நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Saturday, 4 October 2014

பிரபஞ்ச ரகசியம் : எந்த கடவுளை எந்த காரியத்திற்கு வணங்குவது ?


கீழே , சில காரண காரியங்களுக்கு எந்த தெய்வங்களை வணங்கினால் , உங்கள் குறை தீரும் என்று , நம் முன்னோர்கள் - சித்தர் பெருமக்கள் கூறியவற்றை கொடுத்துள்ளேன்.. உரிய டிபார்ட்மென்ட் மேனஜர் , சூப்பர்வைசர் தானே உடனடியாக தீர்வு கொடுக்க இயலும். முயன்று பாருங்கள்...    மனிதம் வளர்ப்போம் ! 


காரியம் நடக்க
விக்னங்கள், இடையூறுகள் நீங்க - விநாயகர் 

செல்வம் சேர-ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ நாராயணர்

நோய் தீர- ஸ்ரீ தன்வந்தரி, தட்சிணா மூர்த்தி

வீடும், நிலமும் பெற- ஸ்ரீ சுப்ரமண்யர், செவ்வாய் பகவான்

ஆயுள், ஆரோக்கியம் பெற- ருத்திரன்

மனவலிமை, உடல் வலிமை பெற- ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ஆஞ்சநேயர்

கல்வியில் சிறந்து விளங்க- ஸ்ரீ சரஸ்வதி

திருமணம் நடைபெற- ஸ்ரீகாமாட்சி அம்மன், துர்க்கை

மாங்கல்யம் நிலைக்க- மங்கள கௌரி

புத்திர பாக்கியம் பெற- சந்தான கிருஷ்ணன், சந்தான லட்சுமி

தொழில் சிறந்து லாபம் பெற- திருப்பதி வெங்கிடாசலபதி

புதிய தொழில் துவங்க- ஸ்ரீகஜலட்சுமி

விவசாயம் தழைக்க- ஸ்ரீ தான்யலட்சுமி

உணவுக் கஷ்டம் நீங்க- ஸ்ரீ அன்னபூரணி

வழக்குகளில் வெற்றி பெற- விநாயகர்

சனி தோஷம் நீங்க- ஸ்ரீ ஐய்யப்பன், ஸ்ரீ ஆஞ்சநேயர்

பகைவர் தொல்லை நீங்க- திருச்செந்தூர் முருகன்

பில்லி, சூன்யம், செய்வினை அகல- ஸ்ரீ வீரமாகாளி, ஸ்ரீ நரசிம்மர்அழியாச் செல்வம், ஞானம், சக்தி பெற- சிவஸ்துதி


நோய் தீர
முடி நரைத்தல், உதிர்தல்- மகாலட்சுமி, வள்ளி

கண் பார்வைக் கோளாறுகள்- சிவபிரான், சுப்ரமண்யர், விநாயகர்

காது, மூக்கு, தொண்டை நோய்கள்- முருகன்

ஆஸ்துமா, சளி, காசம், சுவாசக் கோளாறுகள்- மகாவிஷ்ணு

மாரடைப்பு, இருதய கோளாறுகள்- சக்தி, கருமாரி, துர்க்கை

அஜீரணம், குடல்வால், அல்சர், மூலம், மலச்சிக்கல், மஞ்சள் காமாலை, 


காலரா- தட்சிணாமூர்த்தி, முருகன்

நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு- முருகன்

பால்வினை நோய்கள், பெண்களுக்கான மாதவிடாய் கோளாறுகள்- ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ரங்கநாதர், வள்ளி

மூட்டுவலி, கால் வியாதிகள்- சக்கரத்தாழ்வார்

வாதங்கள்- சனிபகவான், சிவபெருமான்

பித்தம்- முருகன்

வாயுக் கோளாறுகள்- ஆஞ்சநேயர்

எலும்பு வியாதிகள்- சிவபெருமான், முருகன்

ரத்தசோகை, ரத்த அழுத்தம்- முருகன், செவ்வாய் பகவான்

குஷ்டம், சொறி சிரங்கு- சங்கர நாராயணன்

அம்மை நோய்கள்- மாரியம்மன்


தலைவலி, ஜீரம்- பிள்ளையார்

புற்று நோய்- சிவபெருமான்

ஞாபகசக்தி குறைவு- விஷ்ணு


தோல்விகளை கண்டு துவளாத மனமும், வெற்றிகளைக் கண்டு மமதை கொள்ளாத மனப் பக்குவமும், கஷ்டங்களை தாங்கி கொள்ளும் மனப்    பக்குவமும், வெற்றிப் பாதையை நமக்கு அடையாளம் காட்டும் அந்த பரம்பொருளின் ஆசியும் நம் அனைவருக்கும் கிடைக்கட்டும் !

No comments:

Post a Comment