நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Saturday, 21 November 2015

நமது கர்மவினையை மாற்றும்சக்திஅன்னதானம்

நமது கர்மவினையை மாற்றும்சக்திஅன்னதானம்






நமது சொந்த ஊரில் ஒரு நாளுக்கு 1,00,000 பேர்கள் வீதம் ஓராண்டுக்கு அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ,அவ்வளவு புண்ணியம் காசியில் ஒரு சாதாரண நாளில் ஒருவர் வீதம் மூன்று வேளைகளுக்கு அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்;
காசிக்குச் சென்று ஒரு நாளுக்கு 1,00,000 பேர்கள் வீதம் ஓராண்டு வரை தினமும் அன்னதானம் நாம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்கும்? அவ்வளவு புண்ணியம் நம்ம அண்ணாமலையில் ஒரு சாதாரண நாளில் ஒருவர் வீதம் மூன்று வேளைகளுக்கு அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்
துவாதசி திதியன்று அண்ணாமலையில் ஒரு வேளைக்கு ஒருவர் வீதம்,மூன்று வேளைகளுக்கு அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்கும் தெரியுமா?நாம் பிறந்தது முதல் இறக்கும் வரையிலும் ஒவ்வொரு நாளும் 1,00,00,000 (ஒரு கோடி)பேர்களுக்கு காசியில் அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ,அதை விட அதிகமான புண்ணியம் நமக்குக் கிடைக்கும்.,மேலும் மறுபிறவியில்லாத முக்தி கிடைக்கும். ஆதாரம்: (சிவபுராணம்).பூர்வபுண்ணியம் உள்ளவர்களே இவ்வாறு அன்னதானம் செய்ய முடியும் என்பதையும்,அந்த துவாதசி அன்னதானத்தை நமது முன்னோர்கள் சூட்சுமமாக வந்துஏற்றுக்கொள்வார்கள் என்பதையும் உணர்வுபூர்வமாக உணர முடிந்தது

நமது கடந்த ஐந்துபிறவிகளில் நாம் செய்த நல்வினை மற்றும் தீவினைகளின் தொகுப்பை அனுபவிக்கவே நாம் இந்த ஜன்மத்தில் மனிதபிறவி எடுத்திருக்கிறோம்.அதே போலநமது பெற்றோர்களின் ஐந்து முந்தைய தலைமுறையினர் செய்த நல்வினைகள் மற்றும் தீவினைகளின் தொகுப்பில் எட்டில் ஒரு பங்கையும் சேர்த்தே அனுபவிக்கும் விதமாக நமது பிறப்பும், நமது ஜனன ஜாதகமும் அமைந்திருக்கிறது. மீதி ஏழு பங்குகள் பிற நமதுதாத்தா பாட்டியின் பேரன் பேத்திகளுக்கு பிரிந்துவிடும்



நமது கர்மாக்களை நாம்தான் அனுபவிக்க வேண்டும்.நம் சார்பாக வேறு யாரும் அதைச் சுமக்க முடியாது. மாற்ற முடியாது; பூஜைகள், பரிகாரங்கள் மூலமாக நமதுதீயக்கர்மாக்களை நம்மால் குறைக்க முடிந்தாலும், அந்த பூஜைகள், பரிகாரங்களில் நாம் நேரடியாகக் கலந்து கொண்டால் மட்டுமே நமது தீயக்கர்மவினைகள் குறையதுவங்கும்;அதே சமயம் அந்த பூஜைகள், பரிகாரங்களை நாம் மனப்பூர்வமாகச் செய்ய வேண்டும்.அப்போதுதான் அவைகள் சூட்சுமமாகச் செயல்படும்.



நமது கர்மவினையை மாற்றும் சக்தி (கலியுகத்தில்) அன்னதானத்துக்கு மட்டுமே உண்டு

No comments:

Post a Comment