வாலை ஷேத்ரம் வருஷாபிஷகம்




திருச்செந்தூரில் இருந்து திசையன்விளை செல்லும் சாலையில் உள்ளது கொம்மடிக்கோட்டை என்ற ஊர். இந்த கிராமத்தில் ஸ்ரீவாலைகுருசாமி கோவில் இருக்கிறது. இத்தலத்தில் சித்தர்கள் தங்களின் இஷ்ட தெய்வமாக வணங்கிய வாலாம்பிகை அம்மன் அருள்பாலித்து வருகிறாள். இந்த அம்மனுக்கு பாலாம்பிகை என்ற பெயரும் உண்டு.
திருநெல்வேலி மாவட்டம் திசையான் விளை கொம்மடி கோட்டையில் உள்ள வாலை ஷேத்ரம் என்று அழைக்கப்படும் ஸ்ரீ வாலைகுரு ஸ்வாமிகள், ஸ்ரீ காசியானந்த ஸ்வாமிகள் ,
ஸ்ரீ பாலாம்பிகை கோயில் வருஷாபிஷகம் செப்டம்பர் 04 தேதி ஞாயிறு அன்று நடைபெறுகிறது. 04-09-16 முதல் பத்து நாட்கள் லலிதா சஹஸ்ரநாம பாராயணம் நடைபெறுகிறது. இந்த திரு விழாவில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ பாலாம்பிகை மற்றும்ஸ்ரீ வாலைகுரு ஸ்வாமிகள் ,ஸ்ரீ காசியானந்த ஸ்வாமிகள் திருவரூள் ஆசிர்வாதம் பெற அன்புடன் அழைக்கிறோம் .


No comments:
Post a Comment