நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Sunday, 8 May 2016

முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள்


சித்தர் முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள்




என் சுவாச காற்றினுள்ளே இருந்து இயக்கி என்னை வழிநடத்தும் மானாமதுரை சுவாமிஜி குருவருளை துணைக்கொண்டு சித்தர் முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் அவர்களைப் பற்றிய படிக்கும் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் சந்தோஷம் அடைகிறேன்.
வாத்தியார் ஐயா என்று அன்புடன் மக்களால் அழைக்கப்படும் சித்தர் முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் ஜீவசமாதி திருக்கோவில் சிங்கம்புணரியில் அமைந்துள்ளது. இதற்கு மதுரை, புதுக்கோட்டை, பொன்னமராவதியில் இருந்து பஸ்வசதிகள் உள்ளது.எல்லா சித்தர்கள் சமாதியிலும் மூலஸ்தானத்தில் சிவலிங்கம் பிரதிஸ்டை செய்யப்பட்டு இருக்கும். இந்த விசயம் மிகவும் வித்தியாசமான ஒன்று ஆகும். சுவாமிகள் சமாதி அடைவதற்கு 12 வருடத்திற்கு முன்பே சுடுகாட்டில் காட்டுப்பகுதியில் தன்னுடைய உருவத்தைப் போன்று உருவச்சிலையை சிற்பியைக் கொண்டு வடிவமைத்து அதனை சேர்த்து அணைத்து தினசரி தியானம் செய்து தன்னுடைய தவசக்தியை அந்த சிலைக்கு மாற்றியமைத்துக் கொண்டார். அந்த சிலைதான் சுவாமியின் சமாதியில் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது.தொடர்ந்து 3 பௌர்ணமி பூஜைக்கு சென்று வழிபாடு செய்தால் சுவாமியின் அருள் பார்வை கட்டாயம் நமக்கு கிடைக்கும்.சுவாமியின் பௌர்ணமி பூஜையில் விடாது சென்று வழிபாடு செய்து வருபவர்களுக்கு எப்படிப்பட்ட கோர்ட், கேஸ் வழக்கிலும் வெற்றி தேடிவரும். பூர்வீக சொத்துக்களின் பிரச்சனைகள் தீர்வு ஏற்படும். ரியல் எஸ்டேட் தொழில் செய்வோருக்கு தொழிலில் விருத்தியும், லாபமும் உண்டாகும். செவ்வாய் திசையில் ஏற்படும், கெடுபலன்களுக்கு செவ்வாய் கிழமை எலுமிச்சை லைமாயை சுவாமிக்கு சாற்ற் அதனை வீட்டின் வாசலில் கட்டி தொங்கவிட பாதிப்புகள் நீங்கும். ஓரிஜினல் பசும் சாணம் விபூதியைக் கொண்டு சுவாமியின் திருமேனியில் அபிஷேகம் செய்து பத்திரமாக எடுத்து வைத்துக் கொண்டால் சீர்பிடித்த குழந்தைகளுக்கு பொட்டு நோயை நீக்கலாம். தினசரி சிறிதளவு பஞ்சகவ்வியத்தில் கலந்து சாப்பிட்டுவர எப்படிப்பட்ட சரும வியாதியும் நீங்கும். படிப்படியாக நோயின் பாதிப்புக் குறையும். ஆனால் கட்டாயம் சைவ உணவு பாதுகாப்பு சாப்பிட வேண்டும். சிறிதளவு பன்னீரில் கலந்து நெற்றியில் வாத்தியார் ஐயா என்று திலகம் நெற்றியில் வைக்க துஷ்ட ஆவிகள் ஓடி ஒளியும். சுவாமியின் திருஉருவப்படத்தை வீட்டில் வைத்து பூஜை செய்தாலே தேவையற்ற முனி ஓட்டங்களும் விலகிச் செல்லும்

No comments:

Post a Comment