நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Monday, 6 October 2014

தீய சக்தி மற்றும் தீய எண்ணங்களை வீட்டிலிருந்து விரட்ட சாம்பிராணி – போடும் முறை

எண்ணங்களே நம் வாழ்க்கையை தீர்மானிக்கிறது, அப்படிப்பட்ட எண்ணங்களை நாம் நல்ல விதமாக எண்ணுவதே நமக்கும் மற்றவர்க்கும் நன்மை அளிக்கும், நாம் நன்றாக எண்ணம் போட்டாலும் நம்மை சுற்றி இருப்பவர்கள் எப்படி எண்ணம் போடுவார்கள் என தெரியாது, இப்படிப்பட்ட தீய எண்ணங்கள் மற்றும் கண் திஷ்டி (அதாவது ஆழ்மனதில் பதியும் ஆழமான தீய எண்ணங்கள்). இவற்றை சரி செய்ய அந்த காலத்தில் நம் முன்னோர்கள் பல முறைகளை கையாண்டனர். அவற்றில் ஒன்றுதான், மிகவும் சக்தி வாய்ந்த சாம்பிராணி புகை போடும் முறை, இந்த சாம்பிராணியை அமாவாசை அன்று மாலை 5லிருந்து 6 மணிக்குள் மாதம் ஒரு முறை மட்டுமே போட வேண்டும்.
சாம்பிராணி போடா தேவையான பொருள்கள் :
1.வேப்பிலை பொடி.
2.காயவைத்து அரைத்த எட்டி பொடி.
3.பெரிய நெல்லிக்காய் பொடி 
4.கோமியம். 
5.தயிர்
6.மாவிலை
சாம்பிராணி போடும் கிண்ணத்தில் நன்கு கொட்டாங்குச்சியை நெருப்பு வைத்து எரித்து செந்நிறமாகும் வரை எரிய விட வேண்டும் , பின் வேப்பிலை பொடி , அரைத்த எட்டி பொடி இரடையும் கலந்து எரிந்து கதகதவென இருக்கும் கொட்டாங்குச்சியில் போட்டு விட வேண்டும். புகை போடுவதற்கு முன் கதவு சன்னலை மூடி வீடு அனைவரும் வெளியே சென்று விட வேண்டும். ஒருவர் மட்டும் உள்ளே இருந்து  புகை எழுப்பிவிட்டு(சாம்பிராணி போட்டுவிட்டு ) வெளியே  வந்து விட்டு கதவை மூடிவிட வேண்டும். 1/2 மணி நேரம் கழித்து அனைத்து கதவு ஜன்னலையும் திறந்து விட்டு புகையை வெளியேற்ற வேண்டும், பின் அடுத்த நாள் காலையில் எழுந்து கோமியத்தில் தயிர், நெல்லி பொடி கலந்து மாவிலை மூலம் அந்த கோமியத்தை வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். ஒரு மாதத்தில் இதை ஒரு முறை செய்தாலே நல்ல மாற்றத்தை காண்பீர்கள்.
இதனை செய்வதன் மூலம் கெட்டசக்தி, கெட்ட எண்ணங்கள், கண் திஷ்டிyil இருந்து தப்பிக்கலாம்

No comments:

Post a Comment