நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Tuesday, 21 October 2014

தீபாவளி பண்டிகை மாநிலத்துக்கு மாநிலம் கொண்டாட்டத்தில் வித்தியாசம்








தீபாவளி பண்டிகை மாநிலத்துக்கு மாநிலம் கொண்டாட்டத்தில் வித்தியாசம்



தீபாவளி பலதேச மக்களாலும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை யாகும். ஆசியாவிலேயே மிக அதிகமான மக்கள் கொண்டாடும் ஒரே பண்டிகை தீபாவளிப் பண்டிகை தான். மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பட்டாசுகளைக் வெடித்து பரவசம் அடைவர்.

போர் நடைபெறும் பொழுது அசுரனை பலவித அஸ்திர, சக்கரங்களைக் கொண்டு தாக்கியதால் எங்கும் பயங்கரமான வெடிச்சத்தங்கள் கேட்ட படியால் அன்று பட்டாசு கொழுத்தி கொண்டாடுவதாக கூறப்படுகிறது. மராட்டியத்தில் தீபாவளியை நரக சதுர்த்தி என்று நான்கு நாட்கள் கொண்டாடுவர்.




முதல் நாள் மங்கள ஸ்நானம் செய்து புத்தாடை அணிவர் இரண்டாம் நாள் லட்சுமி பூஜை செய்து புதுக்கணக்கு தொடங்குவர். மூன்றாம் நாள் பெண்கள் கணவர் ஆயுள் வேண்டி நோன்பு இருப்பர். அன்று சூரியன் தன் பாதை மாறி துலா ராசியில் பிரவேசிப்பார். மராத்தியர்கள் தாம்பூலம் போட்டு திருநாளாக கொண்டாடுவர்.

நான்காம் நாள் உடன் பிறந்ததவர்களை உபசரித்து வழிபடுவர். வங்காளத்தில் அழிவுத் தொழிலை மிக உக்கிரமாக மேற்கொண்ட காளிதேவியின் உக்கிரத்தை சங்கரர் தணித்த நாளை தீபாவளி எனக் கொண்டாடுவர். துர்க்கை பூஜை செய்து தாம்பூலத் திருவிழா கொண்டாடுவர்.

நேபாளத்தில் தீபாவளியை `தீ ஹார்' என்ற பெயரில் ஐந்து நாட்கள் கொண்டாடுகிறார்கள். ஐந்து நாட்களும் இரவில் தீபங்களை வரிசையாக ஏற்றி லட்சுமி தேவிக்கு பூஜை செய்வார்கள். முதல்நாள் தயிர்ச்சாதம் காகங்களுக்கு வைப்பர். இரண்டாம் நாள் வீட்டைக் காக்கும் நாய்களுக்கு விருந்து கொடுப்பர்.

மூன்றாம் நாள் லட்சுமி அம்சமான பசுக்களுக்கு உணவளித்து வழிபடுவர். நான்காம் நாள் எல்லாப் பிராணிகளுக்கும் உணவளித்து மகிழ்வர். அன்று பிராணிகளிடம் வேலை வாங்க மாட்டார்கள். ஐந்தாம் நாள் ராகிப் பண்டிகை பையாதாஜ என்று பெரும் பண்டிகையாக கொண்டாடுவர்.

ராஜஸ்தானில் தீபாவளி அன்று மார்வாடிகள் லட்சுமி பூஜை செய்து வெள்ளித்தகட்டில் லட்சுமி படத்தை வரைந்து பரம்பரை பரம்பரையாக பாதுகாத்து வழிபடுவர் அந்த ஆண்டு சுபீட்சமாக விளங்க வேண்டும் என்று இந்திரனின் பொக்கிஷ தாரியான குபேரனை வழிபட்டு அவனருளைக் கொண்டாடுவர்.

வேட்டுவ இனமக்கள் வீர விளையாட்டுக்களை விளையாடி காண்பிப்பர். பஞ்சாப்பில் நசிகேதனுக்கு எமதர்மராஜன் உயிர்ப்பிச்சை அளித்ததை நினைத்து தீபாவளி கொண்டாடுவர். சீக்கிய மத குருமார்களில் ஒருவர் குரு கோவிந்தசிங், அவர் ஜஹாங்கிரீன் சிறையில் இருந்து விடுபட்டு அமிர்தசரஸ் வந்த நாளாக பஞ்சாப் மக்கள் தீபாவளி கொண்டாடுவர்.

அன்று பொற்கோவிலில் தீப அலங்காரம் கண்கொள்ளாக் காட்சியாகும். மத்தியப் பிரதேசத்தில் மகா விஷ்ணு பூஜையும் குபேர பூஜையும் நடைபெறும் குபேரனை வழிபட்டால் செல்வம் கிடைக்கும் என நம்பி தீபாவளியன்று சிறப்பான பூஜை செய்கிறார்கள்.

இமாச்சல பிரதேசத்தில் மாடு எருது கன்றுகளுக்கு நீராட்டி குங்குமத் திலகமிட்டு மாலை அணிவித்து நன்கு அலங்கரித்து பூஜை செய்து வழிபடுவர். தீபாவளியன்று கோ பூஜை சிறப்புப் பொருந்தியது வைஷ்ணவர்கள் கோவர்த்தன பூஜை செய்து அன்னதானம் வழங்குவர். குஜராத்தில் கிருஷ்ணபரமாத்மா இகலோக வாழ்வை நீத்து வைகுண்டம் சென்ற நாள் தீபாவளி என கொண்டாடுகிறார்.

No comments:

Post a Comment