ஸ்ரீ சரபேஸ்வரரின் இரு இறக்கைகளில் ஒன்றாக தோன்றியவள் ப்ரத்தியங்கிரா தேவி. இவள் பயங்கரமான உருவமும், கருணை உள்ளத்தினையும் கொண்டவள். இத்தேவிக்கு சிங்கமுகத்தினை போன்ற ஆயிரம் திருமுகங்கள் உண்டு.
தட்சனை அழித்திட நினைத்த சிவன், வீரபத்திரரை அனுப்ப, அவருக்கு தட்சனை அழிக்கக்கூடிய அபரிமிதமான சக்தியை அளித்தவள் இப்பிரத்தியங்கிரா தேவி என்னும் பத்ரகாளியேயாவாள்.
மேலும் தாருகாசுரன் என்னும் அரக்கனை அழித்திட சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றியவளும் இப்பத்ரகாளியேயாவாள். ப்ரத்யங்கிரா தேவியின் மந்திரத்தினை கண்டு பிடித்தவர்கள் பிரத்யங்கரஸ், அங்கிரஸ் என்னும் இரு ரிஷிகளாவார்கள்.
சக்திமிக்க இப்பத்ரகாளியால் படைக்கப்பட்வர்களே காளி, வைஷ்ணவி, சாந்தா, சாமுண்டி, முண்டபார்த்தினீ, த்வரிதா, பத்ரா, காத்யாயினி என்னும் வடிவங்களாகும். இவள் பைரவரின் மஹிஷியாவாள்.
No comments:
Post a Comment