நாம் பல்வேறு இடங்களுக்கு செல்கிறோம் பல்வேறு தொழில்களைச் செய்கிறோம் பலதரப்பட்ட மனிதர்களுடன் தொடர்பு கொள்ளுகிறோம். நாம் செல்கின்ற இடங்களிலே நம்மைச் சுற்றி தீய சக்திகள் நம்மைத் தாக்கக் கூடியநிலை இருக்கலாம், பிறரிடம் உள்ள சக்தி கூட நம்மை பாதிப்படைய செய்யக் கூடிய நிலை உருவாகலாம். நம்மை பாதிப்பு அடையச் செய்யக் கூடிய எந்த விதமான எதிர்மறை சக்திகளும் முரண்பட்ட சக்திகளும் நம்மைத் தாக்காமல் இருக்க இருப்பதற்காக பயன்படுத்துவது தான் கட்டு மந்திரம்.
நம்மை பிடிக்காதவர்கள் நம்முடைய விரோதிகள் நம்மை அழிப்பதற்காக பயன்படுத்தும் ஏவல், பில்லி, சூன்யம் போன்றவைகளும், பேய் பிசாசுகளும் நம்மை அணுகி நம்மை பாதிப்பு அடையச் செய்யாமல் இருப்பதற்காகவும் பயன் படுத்துவது தான் இந்த கட்டு மந்திரம்.
மந்திரம் தினமும் உச்சாடணம் செய்பவர்கள், தனக்கு விருப்பப்பட்ட தெய்வத்தின் மந்திரத்தை உச்சாடணம் செய்பவர்கள், கட்டு மந்திரத்தை செய்தபிறகே தனக்கு விருப்பப்பட்ட தெய்வத்தின் மந்திரத்தை உச்சாடணம் செய்ய வேண்டும். ஏனென்றால் எந்த மந்திரத்தை நாம் உச்சாடணம் செய்தாலும் மந்திரத்தை உச்சாடணம் செய்து கொண்டிருக்கும் பொழுது ஆத்மா விரிவடைகிறது. ஆத்மா விரிவடைந்து பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்கிறது மந்திரத்தை உச்சாடணம் செய்து விட்டு முடித்தவுடன் ஆத்மா சுருங்கி தன் பழைய நிலையை அடைகிறது.
ஆன்மா விரிந்த நிலையில் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து விதமான சக்திகளுடன் தொடர்பு கொண்டு அதில் உள்ள சாராம்சத்தை எடுத்துக் கொண்டு உடலுக்குள் வருகிறது. அந்த சக்திகளில் உடலுக்கும் உயிருக்கும் துன்பத்தை தரக்கூடிய சக்திகளும் இருப்பதால் அவைகள் உடலையும் உயிரையும் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் வாழ்க்கையிலும் பல்வேறு பிரச்சினைகளைக் கொண்டு வந்து விடுகிறது.
கட்டு மந்திரத்தை போட்டுக் கொண்டு மந்திரத்தை உச்சாடணம் செய்யும் போது கட்டு மந்திரம் ஒரு வடிகட்டியாகச் செயலபட்டு நம்மை தீயவைகளிலிருந்து உடலையும், உயிரையும் பாதுகாக்கிறது.
ஓஸோன் எப்படி இந்த புவியைச் சுற்றி ஒரு கவசம் போல் இருந்து புவியை பாதிக்கக் கூடியவைகளை தடுத்து நிறுத்தி வடிகட்டியாகச் செயல்படுகிறதோ அதே அடிப்படையில் இந்த கட்டு மந்திரமும் செயல்படுகிறது.
எந்த உச்சாடணம் செய்தாலும் முதலில் செய்ய வேண்டியது திக்கு கட்டு இரண்டாவதாக செய்ய வேண்டியது உடல்கட்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
எந்த உச்சாடணம் செய்தாலும் முதலில் செய்ய வேண்டியது திக்கு கட்டு இரண்டாவதாக செய்ய வேண்டியது உடல்கட்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
நம்மைச் சுற்றிலும் ஒரு கவசம் உருவாகும். ஒரு முறை நம்மைச் சுற்றிலும் கவசம் உருவாகி விட்டால் எப்பொழுதும் நம்மை சுற்றியே கவசம் இருக்கும். ஆன்மா விரிவு அடைய அடைய அதற்கு ஏற்றாற்போல் இந்தக் கவசமும் விரிவடைந்து செல்லும். நம் மந்திரத்தின் எண்ணிக்கை கூட கூட கவசத்தின் அதிர்வுகளை நாம் உணர முடியும்.
சில பிராணாயாமம் எல்லாம் நேரடியாக ஆத்மாவோடு தொடர்பு கொண்டது. உபாசனை சக்தி என்பது வேறு. கணபதி, அனுமார் இவர்கள் போன்ற தெய்வங்களுக்கு உபாசனை மந்திரம் உண்டு. ஆனால் பிராணாயாமம் என்பது அண்டத்தோடு தொடர்பு கொண்டது. லேசில் செய்யவிடாது. என்னென்ன தடைகள் ஏற்படணுமோ, அத்தனையும் ஏற்படும். கட்டு மந்திரம் சித்தியடைந்தால் அந்த கவசம் நம் கண்களுக்கு தெரியும்.

No comments:
Post a Comment