நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Wednesday, 19 March 2014

நவக்கிரஹ வழிபாடு


நவக்கிரஹ வழிபாடு:-

நவக்கிரஹங்களும் தெய்வங்களும் நாம் இந்த ஜன்மத்தில் கொண்டு வந்த வினைகளை (பிராரப்த கர்மா ) அனுபவிக்க சூழ்நிலையையும்,எண்ணங்களையும் உண்டாக்குகின்றனர்.எனவே,நவக்கிரகங்களை, தெய்வங்களை பழிப்பது கூடாது. இருப்பினும்,அவர்களை வழிபட்டால் நன்மைகளை நிறைவாகவும்,தீமைகளின் கெடுபலன்களை குறைத்தும் அருள்செய்வார்கள்.

தற்சமயம் எந்த கிரகத்தின் தசா புத்தி நடைபெற்று வருகிறதோ அதற்கான மந்திரத்தை  ஜெபித்து வரலாம்.மேலும,அவற்றிற்கான கூடுதல் பலன்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.

1.சூர்யபகவான் :-

ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரௌம் சஹ சூர்யாய நமஹ||

வேலையில்,அரசியலில்,உடல்நலத்தில் குறிப்பாகத் தலை தொடர்பான வியாதிகளை  தீர்க்கும். தந்தைகள் இம்மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் தங்கள் கடமைகளை செவ்வனே செய்ய தகப்பன் ஸ்தானத்துக்கு அதிபதி கிரகமான சூர்யன் அருள்வார்.


2.சந்திரபகவான் :-

ஓம் ஸ்ராம் ஸ்ரீம் ஸ்ரௌம் சஹ சந்திராய நமஹ|

மனக்குழப்பம்,வேதனைகள்,வயிறு,மற்றும் இரத்தம் தொடர்பான வியாதிகள் நீங்கும்.தாய்மார்கள் இம்மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் தங்கள் கடமைகளை செவ்வனே செய்ய தாய்  ஸ்தானத்துக்கு அதிபதி கிரகமான சந்திரன் அருள்வார்.


3.செவ்வாய்பகவான்:-

ஓம் க்ராம் க்ரீம் க்ரௌம் சஹ பௌமாய நமஹ|

கணவன்,மனைவி உறவு மேம்படும்.வாகனங்கள் ,வீடு,சொத்து  வாங்க மற்றும் அது தொடர்பான பிரச்சனைகள் தீரும்.விபத்துகள் ஏற்படாமல் தடுக்கும்.

4.குருபகவான்:-

ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரௌம் சஹ ப்ரஹஸ்பதயே நமஹ||

வாழ்வில் எடுத்த காரியங்களில் வெற்றியும்,பாதுகாப்பும் ஏற்படும்.சமூகத்தில் மதிப்பும்,மரியாதையும் ஏற்படும்.தொழில்,வேலையில் முன்னேற்றம் உண்டாகும்.

5.சனிபகவான்:-

ஓம் க்ஹ்ராம் க்ஹ்ரீம் க்ஹ்ரௌம் சஹ சனீஸ்வராய  நமஹ|

காரியத்தடை,கடன்,வறுமை,அவமானம்,வியாதிகள் நீங்கும்.


6.புதபகவான்:-

ஓம் ப்ராம் ப்ரீம் ப்ரௌம் சஹ புதாய நமஹ|

புத்திக்கூர்மை,கலைகளில் தேர்ச்சி உண்டாகும்.தொழில் வெற்றி,வாக்குவன்மை உண்டாகும்.

7.சுக்ரபகவான்:-

ஓம் த்ராம் த்ரீம் த்ரௌம் சஹ சுக்ராய நமஹ|

பொன்,பொருள் சேர்க்கை,கலைகளில் சிறப்புத்தேர்ச்சி,பெண்களுடன் சிறப்பான தொடர்புகொள்ளும் திறன் உண்டாகும். 

8.ராகுபகவான் :-

ஓம் ப்ஹ்ராம் ப்ஹ்ரீம் ப்ஹ்ரௌம் சஹ ராகவே  நமஹ|

மனக்குழப்பம்,தீய சக்திகளால் தொல்லை,சட்டப்பபிரச்சனைகள் தீரும்.


9.கேதுபகவான் :-

ஓம் ப்ராம் ப்ரீம் ப்ரௌம் சஹ கேதவே நமஹ|

இழந்த புகழை  மீண்டும் பெறலாம்.தீய ஆவிகளின் தொல்லை ,ஏவல் தீரும்.
ஒவ்வாமை தொடர்பான வியாதிகள் நீங்கும்.திடீர் தீய நிகழ்வுகளில் இருந்து  பாதுகாப்பு கிட்டும்.


வாழ்க வையகம்| வாழ்க வளமுடன்||

No comments:

Post a Comment