கலியுகத்தில் காரிய சித்திக்கு துர்க்கை வழிபாடுஅதுவும் இராகு காலத்தில்,செய்வது சிறந்தது.
இராகு காலத்தில் கடைசி 1/2 மணி நேரமான அமிர்தகடிகை நேரமே சிறப்பான பரிகார நேரம்.
நெய்விளக்கு ஏற்றவும் உகந்த நேரம்.ஞாயிற்றுகிழமை மாலை 4.30-6.00 மணிக்குள்
துர்க்கைக்கு விளக்கு ஏற்றி வழிபட நாம் வேண்டிய பிராத்தனைகள் நிறைவேறும்.
வெள்ளிக்கிழமை காலை 10.30-12.00 இராகு காலத்தில்துர்க்கைக்கு தாமரை தண்டு திரி போட்டு நெய்விளக்கு ஏற்றி வழிபட,தெய்வ குற்றம்,குடும்ப சாபம் நீங்கும்.
ஹஸ்த நட்சத்திரத்தன்று துர்க்கைக்கு
சிகப்பு பட்டு துணி சாற்றி, சிகப்பு தாமரையை பாதத்தில் வைத்து
27 எண்ணிக்கை கொண்ட எலுமிச்சை பழ மாலை சாற்றி,
குங்கும அர்ச்சனை செய்து, அந்த குங்குமத்தை நெற்றியில்
வைத்து வர உடனே திருமணம் நடை பெறும்.

No comments:
Post a Comment