருந்து பழனியின் ஊர் கோவிலாக கருதப்படும் ஸ்ரீ பெரிய நாயகி அம்மன் கோவிலுக்குச் சென்று அங்கு அம்பிகை மற்றும் சிவபெருமானை தரிசனம் செய்து விட்டு மதுரை நோக்கி பயணம் செய்தோம்.
சுமார் 30 நிமிட பயணத்திற்கு பிறகு எங்கள் டாக்ஸி கணக்கன்பட்டியை அடைந்தது. அங்கு ஒரு ஆம்னி வாகனம் நின்று கொண்டு இருந்தது. எனது டிரைவர் என்னிடம் ஒரு சித்தர் அந்த வண்டியில் உள்ளார். வாருங்கள் தரிசனம் செய்யலாம் என்றார். நாங்கள் எங்களுடைய வண்டியை ஆப் செய்து விட்டு ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு நான், எனது அம்மா, எனது தம்பி மற்றும் டாக்ஸி டிரைவர் நால்வரும் சித்தர் முன் (மிக மிக அருகில்) நின்று அமைதியாக அவரை பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்தோம். சித்தரின் திவ்ய தரிசனம் சுமார் 7 நிமிடங்கள் எங்களுக்கு கிடைத்தது.அது வரை அவர் யார் என்று கூட எங்களுக்கு தெரியாது.
சித்தர் பார்வை 180 டிகிரி சுற்றிக் கொண்டே இருந்தது. எங்கள் நால்வரையும் சித்தர் பார்த்து கொண்டு இருந்தார். பின் எங்களை கடந்து ஒரு பெண்மணி அவரது குழந்தையை தூக்கிக் கொண்டு நடந்துச் சென்று கொண் டு இருந்தார்கள். சித்தரின் பார்வை முழுதும் சுமார் 2 நிமிடம் அக்குழந்தை மேல் இருந்தது. அக்குழந்தை என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டும்!
சித்தர் அவருடைய ஆஷ்ரமம் நோக்கி செல்ல முற்படுகையில் எங்கள் நால்வரையும் சித்தர் பார்த்து போய் விட்டு வா என்றார். நாங்கள் செய்வதறியாது திகைத்து நின்று கொண்டிருந்தோம். பின் மீண்டும் எங்களை பார்த்து புன்முறுவலுடன் போய் விட்டு வா என்றார். நாங்கள் குரு தரிசனம் கிடைக்கபெற்று டாக்ஸியில் வந்து அமர்ந்தோம். சித்தரின் வண்டி வலைவதற்காக டிராபிக்கில் நின்று கொண்டு இருந்தது. நான் உடனே எனது ஒரு வயது குழந்தையை எடுத்து கொண்டு சித்தர் நோக்கி விரைந்தேன்.சித்தர் பார்வை என் குழந்தை மேல் பட்டு என் குழந்தையும் குரு அருள் கிடைக்க பெற்றான். என்னபேறு பெற்றோமோ, அவர் தரிசனம் கிடைக்க பெற! எல்லாம் சிவமயம்! சித்தர்மயம்! .
அதுவரை அந்த சித்தர் யார் என்று எங்களுக்கு தெரியாது.அந்த சித்தருடைய பெயர் பழநி மூட்டை சுவாமிகள் என்று டாக்ஸி டிரைவர் தான் எங்களுக்கு சொன்னார்.மேலும் அவர் அந்த சித்தரை பற்றிச் சொன்ன சம்பவம் எங்களை திக்கு முக்காட வைத்தது. அதனை சித்தரின் அருள் உணர்வுடன் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
ஏப்ரல் 2013, முதல் வாரம் சித்தரும் அவருடைய டிரைவர் இருவர் மட்டும் (சித்தரின் காரில்) இராமேஸ்வரத் தில் இருந்து கணக்கன்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தனர். வரும் வழியில் சித்தரின் கார் பெட்ரோல் இல்லாமல் நின்று விட்டது. சித்தர் என்ன ஆச்சு என்று டிரைவரிடம் கேட்க டிரைவரும் சுவாமி பெட்ரோல் இல்லை கார் நின்று விட்டது என்றார். ஒரு நிமிடம் யோசித்து விட்டு, அவர் குடித்து மீதம் உள்ள குடிநீரை எடுத்து அந்த பெட்ரோல் டாங்கில் டிரைவரிடம் கொடுத்து ஊற்ற சொன்னார். பின் ஒரு ஆறு குடம் தண்ணிரை எடுத்து வர சொல்லி அதனையும் டாங்கில் ஊற்ற சொன்னார். பின் காரைப் பார்த்து ஏ! காரே போ! என்று சித்தர் உத்தரவு இட கார் முழுவதும் சித்தரின் கட்டுப்பாட்டில் வந்தது. டிரைவர் ஸ்டேரிங் மட்டும் பிடித்து கொண்டிருந்தார். கார் பெட்ரோல் இல்லாமலே கணக்கன்பட்டி வந்து சேர்ந்தது.

No comments:
Post a Comment