நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Saturday, 15 November 2014

ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஸ்ரீ சிரகிரி வேலவன் அன்னதானம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி
ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஸ்ரீ சிரகிரி வேலவன் திருக்கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர்க்கு 17.11.2014 திங்கட் கிழமை கார்த்திகை மாத உத்திரம் நட்சத்திரம் தினத்தன்று காலை 8.00 மணி அளவில் அபிஷகம், ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ சிரகிரி வேலவன் திருவருளும்
ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.
மேலும் தகவல்கள்களுக்கு
திரு .அண்ணாமலை cell :94425 59844

6 comments:

  1. அன்னம் என்றால் சோறு ஆகும்.[1] தானம் என்றால் கொடை என்று பொருள்படும். தானம் என்பது தா எனும் வினையின் தொழிற்பெயர் வடிவமாகும் என்பது தேவநேயப் பாவாணரின் கூற்று ஆகும்அன்ன தானம் என்றால் உணவைப் பசியுற்றோருக்கு உவந்து வழங்குவதைக் குறிக்கும். மேலும் பசியுற்றோருக்கு உணவளிப்பது சிறந்த மனிதப் பண்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. மேலைநாடுகளில் உணவு வங்கிகள் மூலமும் உறையுள்கள் மூலமும் உணவற்றோர்க்கு உணவு வழங்கப்படுகிறது.

    ReplyDelete
  2. வேதத்தில் அன்னதானம்
    அன்னநநிந்த்யாத் - தத்வ்ரதம்
    அன்னம் பகுகுர்வீத! தத்விரதம்!
    நகஞ்சன வஸதௌ ப்ரத்யால சக்ஷீதா! தத்வ்ரதம்!
    தஸ்மாத் யயா கயாச விதயா பஹ்வண்ணம் ப்ராப்ணுயாத்!
    ஆராத்யஸ்மா அன்ன மித்யா சக்ஷதே!

    (தைத்ரீயோப நிஷத் - ப்ருகுவல்லி)

    பொருள் : அன்னத்தை துவேஷிக்கக் கூடாது. – அது விரதம்.

    அன்னத்தை மிகுதியாக உண்டாக்க வேண்டும். – அது விரதம். அன்னத்தை வேண்டி வந்த எவரையும் தள்ளிவிடக் கூடாது. – ஆகையால் எவ்விதத்திலாவது மிகுதியாக அன்னத்தை தேடிக் கொள்ள வேண்டும். வருபவர்களுக்கு அன்னம் தயாராக இருக்கிறதென்று சொல்லுவர் பெரியோர்.

    ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரத ரிஷிகளின் சமூக சிந்தனைதான். தைத்ரியோப நிஷத்தில் வரும் எக்காலத்திலும் பொருந்தும் சிந்தனை. பசியற்ற பாரதத்தைக் காண விழையும் சிந்தனை. வயிற்றுக்கு சோறிடல் வேண்டும். இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் என்ற சிந்தனையால் விளைந்ததே அன்னதானம் உயரிய தானம். தானங்களில் சிறந்த தானம். எனவே தான் திருநாரையூரில் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. நம்முடைய ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையார்; கருணையால் தான் 16.3.2002 முதல் தமிழக அரசின் ஆலயங்களிலும் தொடர்ந்து தினமும் நடைபெற்று வருகிறது என்பது திண்ணம். உதாரணமாக

    இந்த விநாயகருடைய அருளால் தான் நமக்கு திருமுறைகள் கிடைத்தது. இன்று ஆலயங்களிலும் அன்னதானம் நடைபெறுகிறது என்பதில் ஐயமில்லை.

    அன்னபூரணி ஸ்லோகம்

    ஆன்னபூர்ணே சதா பூர்ணே சங்கரப்ராணவல்லபே!
    ஞான வைராக்ய சித்யர்த்தம் பிக்ஷாம் தேஹி ச பார்வதி!!

    உலக மக்களின் பசிப் பிணியைப் போக்க பராசக்தி அன்னபூரணியாக அவதரித்து காசியில் அருள் புரிந்து கொண்டிருக்கும் அன்னபூரணியின் இந்த ஸ்லோகத்தை தினமும் சாப்பிடும் போது சொல்லி வந்தால் என்றைக்கும் உணவிற்கு குறைவு வராது.

    சுபமஸ்து

    ReplyDelete
  3. தானத்தில் சிறந்தது அன்னதானம்” என்ற கூற்றை அனைவரும் கேட்டிருப்போம். குறிப்பாக ஆன்மீகத்தில் ஈடுபடுபவர்களுக்கு உணவு அளிப்பது நம் கலாச்சாரத்தில் தொன்றுதொட்டு இருந்து வந்துள்ளது. இங்கே அன்னதானம் பற்றி சத்குருவின் பார்வையில்… “நீங்கள் மிகுந்த பசியில் இருக்கும்போது உங்கள் தட்டில் உள்ள உணவினை உங்கள் அருகில் பசியில் இருப்பவருக்கு வழங்கினால் உங்கள் பலம் அந்த உணவு உண்பதைக் காட்டிலும் அதிகமாகும்” என்று புத்தர் தன் சீடர்களுக்கு கூறினார். உண்மையில் இது வெறும் தத்துவமல்ல. இதனை நம் அனுபவப் பூர்வமாகவே பார்க்க முடியும். நாம் பிறருக்கு ஏதேனும் ஒன்றை வழங்கும்போது கிடைக்கக் கூடிய அற்புத உணர்வினை நம் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அதிலும் உணவு என்பது மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்றாக உள்ளது. நாம் பிறருக்கு வழங்கும் உணவு, அவரின் வாழ்வை நீட்டித்துக்கொள்ளும் சக்தியை அவருக்கு வழங்குகிறது. அன்னதானம் நம் கலாச்சாரத்தில் தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு அற்புதத் தன்மையாகும். இது நம் கலாச்சாரத்தில் ஆன்மீக வளர்ச்சிக்கான பாதையாகப் பார்க்கப்படுகிறது.

    Read more at : அன்னதானம் – ஓர் புனித அர்ப்பணிப்பு http://tamilblog.ishafoundation.org/annadanam-oer-punitha-arppanippu/

    ReplyDelete
  4. அன்னதானம் குறித்து சத்குரு பேசுகையில்… “நாம் பெற்றுள்ள ஆன்மீகம் சார்ந்த இந்த வளமைக்கு, ஆன்மீகப் பாதையில் நடந்து வந்த எண்ணற்ற முனிவர்கள், ரிஷிகள், ஞானிகள் மற்றும் குருமார்களுக்கு மட்டும் நன்றியை வெளிப்படுத்தினால் போதாது. அவர்களையெல்லாம் பேணி வளர்த்த ஒட்டுமொத்த நம் சமுதாயத்திற்கும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம். நமது பாரம்பரியத்தில், துறவிகள் மற்றும் ஆன்மீக சாதகர்களுக்கு சேவை செய்வதென்பது மிகவும் முக்கியமாக இருந்து வந்துள்ளது. இதுவே ஒரு தனி ஆன்மீகப் பாதையாகவும் இருப்பதைப் பார்க்க முடிகிறது. இதில் மிகவும் அற்புத அம்சமாக இருப்பது, பிறருக்கு உணவை அர்ப்பணிக்கும் அன்னதானம்.” நீங்களும் பங்குகொள்ளலாம் ஈஷா யோகா மையம், தனிமனித நல்வாழ்விற்காக செயல்படக்கூடிய, ஒரு லாப நோக்கற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம். கிராமப்புறங்களில் ஆரோக்கியம் (கிராமப் புத்துணர்வு இயக்கம்), கல்வி (ஈஷா வித்யா பள்ளி மற்றும் அரசு பள்ளி தத்தெடுப்பு திட்டம்) மற்றும் சுற்றுப்புறச் சூழல் (பசுமைக் கரங்கள் திட்டம்) ஆகியவை ஈஷா ஆசிரமவாசிகள் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. ஈஷாவில் அன்னதானத் திட்டம் தொடர்ந்து நடைபெறுவதால், மையத்திலுள்ள ஆசிரமவாசிகள், ஈஷாவின் பல்வேறு ஆன்மீக மற்றும் சமூக நலத் திட்டங்களில் தங்களை முழுமையாக அர்ப்பணித்துச் செயலாற்றுவது சாத்தியமாகிறது. ஈஷா யோகா மையத்தில் சந்நியாசிகள், பிரம்மச்சாரிகள், ஆசிரமவாசிகள் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் என 1000 பேருக்கும் அதிகமானோருக்கு, தினமும் இரு வேளைகள் அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்தப் புனிதக் கலாச்சாரம் தொடர்ந்து நடைபெறும் பணியில் நீங்களும் பங்குகொள்ளலாம். உங்கள் பிறந்தநாள், திருமண நாள், குழந்தைகளின் பிறந்த நாள், உங்களுக்குப் பிரியமானவர்களின் நினைவு நாட்களில் நீங்கள் அன்னதானம் வழங்கலாம்.

    Read more at : அன்னதானம் – ஓர் புனித அர்ப்பணிப்பு http://tamilblog.ishafoundation.org/annadanam-oer-punitha-arppanippu/

    ReplyDelete
  5. புரட்டாசி மகாளயபட்ச அமாவாசை அன்னதானம் மகிமை
    திங்கள் கிழமை 12.10.2015 புரட்டாசி மகாளயபட்ச அமாவாசை;

    சிறப்பு வாய்ந்த அமாவாசைகள் ஆடி,தை,புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசையாகும்.சில குடும்பங்களில் ,வழிவழியாக யார் இறந்தாலும் அவர்களுக்கு திதியோ ,தர்ப்பணமோ அவர்களை நினைத்து வருடாந்தர பூஜையோ செய்ய மாட்டார்கள்.இப்போது இருக்கும் தலைமுறை நல்ல வேலை நல்ல சம்பளம் இருக்கு..கடவுளை எதுக்கு கும்பிடனும் என நினைப்பது போல சில குடும்பத்தினர் நல்ல வசதி இருக்கு.அவங்களை கும்பிட்டு என்னாக பொகுது என விட்டுவிடுவர்.முன்னோர்களை நினைத்து வருடத்தில் ஒருநாள் திதி கொடுத்து வழிபட்டால் ,அவர்கள் ஆசி உங்களுக்கும் உங்கள் சந்ததிக்கும் கிடைக்கும்.ஞாயிறு ,திங்கள் இரண்டு நாளும் கொடுக்கலாம் .புனிதமான புரட்டாசி அமாவாசையில் அன்னதானம்,ஏழைகளுக்கு உதவி செய்தால் பெரும் புண்ணியம் கிடைக்கும்.பலன் பலமடங்காகநமக்கு கிடைக்கும்.

    ReplyDelete
  6. பொலன்னறுவை பொசன் தன்சல (உணவு அன்னதானம்)
    அன்னதான சிறப்பு

    இந்து சமயத்தின் வேத இலக்கியம் “தர்மம் சர” என போதிக்கின்றது. தர்மம் செய்தலை போற்றுகின்றது. கோ தானம், தீப தானம், வஸ்திர தானம், அன்னதானம் என பலவகை தானங்களை செய்ய இந்து தர்மம் வலியுறுத்துகின்றது.


    அதனடிப்படையில் ஆலயத்தில் மாதந்தோறும் வரும் பௌர்ணமி தினத்தில் விசேட ஆகம பூஜை வழிபாடு இடம்பெற்று அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகின்றமை விசேட அம்சமாகும். இப்பெரும் அன்னதான நிகழ்வை அடியார்கள் தமது உபயமாக ஏற்று ஸ்ரீ குமரப் பெருமான் அருளால் அன்னத்தான கருமத்தை மேற்கொண்டு சிறப்பிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


    இச்சிறப்புமிக்க அன்னதான பணியை ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் தொடர்ந்து வழங்கும் எண்ணத்தினை அடியார்கள் மனதில் உதித்தெழச் செய்து இடைவிடாது ஸ்ரீ குமரப்பெருமான் செயற்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது. ஸ்ரீ குமரப்பெருமான் அருளாலே இப்பெரும் அன்னதான நிகழ்வு நடைபெறுகின்றமையால் சிந்தாகட்டி ஸ்ரீ குமரப்பெருமான் “அன்னதானக் குமரன்” போற்றப்படுகின்றார்.

    ReplyDelete