
தீய சக்திகள்,மாந்திரீக பாதிப்புகள் நீங்க :-
ஓம் ஸ்ரீ ஆஞ்சநேய ஆஞ்சநேய ஆஞ்சநேய பாஹிமாம் ||
ஓம் ஸ்ரீ ஹனுமந்த ஹனுமந்த ஹனுமந்த ரக்ஷமாம் ||
தீய எண்ணம் கொண்டவர்களால் மந்திரங்கள் தவறாகப் பிரயோகம் செய்யப்பட்டு பலர் அநியாயமாகப் பாதிப்பு அடைகிறார்கள். அத்தகைய தீங்குகளில் இருந்து விடுவிக்க மிகப்பெரும் தொகை கேட்கப்படுகிறது .எல்லோராலும் அவ்வளவு பணம் செலவு செய்து அவற்றில் இருந்து விடுபட முடியாது.அவர்களுக்கு உதவவே இதைப் பதிவு செய்கிறேன்.
செவ்வாய்க்கிழமை அன்று காலை 6 முதல் 7 மணிக்குள் கிழக்கு அல்லது மேற்கு நோக்கி நின்று பசுமாட்டின் காலடி மண் வலது கையால் 1 அல்லது 3 கைப்பிடி எடுத்து வந்து அத்துடன் துளசி செடியின் வேர் அருகில் உள்ள மண்ணைக் கிழக்கு நோக்கி நின்றுக் கொஞ்சம் எடுத்துக் கலந்து வைத்துக்கொள்ளவும்.11 வெற்றிலைகளையும் ,பசுநெய் சிறிது
அஞ்சனக் கல்லையும் எடுத்துத் தெற்கு நோக்கி இருந்தபடி கீழே உள்ள ஹனுமான் மந்திரம் 108 தடவை ஜெபித்தபடியே அரைக்கவும்.
அரைத்த அந்தக்கலவையை ஏற்கனவே கலந்து வைத்த மண்ணுடன் கலக்கவும்.அதை இரண்டாகப்பிரித்து ஒரு சிகப்புத்துணியில் முடிந்து வைக்கவும். ஒன்றை வீட்டின் வாசலில் கட்டி வைக்கவும்.இன்னொன்றை ஒரு புதுப் பாத்திரம் வாங்கி அதில் நீர் விட்டுக் கரைத்து அந்த நீரை வீட்டின் வடமேற்குத் திசையில் தொடங்கி எல்லாத் திசைகளிலும் வீட்டில் உள்ளவர்கள் மீதும் தெளித்து விடவும். நீர் மீதம் இருந்தால் அதை வீட்டின் முன் பக்கம் அல்லது வலது பக்கம் சிறிது பள்ளம் பறித்து அதில் ஊற்றிவிடவும்.
அன்றில் இருந்து 3 முதல் 12 நாட்களுக்குள் கொஞ்சம் கொஞ்சமாகத் தீய சக்திகளால் ஏற்பட்ட பாதிப்பு நீங்கிவிடும் வீட்டின் முன்னால் அந்த சிகப்பு துணியில் கட்டப்பட்ட முடிச்சு இருக்கும் வரை எந்தச் சக்தியாலும் பாதிப்பு ஏற்படாது.
எல்லாச் செவ்வாய்க்கிழமைகளிலும் அந்தக் காப்புமுடிச்சுக்கு சாம்பிராணி அல்லது குங்கிலிய தூபம் காட்டவும்.
ஜெபிக்க வேண்டிய ஸ்ரீ ஹனுமான் மந்திரம் :-
ஓம் நமோ பகவதே ஹனுமதே |
சர்வக்ரஹான் பூத பவிஷ்யத் வர்த்தமானான் |
தூர சமீபஸ்தான் ,சர்வகால ,துஷ்ட புத்தீன் உச்சாடய உச்சாடய|
பரபலான் க்ஷோபய க்ஷோபய |
மம சர்வகார்யாணி ஸாதய ஸாதய |
ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் பட் | க்கே க்கே க்கே க்கே (ke) ஓம் சிவசித்தம் |
ஓம் ஹ்ராம் ஓம் ஹ்ரீம் ஓம் ஹ்ரூம் ஓம் ஹ்ரைம்
ஓம் ஹ்ரௌம் ஓம் ஹ்ரஹ ஸ்வாஹா|
பரக்ருத யந்த்ர மந்த்ர ,பர அஹங்கார,பூத பிரேத பிசாச|
திருஷ்டி சர்வ விக்ன, துர்ஜன சேஷ்டா| குவித்யா சர்வ உக்ரபயாணி நிவாரய நிவாரய|
பந்த்த பந்த்த, லுன்ட்ட லுன்ட்ட விலுஞ்ச விலுஞ்ச கிலி கிலி|
சர்வ குயந்த்ராணி துஷ்ட வாசம் ஹூம் பட ஸ்வாஹா ||
லக்ஷ்மண ப்ராண ரக்ஷகன், ராமேஷ்டன் ,சொல்லின்செல்வன் ஸ்ரீ ஆஞ்சநேயர் எல்லாத் தீங்குகளில் இருந்தும் நம்மைக் காத்தருள்வாராக என வேண்டி நிறைவு செய்கிறேன்.
ஓம் ஸ்ரீ ஆஞ்சநேய ஆஞ்சநேய ஆஞ்சநேய பாஹிமாம் ||
ஓம் ஸ்ரீ ஹனுமந்த ஹனுமந்த ஹனுமந்த ரக்ஷமாம் ||
வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||
--நன்றி M.சூர்யா,

No comments:
Post a Comment