நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Thursday, 24 April 2014

இறைவனை வணங்கும் முறை:



ஏகாங்க நமஸ்காரம்:–

தலையை மட்டும் குனிந்து வணங்கும் முறை. அதாவது தலையாகிய ஒரு உடல் உறுப்பினைக் கொண்டு வணங்குதல் எனப் பொருள்படும்.

திரியங்க நமஸ்காரம்:–

மூன்று உடல் உறுப்புகளைக் கொண்டு வணங்கும் முறைக்கு இந்தப் பெயர். இந்த வணக்க முறையில் தலைக்கு மேலாக இரு கரங்களையும் கூப்பி வணங்குவார்கள்.

பஞ்சாங்க நமஸ்காரம்:–

உடலில் உள்ள ஐந்து உறுப்புகளைக் கொண்டு வணங்கும் முறைக்கு, அதாவது பஞ்ச அங்கங்களால் வணங்கும் முறைக்கு பஞ்சாங்க நமஸ்காரம் என்று பெயர். கை இரண்டு, முழந்தாள் இரண்டு, சிரம் ஆகிய ஐந்தும் நிலத்தில் பொருந்த வணங்குதல். இது பெண்கள் வணங்கும் முறையாகும்.

அஷ்டாங்க நமஸ்காரம்:–

எட்டு அங்கங்களைக் கொண்டு வணங்குதல். தலை, கை இரண்டு, இரு செவிகள், இரு முழந்தாள்கள், மார்பு ஆகிய எட்டு உடல் உறுப்புகள் தரையில் பட வணங்கும் முறை இதுவாகும்.

சாஷ்டாங்க நமஸ்காரம்:–

நம் உடலில் உள்ள எட்டு அங்கங்களும் பூமியில் படும்படி வணங்குவது. இதை தண்டனிடுதல் என்று கூறுவார்கள். அதாவது ஒரு கோல் (தண்டம்) ஆதாரமற்று விழுவதைப் போல இறைவனையே அடைக்கலமாகக் கொண்டு அவனைச் சரணடைதல் ஆகும். இது ஆண்கள் வணங்கும் வழிபாட்டு முறையாகும்.

No comments:

Post a Comment