நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Thursday, 27 March 2014

குலதெய்வம் எதுன்னே தெரியாதா?

        பெரியவர் ஊர் ஊராகச் சென்றுசாதுர்மாஸ்ய விரதம் இருந்துவந்த ஒருநாள் அது.அப்படி ஒரு கிராமத்தில் அவர் தங்கியிருந்தபோது,ஒரு விவசாயி பெரியவரை மிகவும் பிரயாசைப்பட்டுவந்து சந்தித்தார்அவரிடம் துளியும் உற்சாகமில்லை.முகமும் இருளடைந்து போயிருந்ததுவாயைத்திறந்து தன் துன்பங்களைக் கூற அவசியமேஇல்லாதபடிபார்த்த மாத்திரத்தில் அவரின் துன்பம்பெரியவருக்கு விளங்கி விட்டதுஇருந்தும் அந்தவிவசாயி,

சாமி… ஏண்டா உயிரோட இருக்கோம்னு இருக்கு.பேசாம குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கலாமான்னுகூட தோணுதுஒரு மனுஷனுக்கு வாழ்க்கைலபோராட்டம் இருக்கும்ஆனாஎன் வரைலபோராட்டமே வாழ்க்கையா இருக்கு” என்றுதுயரத்தைச் சொல்லி அழுதார்.

பெரியவர் அவரிடம்குலதெய்வத்துக்கு ஒழுங்காபூஜை செய்யறியா?” என்று கேட்டார்.

குலதெய்வமா… அப்படின்னா?” – திருப்பிக் கேட்டார்அவர்.

சரிதான்… உங்க குலதெய்வம் எதுன்னே தெரியாதா?”

ஆமாம் சாமி… வியாபார விஷயமா எங்கமுன்னோர்கள் பர்மா போயிட்டாங்கபல காலம் அங்கஇருந்துட்டு திரும்பிவந்த குடும்பம் எங்க குடும்பம்என்பாட்டன்ல ஒருத்தருக்கு கடவுள் நம்பிக்கைஇல்லாததாலஅவர் பிள்ளைகளும் அவரைப் பார்த்துஅப்படியே வந்துட்டாங்கநாங்கள்ளாம் அந்த வழிலவந்தவங்கதான்” என்றார்.

உன் முன்னோர்கள் யாராவது இப்ப உயிரோடஇருக்காங்களா?”

ஒருத்தர் கிராமத்துல இருக்கார்என் அப்பா வழிபாட்டனார் அவர்.”

அவர்கிட்ட போய் உங்க குலதெய்வத்தைப் பத்திகொஞ்சம் கேட்டுண்டு வா.”

ஏன் சாமி… அந்த சாமி எதுன்னு தெரிஞ்சுகும்பிட்டாதான் என் பிரச்னை தீருமா?”

அப்படித்தான் வெச்சுக்கோயேன்…”

என்ன சாமி நீங்க… ஊர்ல எவ்வளவோ கோயில்இருக்குஅங்க எல்லாமும் சாமிங்கதான் இருக்குஅப்பஅதுக்கெல்லாம் சக்தி இல்லையா?”

நான் அப்படிச் சொல்லவே இல்லையே!”

அப்ப இந்த சாமில ஒண்ண கும்பிடச் சொல்லாம,குலதெய்வத்த தெரிஞ்சுக்கிட்டு வரச் சொல்றீங்களே!”

காரணமாத்தான் சொல்றேன்ஓட்டைப் பாத்திரத்துலஎவ்வளவு தண்ணி பிடிச்சாலும் நிக்காதுநீஎன்னமாதிரி எதுவும் வேண்டாம்கற சன்னியாசி இல்லை.வாழ்வாங்கு வாழ விரும்பற குடும்பம்தான்எனக்கு,பாத்திரமே கூட தேவையில்லைஆனாஉனக்குபாத்திரம்தான் பிரதான தேவைபாத்திரம் இருந்தாத்தானே எதையும் அதுல போட்டு வெக்க முடியும்?அப்படிப்பட்ட பாத்திரம் ஓட்டையா இருந்தாஅதுலஎதைப் போட்டாலும் அந்த ஓட்டை வழியா வெளியபோகுமா போகாதா?”

அப்ப குலதெய்வம்தான் பாத்திரமா… அதுதெரியாததால ஓட்டைப்பாத்திரமாயிடிச்சுங்கறீங்களா?”

நீகேள்வி கேட்காம உன் குலதெய்வம் எதுங்கறததெரிஞ்சு அந்தக் குலதெய்வத்தைத் தேடிப்போய்சாஷ்டாங்கமா உடம்பு தரைலபட நமஸ்காரம்பண்ணிட்டு வாஉனக்கு அப்புறமா விளக்கமாசொல்றேன்” என்று அவரை அனுப்பி வைத்தார்.

அவரும் ஒரு பத்து நாள் கழித்துசாமிநீங்கசொன்னதைச் செய்துட்டேன்எங்க குலதெய்வம்பேச்சாயிங்கற ஒரு அம்மன்அதோட கோயில் ஒருமலை அடிவாரத்துல இடிஞ்சுபோய் கிடந்துச்சு.யாருமே போகாம விட்டதாலகோயிலை புதர்மூடிடுச்சுநானும் என் மக்களும் போய் புதரை எல்லாம்வெட்டி எறிஞ்சோம்அங்கஒரு நடு கல்தான்பேச்சாயிஏதோ எங்களால முடிஞ்ச அளவுக்குஅதுமேல பால ஊத்தி அபிஷேகம் செஞ்சுகற்பூரம்காட்டி கும்பிட்டுட்டு வரேன்” என்றார்.

சபாஷ்… அந்தக் கோயிலை நல்லபடியாஎடுத்துக்கட்டுதினசரி அங்க விளக்கு எரியும்படியாபார்த்துக்கோஉன் கஷ்டங்கள் தானா நீங்கிவிடும்.பேச்சாயி பூவும் பொட்டுமா ஜொலிச்சாஉன்குடும்பமும் ஜொலிக்கும்” என்றார் பெரியவர்!

சாமிநிறைய விளக்கமெல்லாம் சொல்றதாசொன்னீங்களே… எதுவுமே சொல்லலியே?”

அடுத்த வருஷம் இதே தேதிக்கு வாஅப்ப சொல்றேன்.நான் சொன்னதை மறந்துடாதே… பேச்சாயியைவிட்டுடாதே!”

அவரும் அவ்வாறே செய்தார்ஒரு வருடமும் ஓடியது.அவரும் பெரியவரைக் காண திரும்ப வந்தார்இந்தமுறை அவரிடம் ஒரு செல்வச் செழிப்பு தெரிந்தது.பெரியவரை ஒன்றும் சும்மா பார்க்க வரவில்லைதட்டுநிறைய பூபழம் இவற்றோடு கொஞ்சம் பணம் என்றுதான் முன்னால் வந்து நின்றார்பெரியவரும்ஏறிட்டார்.

சாமி… நான் இப்ப நல்லா இருக்கேன்பேச்சாயிபுண்ணியத்துல பிள்ளைகளும் நல்லா இருக்காங்க.இதுக்கு வழிகாட்டின பெரியசாமி நீங்கதான்ஆனா,எனக்கு விளக்கத்த மட்டும் இன்னும் தராமலேஇருக்கீங்க… இந்த அதிசயம் எப்படி நடந்தது?” – என்றுதிரும்ப அவர் கேட்டார்பெரியவரும் திருவாய் மலரத்தொடங்கினார்அது…?

ஒரு வருடம் கழித்து திரும்ப வந்த பர்மாக்காரரிடம்குலதெய்வம்’ என்பது குறித்து பெரியவா சொன்னதுமிகவும் கவனமாய் அனைவரும் அறிந்து கொள்ளவேண்டிய ஒன்றாகும்.

நம் முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வம்தான்குலதெய்வமாகும்முன்னோர்கள் என்றால்நமக்குமுன்பிறந்த எல்லோருமே முன்னோர்கள்தான்.ஆனால் இங்கே முன்னோர்கள் என்றால்நாம் நம்தந்தைவழி பாட்டன் பாட்டிமார்களைக் கணக்கில்எடுத்துக் கொள்ள வேண்டும்இந்தத் தந்தைவழிபாட்டன்மார் வரிசையில்மிகப்பெரிய ஒழுங்கு ஒன்றுஇருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம்அதுதான்கோத்திரம்’ என்னும் ஒரு ரிஷியின் வழிவழிப் பாதை.

பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்தவழிவழிப் பாதையில் நம் தாத்தாக்களின் வாழ்க்கைத்துணையாகக் கை பிடித்திருப்பார்கள்எக்காரணம்கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம்ஏற்பட்டிருக்காதுஇதனால்ரிஷி பரம்பரையானதுசங்கிலிக் கண்ணி போல அறுபடாமல்ஒரேசகோதரத்துவத்தோடு வந்த வண்ணம் இருக்கும்இதுஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.

அடுத்துஇவர்கள் அவ்வளவு பேருக்குமே நட்சத்திரம்வேறாகஉடலமைப்பு வேறாககுணப்பாடுகள்வேறாகவும் இருக்கும்அதுதான் இயற்கையும்கூட!ஆனால்கோத்திர வழி மாறாதபடி இவர்கள் நம்குலதெய்வம் என்னும் தெய்வ சான்னித்தியத்தில்கைகூப்பி நின்றிருப்பார்கள்தலைமுடிகொடுத்திருப்பார்கள்காது குத்துவது போன்றவழிவழிச் செயல்பாடுகளும் நடந்துமிருக்கும்.

இந்த உலகத்தில் ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன.அந்தக் கோயில்களுக்கு அவர்கள் போயிருக்கலாம்;போகாமலும் இருக்கலாம்அதற்குஉத்தரவாதமில்லைஆனால்குலதெய்வக்கோயிலுக்குநாம் பக்தி என்கிற ஒன்றை அறிவதற்குமுன்பேநம் தாய் தந்தையரால் அங்கு கொண்டுசெல்லப்பட்டுவணங்க வைக்கவும் படுகிறோம்.இதன்படி பார்த்தால்குலதெய்வ சன்னிதியில் சென்றுநாம் நிற்கும் போதுநம் பரம்பரை வரிசையில் போய்நிற்கிறோம்இந்த வரிசைத் தொடர்பை வேறுஎங்காவதுஎந்த விதத்திலாவது உருவாக்கமுடியுமா?”

பெரியவர் சொல்லச் சொல்லபர்மாக்காரரிடம்பரவசம்!

அது மட்டுமல்லஒரு மனிதனின் பிறப்புக்குப் பின்னேஇப்படியொரு பரம்பரை வரிசை இருப்பதைநினைக்கக்கூட தெரியாமல்அதிகபட்சம் இரு பாட்டன்பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா நம்வாழ்க்கைப் போக்கு உள்ளது?

ஒரு குடும்பத்தைப் பொருத்தவரையில் அந்தஇறைசக்தி குலதெய்வமாகஅவர்களுக்கான ஒருபெயரில் வெளிப்படுகிறதுஇப்படிச் சொல்வதுகூடதவறுவெளிப்படவழிவகை செய்யப்பட்டதுஅதுவும்யாரால்நம் முன்னோர்களால்அவர்கள் யார்?நம்முடைய தொடக்கங்கள்… நாம் யார்அந்தத்தொடக்கத்தின் தொடர்ச்சிமொத்தத்தில்நாம் வேறுஅவர்கள் வேறு இல்லை.

இந்த வழிவழிப் போக்கில் ஒருவர் மூட்டைமூட்டையாகப் புண்ணியத்தைக் கட்டியிருக்கலாம்.இன்னொருவர் பாவமேகூட பண்ணியிருக்கட்டுமே!நாம் அங்கே போய் நின்று நம் பொருட்டுபிரத்யேகமாக வெளிப்படும் அந்த இறைசக்தியைத்தொழும் போதுஅவர்களும் பித்ருக்களாக விண்ணில்இருந்து பார்க்கிறார்கள்நாமும்ஆசீர்வதிக்கப்படுகிறோம்இது எத்தனை தூரப்பார்வையோடுவடிவமைக்கப்பட்ட ஒரு விஷயம்?”

பெரியவர் விளக்கி முடிக்கவந்திருந்த கூட்டம்சிலிர்த்துப் போனதுஇந்தக் குலதெய்வ வழிபாட்டில்மிகப்பெரிய நல்ல சமாச்சாரம் ஒன்றும்அடங்கியுள்ளதுசந்தர்ப்ப சூழல்களால் அல்லது பூர்வகர்மத்தால்அதுவுமல்லாது பல்வேறு காரணங்களால்ஒருவருக்கு பக்தி உணர்வு இல்லாமல் போகிறதுஎன்று வையுங்கள்அதாவதுகண்ணுக்குப் புலப்படாதஇந்தக் கடவுளை நாம் நம்பத் தயாரில்லை.

நான் ஒன்றும் முட்டாளில்லை என்று அவர் வீராப்பாபேசிநாத்திகத்தில் நம்பிக்கை ஏற்பட்டு அதிலேயேஅவர் போகும் நிலை வந்தாலும் பெரிதாய்தோஷமில்லைஏனென்றால்அவர் இவ்வாறு ஒருநாத்திக நிலைப்பாடு கொள்ளும் முன்பேஇந்தப்பரம்பரை வரிசையில் பெற்றோர்களால் வணங்கவைக்கப்பட்டு ஆசீர்வதிக்கவும் பட்டிருப்பதால்அவர்ஒருநாள் நிச்சயம் மனம் மாறி அருள் தொடர்புக்குஆட்படுவார் என்பது தான் இதிலுள்ள மிகச்சிறந்த ஒருவிஷயமாகும்.

இப்படி நம்பிக்கையற்றுப் போனவர்தன் பிள்ளைகளைஅழைத்துவர மாட்டாரேஅவர்கள்இதனால் இந்தப்பரம்பரை தொடர்புக்கு ஆட்படாமல் போய்விடுவார்களே என்று ஒரு கேள்வி எழலாம்.பெரும்பாலும் ஒரு வழியில்ஒரே கோத்திரத்தில்திருமணங்கள் புரிந்து கொள்ளாமல்முன்னோர்காட்டிய வழியில் போகும் பட்சத்தில்வாழ்வில் நமக்குபெரிய கஷ்டங்கள் வருவது இல்லை என்பதுதான்இம்மட்டில் புரிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும்.உடம்புக்கு உணவுப் பொருளால் சக்தி ஏற்படுவதுபோல்மனதுக்கு இறை அருளால் சக்தி ஏற்படுகிறது.

ஒரு குலதெய்வத்தின் பின்னால்இப்படியானபிரத்யேக சிறப்புகள் நிறையவே உள்ளதுகுலதெய்வத்தைப் பக்தியோடு கொண்டாடும்போதுபெரியதோஷங்களுக்கு இடமில்லாமல் போய் நம் வாழ்வும்சிறப்பாகிறதுபர்மாக்காரர் வரையிலும் அதுதான்நிகழ்ந்தது.

எனக்கும் இந்தக் குலதெய்வ விஷயம் மனசுக்குள்பெரும் உற்சாகத்தைத் தந்ததுநான் எங்கள்குலதெய்வக் கோயிலுக்குப் போனபோது என்பார்வையே மாறிப்போனதுஅந்தக் கோயிலில் உள்ளஒவ்வொரு தூண்களையும் தொடும்போதுஎன்தாத்தன் தொட்ட தூண்.. என் தாத்தன் நின்றுமூச்சுவிட்ட இடம்.. என் முப்பாட்டன்அதற்கும்முற்பட்ட பாட்டன் நடந்து திரிந்த தரைப் பரப்பு..அவர்களைப் பார்த்த பெருமாள் என்னையும்பார்க்கிறார் என்பதாஇல்லைஅவர்கள் பார்த்தபெருமாளை நான் பார்க்கிறேன் என்பதா?


ஒன்று உறுதிஅந்தப் பெருமாளை வணங்கிய வம்சம்தொடர்ந்து கொண்டே இருக்கிறதுஇதுவே எத்தனைபெரிய அனுக்ரகம்இந்தக் குலதெய்வ விளக்கமும்,இதன் பின்புலமும் எனக்குள் நம் முன்னோர்கள் மேல்பெரும் மரியாதையை ஏற்படுத்திற்று

1 comment:

  1. என் குலதெய்வம் எப்படி கண்டு பிடிப்பது. என் தகப்பனார் வழி யாரும் இல்லை மற்றும் அவர்கள் இருப்பிடமும் தெரியவில்லை. தயவு செய்து வழி காட்டுங்கள்.

    ReplyDelete