நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Sunday, 27 April 2014

கணவன் மனைவி ஒற்றுமைக்கு மந்திரம் :-




இன்றைய நாட்களில் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இன்றி கூட்டுக்குடும்பங்கள் குறைந்து கொண்டே வருகின்றன. இருந்தாலும், தனிக்குடித்தனம் இருக்கும் தம்பதிகளிலும் பெரும்பாலும் அன்பும், இணக்கமும் கொண்டு வாழ்பவர்கள் குறைவே.


இதை அதிகாலையில் கிழக்கு முகமாக அமர்ந்து ''ஓம் சௌம் பார்வதி தேவி நமஹ'' என 3 தடவை ஜெபித்து , ''ஓம் க்லீம் ஸ்ரீ ரதி தேவி சமேத ஸ்ரீ காமதேவாய நமஹ'' என 3 
தடவை ஜெபித்து பின்னர் கீழ்க்கண்ட மந்திரங்களைக் குறைந்தது 27 தடவை குங்குமத்தில் ஜெபித்து அணிந்து வர தம்பதிகளிடையே அன்பும்,இணக்கமும் உண்டாகும்.கணவன் மனைவிக்குள் உள்ள பிரச்சனைகளுக்கு பெரும்பாலும் SEXUAL MISUNDERSTANDING தான் காரணம்.இந்த மந்திர ஜபம் தம்பதிகளிடையே உள்ள SEXUAL MISUNDERSTANDING ஐ நீக்கும்.

பெண்கள் ஜெபிக்க வேண்டிய மந்திரம் :-

ஓம் க்லீம் காமதேவாய| ரதிநாதாய |மோகனாய | மம பதிம் மே வசமானய நமஹ |

ஓம் க்லீம் காமதேவாய வித்மஹே|
புஷ்பபாணாய தீமஹி |
தன்னோ அனங்க ப்ரசோதயாத் ||

ஆண்கள் ஜெபிக்க வேண்டிய மந்திரம் :-

ஓம் க்லீம் காமதேவாய| ரதிநாதாய |மோகனாய | மம பத்னிம் மே வசமானய நமஹ |

ஓம் க்லீம் காமதேவாய வித்மஹே|
புஷ்பபாணாய தீமஹி |
தன்னோ அனங்க ப்ரசோதயாத் ||

வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன்||

No comments:

Post a Comment