கடன் தொல்லை நீக்கும் லட்சுமி நரசிம்மர் கோவில், கீழப்பாவூர், திருநெல்வேலி.

திருநெல்வேலி மாவட்டம் பாவூர்சத்திரம்– சுரண்டை செல்லும் சாலையில் உள்ளது கீழப்பாவூர். இங்கு சைவ, வைணவ புராணச் சிறப்புமிக்க இரண்டு ஆலயங்கள் அருகருகே அமைந்துள்ளன. வாலி வழிபட்ட சிவகாமி அம்பாள் சமேத திருவாலீஸ்வரர் கோவில், வயல் வெளிகளுக்கு மத்தியில் இருக்கிறது. இதன் அருகிலேயே ரிஷிகளுக்கு காட்சி கொடுத்து நரசிம்மர் கோவிலும் உள்ளது. இத்தலத்தில் சப்த மகரிஷிகளில் ஒருவரான காசியபர், வருணபகவான், சகோஷன் என்ற முனிவர் ஆகியோர் மகாவிஷ்ணுவை வழிபட்டனர். அதன்பேரில் மகாவிஷ்ணு அவர்களுக்கு நரசிம்மராக காட்சி கொடுத்தார். இந்த நரசிம்மரை வழிபட்டால் எதிரிகளின் தொல்லை அகலும். கடன் தொல்லை நீங்கி செல்வம் செழிக்கும். வியாபாரம் பெருகும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
No comments:
Post a Comment