நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Tuesday, 21 October 2014

தீபாவளி திருநாள் கங்கை நீராக பாவித்து வணங்கி ஸ்நானம்செய்தால், தரித்திரங்கள் விலகும்




தீபாவளி திருநாளாள் அன்று நல்லெண்ணைய் தேய்த்து குளிக்கும்போது, அந்த தண்ணீரை கங்கை நீராக பாவித்து வணங்கி ஸ்நானம் செய்தால், தரித்திரங்கள் விலகும்.
தீபாவளி திருநாள் அன்று, காலையில் வீட்டு வாசல் பெருக்கி, பசும் சாணம் அல்லது பன்னீரில் மஞ்சள் கலந்த தண்ணீரை வாசலில் தெளித்து, தாமரை பூகோலம் போட வேண்டும்.

வாசற்காலுக்கு மஞ்சள் – குங்குமம் வைக்க வேண்டும். வாசலுக்கு மாயிலை தோரணம் கட்டி, மல்லிகை பூவைத்து அலங்கரிக்க வேண்டும். இதனால் அந்த இல்லத்தினுள் ஸ்ரீலஷ்மிதேவி நுழைவாள் என்கிறது சாஸ்திரம்.
அத்துடன் இந்த தீபாவளி திருநாள் அன்று பித்ருக்கள் (முன்னோர்கள்) நம் இல்லத்திற்கு வருவதாக சாஸ்திரம் கூறுகிறது.


பித்ருக்களின் புகைப்படம் இருந்தால் அவர்களின் புகைப்படத்திற்கு துளசியும், வாசனை மலர்களையும் வைக்க வேண்டும். அவர்களுக்கு பிடித்த உணவுகளை படைக்க வேண்டும். தீப திருநாள் அன்று, பித்ருகளுக்கும் முக்கியதுவம் இருப்பதால் இதற்கு, “நரக சதுர்த்தி” என்று பெயர்.
தீபாவளி திருநாள் அன்று, மாலையில் பெருமாள் படத்திற்கு துளசி, மல்லிப்பூ வைத்து, ஸ்ரீலஷ்மிதேவிக்கும் தாமரை பூ, மல்லிகைப் பூ வைத்து, வணங்குவது மிக சிறப்பு.

மாலையில் தீபம் ஏற்றிய பிறகு, ஸ்ரீகனகதார ஸ்தோத்திரம் சொல்லலாம். அல்லது ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திரம் பாடல்களை கேசட்டில் ஒலிக்கச் செய்யலாம்.
வடக்கு வாசம் – குபேர வாசம் என்பார்கள். அதனால் வடக்கை நோக்கி குபேர பகவானை வணங்குங்கள்.

இப்படி, முன்னோர்களின் ஆசியும், ஸ்ரீலஷ்மிதேவியின் ஆசியும், இன்னும் பல தெய்வங்களின் ஆசியும் பரிபூரணமாக கிடைக்கச் செய்யும் மகிமை வாய்ந்த அற்புத திருநாள்தான் தீபாவளி திருநாள்.
தீப திருநாளாம் இந்த தீபாவளி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.

No comments:

Post a Comment