நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Tuesday, 7 October 2014

மூல நோய்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்


நங்காயம் நன்மையுற நாளும் உணவினிலே ,
வெங்காயம் சேர்த்தல் விரும்பு ------------------குறள்
விளக்கம் :
வெங்காயம் உண்பதினால் பித்த மிகுதியால் உண்டாகும் மயக்கம் ,தளர்ச்சி உண்டாவதில்லை .
மூல நோய் உள்ளவர்கள் வெங்காயத்தை நாள் தவறாமல் காலையில் உண்டு வர நன்று நோய் தீரும்.
வெங்காயத்தை சாறு பிழிந்து அதி காலையில் அருந்தினால் காக்கை வலிப்பு நோய் குணமாகும் .
வெங்காயத்தை தனியாக வேகவைத்து உணவுக்குமுன் சாப்பிட்டு வந்தால்
நல்ல தூக்கம் வரும்
நெய்யில் வெங்காயத்தை பொரித்துன்ன உடல் வன்மையும் ,திண்மையும் பெரும்
குரல் வலிமை,இனிமை பெற ,நெஞ்சில் கபம் நீங்க வெங்காயம் சிறந்த மருந்து ..
தலையில் ஏற்படும் பூச்சி வெட்டு நீங்கி முடி முளைக்க வெங்காயத்தை வெட்டி பூச்சி வெட்டு உள்ள இடத்தில தேய்த்து வர முடி முளைக்கும் .

No comments:

Post a Comment