பிரத்யங்கிரா தேவி கோயிலுக்கு பிப்.12 இல் பக்தர்கள் பாதயாத்திரை
By மானாமதுரை
First Published : 04 February 2014 12:02 AM IST
மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலிருந்து சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பிரத்யங்கிரா தேவி கோயிலுக்கு 2ஆவது ஆண்டாக பிப். 12 ஆம் தேதி பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொள்கின்றனர்.
வானம் பொழிந்து அன்புடன் உலக மக்கள் அனைவரும் அனைத்து செல்வங்களையும் பெற்று ஆனந்தமாய் வாழ வேண்டி மானாமதுரை மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோயில் பக்தர்கள் மதுரையிலிருந்து இக் கோயிலுக்கு பாதயாத்திரை மேற்கொள்கின்றனர்.
பிப். 12 ஆம் தேதி காலை மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இருந்து புறப்படும் பக்தர்கள் அங்கிருந்து மானாமதுரை பிரத்யங்கிரா தேவி கோயிலுக்கு 14 ஆம் தேதி மாலை வந்தடைகின்றனர்.
அதன்பின் கோயிலில் நடைபெறும் மாசி மாத பௌர்ணமி விளக்குப் பூஜையில் பக்தர்கள் பங்கேற்கின்றனர். பாதயாத்திரை பயணத்தின் போது வழிநெடுகிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கான ஏற்பாடுகளை மகா பஞ்சமுக பிரத்யங்கிரா வேத தர்ம டிரஸ்ட் நிர்வாகி ஞானசேகரன் சுவாமிகள் மாதாஜி ராஜகுமாரி ஆகியோர் செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment