நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Saturday, 4 October 2014

ஜீவசமாதி சூட்சும வழிபாட்டு முறை



தமிழ்நாட்டில் இருக்கும் சித்தர்பீடங்கள்,

சூட்சுமமாக இருந்து நம்மைக் காக்கும் மகான்களின் ஜீவசமாதிகளை வழிபடும் சூட்சும வழிபாட்டு முறை:அவசரமான & அவசியமான மறுபதிவு


சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புவரையிலும், ஆவி வழிபாடுதான் நமது தமிழ்நாட்டில் இருந்துவந்தது.அக்காலத்தில் இருந்த ஆன்மீக அருளாளர்கள் " கலிகாலத்தில் மனிதர்களின் வாழ்க்கை,சிந்தனை முறை எப்படி இருக்கும்?" என்பதை சிந்தித்தன் விளைவாக ஆவி வழிபாட்டு ஸ்தலங்களான ஜீவசமாதிகள் மற்றும் சித்தர்களின்  ஜீவசமாதிகளை கோவில்களாக மாற்றினார்கள்.எந்த மகான் எந்த கடவுளின் மீது பிரியமாக இருந்தாரோ, அல்லது எந்த கடவுளை வழிபட்டாரோ அந்த தெய்வத்தின் சிலை அவரது ஜீவசமாதியின் மீது அல்லது அருகில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.பெரும்பாலான மகான்களும்,சித்தர்களும் சிவனை வழிபட்டிருக்கின்றனர்.அபூர்வமான சிலர் விநாயகரையும்,முருகக்கடவுளையும்,சக்தியையும்,முனீஸ்வரரையும், கருப்பசாமியையும் வழிபட்டிருக்கின்றனர்.அதனால்,அந்த ஜீவசமாதிகளின் மீது அல்லது அருகில்(ஒரே கோவிலுக்குள்) உரிய தெய்வங்கள் சமைக்கப்பட்டு,கோவில்களாக மாற்றப்பட்டுள்ளன.

உதாரணமாக சித்தர் போகரின் வழிபாடு முருகக்கடவுளின் வழிபாடு ஆகும்.அதனால்,பழனிமலையில் முருகக்கடவுளின் கோவில் உருவானது.நாம் பழனி முருகக்கடவுளை தொடர்ந்து,முருகக்கடவுளின் வழிபாட்டுமுறைகளுக்கு ஏற்றவாறு வழிபட்டால்,போகர் அகமகிழ்ந்து,நமது கோரிக்கைகளை நிறைவேற்றுவார்;பிரச்னைகளைத் தீர்ப்பார்;நோய்களைக் குணப்படுத்துவார்;துன்பங்களை நீக்குவார்;

 ஜீவசமாதிகளை நாம் எப்படி வழிபட வேண்டும்?

முழுக்க முழுக்க ரோஜாப்பூக்களால் கட்டப்பட்ட மாலை,ஒருகிலோவுக்கு குறையாமல் டையமண்டு கல்கண்டு,அரை கிலோவுக்குக் குறையாமல் விதையில்லாத கறுப்பு திராட்சைப்பழங்கள்,கொஞ்சம் விதையில்லாத பேரீட்சைப்பழங்கள் இத்துடன் கொஞ்சம் வெற்றிலையும்,கொட்டைப் பாக்கும்,சந்தனபத்திக் கட்டும்,ஆறு நாட்டு வாழைப்பழங்களும் கொண்டு வந்து பத்தி பொருத்தி,தேங்காய் உடைத்து,கற்பூரம் கொளுத்தி,சிகப்பு ரோஜாக்களால் கட்டப்பட்ட மாலையை ஜீவசமாதியில் உள்ள தெய்வச்சிலைக்கு அணிவிக்க வேண்டும். நெய்தீபம் ஜீவசமாதியின் முன்பு ஏற்ற வேண்டும்.
                    
எந்த எந்த நாட்களில் ஜீவசமாதி வழிபாடு செய்யலாம்?
பகைவரோடு போராடி,போராடி களைத்துபோன நேர்மையாளர்கள், தங்களது நியாயமான பிரச்னைகள் தீர திங்கட்கிழமை மாலை 5 மணி முதல் 7 மணிக்குள் இவ்வாறு 8 திங்கட்கிழமைகளுக்கு மட்டும் வழிபாடு செய்ய வேண்டும்;
குலதெய்வம் தெரியாதவர்கள்,குலதெய்வத்தின் கோபத்துக்கு ஆளானவர்கள்,குலதெய்வ வழிபாட்டை மறந்தவர்கள்,குல தெய்வத்தை அறியாமல் இருந்து ,அதனால் கஷ்டப்படுபவர்கள் அனைவரும் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு மேல் 7 மணிக்குள் இவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும்;இப்படி 8 செவ்வாய்க்கிழமைகளுக்கு தொடர்ந்து ஜீவசமாதி வழிபாடு செய்ய வேண்டும்;

வேலைக்குப் போய்க்கொண்டிருப்பவர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் பொருளாதார முன்னேற்றம் அடைய விரும்புவோர்,புதன் கிழமைகளில் மாலை 5 மணிக்கு மேல் 7 மணிக்குள் இவ்வாறு ஜீவ சமாதி வழிபாடு செய்ய வேண்டும்;இவ்வாறு தொடர்ந்து 8 புதன்கிழமைகளுக்குச் செய்து வர ,நல்ல பொருளாதாரத் தன்னிறைவை அடைய முடியும்.
தனது ஆன்மீக முன்னேற்றத்திற்கு தகுந்த குருவைத் தேடுபவர்கள்,வியாழக்கிழமைகளில் மாலை 5 முதல் 7 மணிக்குள் இவ்வாறு ஜீவசமாதி வழிபாடு செய்ய வேண்டும்.இப்படி 8 வியாழக்கிழமைகளுக்கு மட்டும் வழிபாடு செய்தாலே போதுமானது;
பணரீதியான பிரச்னைகள் இருப்போர்,பண நெருக்கடியில் இருப்பவர்கள் அதிலிருந்து மீள வெள்ளிக்கிழமை மாலை 5 முதல் 7 மணிக்குள் இவ்வாறு ஜீவசமாதி வழிபாடு செய்ய வேண்டும்.இப்படி தொடர்ந்து 8 வெள்ளிக்கிழமைகளுக்கு மட்டும் வழிபாடு செய்தாலே போதுமானது;

பண நெருக்கடி,தொழில் மந்தநிலை,குடும்பப் பிரச்னைகள் என எல்லாவிதமான பிரச்னைகளும் தீர விரும்புவோர் சனிக்கிழமை மாலை 5 முதல் 7 மணிக்குள் இவ்வாறு ஜீவசமாதி வழிபாடு செய்துவர வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து 8 சனிக்கிழமைகளுக்கு மட்டும் வழிபாடு செய்துவிட்டாலே போதுமானது.

நீண்டகாலமாக வழக்குடன் போராடிக்கொண்டிருப்பவர்கள்(எந்தப் பிரச்னையாக இருந்தாலும் சரி) ஞாயிறு மாலை 5 முதல் 7 மணிக்குள் மேற்கூறியவாறு ஜீவசமாதி வழிபாடு செய்ய வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து 8 ஞாயிற்றுக்கிழமைகளுக்கு வழிபாடு செய்தால் போதுமானது.

இந்த ஜீவசமாதி வழிபாடு செய்பவர்கள் யாராக இருந்தாலும் சரி,அவர்கள் கண்டிப்பாக அசைவம் சாப்பிடுவதை அடியோடு நிறுத்தியாக வேண்டும்;இது ரொம்ப முக்கியம்.முட்டை,முட்டை கலந்த கேக்,புரோட்டா என மறைமுக அசைவ உணவுகளையும் தவிர்த்துவிட்டே இந்த ஜீவ சமாதி வழிபாடு செய்ய வேண்டும்.யார் எந்த ஊரில் இருக்கிறார்களோ,அந்த ஊரில் இருக்கும் ஏதாவது ஒரு ஜீவசமாதியில் இந்த வழிபாடுகளை முடிக்கலாம்;துக்கம்,பிறப்பு முதலியவற்றால் தொடர்ந்து 8 வாரங்கள் செய்ய முடியாவிட்டாலும்,விட்டு விட்டு செய்தாலும் போதுமானது.அதே சமயம் 8 வாரத்துக்கு மேல் இந்த ஜீவ சமாதி வழிபாடுகளை பின்பற்றக் கூடாது.எச்சரிக்கை!!!

2 comments:

  1. ஏன் 8 வாரத்திற்கு மேல் ஜீவசமாதிகளுக்கு செல்லக்கூடாது?ஆனால் இது நல்ல பதிவு. நன்றி

    ReplyDelete
  2. ஏன் 8 வாரத்திற்கு மேல் ஜீவசமாதிகளுக்கு செல்லக்கூடாது?ஆனால் இது நல்ல பதிவு. நன்றி

    ReplyDelete