நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Thursday, 31 March 2016

ஸ்ரீ ராஜமாதங்கி எனும் ஸ்ரீ ஷ்யாமளா வழிபாடு


ஸ்ரீ ராஜமாதங்கி எனும் ஸ்ரீ ஷ்யாமளா வழிபாடு



ஸ்ரீ ராஜமாதங்கி எனும் ஸ்ரீ ஷ்யாமளா வழிபாடு

இசை,இலக்கியம் ,நடனம் மற்றும் சகலகலைகளிலும் சிறப்பான தேர்ச்சியும்,பதவி நிர்வாக சாமர்த்யமும் நல்கும் ஞான வடிவினள் அன்னை ஸ்ரீ ராஜமாதங்கி எனும் ஸ்ரீ ஷ்யாமளா தேவி .அந்த அன்னையை வணங்கி அவளை வழிபடும் முறைகளை விளக்குகிறேன்.

மந்திர சாஸ்திர உபாசனையில் மேலான இடம் வகிக்கும் ஸ்ரீ வித்யா உபாசனையில் முதலில் 
ஸ்ரீ மஹா கணபதி மந்திரம் ,ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி மந்திரம்,பின்னர் ஸ்ரீ ராஜமாதங்கி மந்திரம் உபதேசிக்கப்படும் அதன் பிறகே ஸ்ரீ வாராஹி மந்திரம் உபதேசம் செய்யப்படும்..

ஸ்ரீ மகாகணபதி,ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி உபாசனை இரண்டும் சித்தி செய்தவர்களுக்கு எந்த மந்திரமும் எளிதில் சித்திக்கும்.
ஸ்ரீ மகாகணபதி,ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி உபாசனை ஸ்ரீ வித்யா உபாசனைக்கான உள்ளப்பண்பாடு,சித்த சுத்தி,சத்வ குணம், இவற்றை நல்கும்.அது ஸ்ரீ ராஜமாதங்கி வழிபாட்டில் முழுமை பெறும்.


ஸ்ரீ மதங்க முனிவர் ஸ்ரீ பஞ்சதசி மந்திரத்தை அக்ஷர லக்ஷம் ஜெபம் செய்து ஸ்ரீ ராஜராஜேஸ்வரியின் தரிசனம் பெற்று அவளையே தன் மகளாக பிறக்க வேண்டும் என்று வரம் பெற்றார்.அதன் பயனாக 
ஸ்ரீ ராஜமாதங்கி மதங்க முனிவரின் மகளாக ஆடி மாதம் வெள்ளிக்கிழமை அன்று தோன்றினாள். ஸ்ரீ ராஜராஜேஸ்வரியின் கரத்தில் உள்ள கரும்பு வில்லில் இருந்து உண்டானவள்.ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி எனும் பராசக்தியின் மந்திரியாய் விளங்குகிறாள்.அவளின் ராஜ்ய பாரம் முழுதும் கவனிப்பவள்.சங்கீதத்திற்கு இவளே அதிபதி(அதிஷ்டான தேவதை .

ஸ்ரீ ராஜமாதங்கி நம் உடலில் புத்தி தத்துவமாகவும்,ஸ்ரீ வாராஹி நம் உடலில் சைதன்ய தத்துவமாகவும் விளங்குகிறார்கள்.மனம் செயல்பட புத்தியும்,உடல் செயல்பட சைதன்யமும் வேண்டும்.ஸ்ரீ ராஜராஜேஸ்வரிக்கு மிக நெருக்க மானவர்கள் இவர்கள் இருவரே இதற்கு மேல் உயர்ந்த ஸ்தானம் வகிப்பது பராசக்தி ஸ்ரீ ராஜராஜேஸ்வரியே .

இவளை அனாஹத சக்கரம் என்ற ஹ்ருதய ஸ்தானத்தில் தியானிக்க வேண்டும்.

இவளது அங்க தேவதை லகு ஷ்யாமளா,உபாங்க தேவதை வாக்வாதினி ,பிரத்யங்க தேவதை நகுலீ.இவர்கள் சாதகனுக்கு நல்ல வாக்குவன்மை, கலைகளில் தேர்ச்சி ,சங்கீத ஞானம்,சகலகலா பாண்டித்தியம் அருள்வார்கள்.

இவள் உபாசனை அருள்,புகழ் பெற்றோர் 
ஸ்ரீ மகாகவி காளிதாசர், ஸ்ரீ பாஸ்கரராயர்,சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ முத்துஸ்வாமி தீட்சிதர் ஆகியோர்.

மதுரை மீனாக்ஷி ஸ்ரீ ராஜமாதங்கி அம்சம்.திருவானைக்காவல் 
ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி ஸ்ரீ மகா வாராஹி அம்சம்.எனவே இவள் மந்திரத்தை ஜெபிக்க ஆரம்பிப்பவர்கள் மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் வைத்து ஜெபத்தைத் தொடங்கலாம்.

ஸ்ரீ ராஜமாதங்கியைத் தினமும் வழிபடலாம். அதிலும், அஷ்டமி, பௌர்ணமி, சித்திரை மாதம் வளர்பிறை,மாசி மாதம் வளர்பிறைகளிலும் வழிபட,பூஜை செய்ய இவள் பேரருள் பெறலாம்.

அரசாங்க காரிய வெற்றி,சர்வ ஜன வசீகரம்,பெரிய பதவிகள் கிடைத்தல், அவற்றைச் சிறப்பாக நிர்வாகம் செய்தல் போன்ற பலன்களுக்கு ஸ்ரீ ராஜமாதங்கியையும்,சங்கீதம்,கலைகளில் தேர்ச்சி இவைகளுக்கு ஸ்ரீ லகு ஷ்யாமாவையும் வழிபடலாம்.



ஸ்ரீ ராஜமாதங்கியின் 16 திருநாமங்கள்:-

1.சங்கீதயோகினி
2.ஷ்யாமா
3.ஷ்யாமளா
4.மந்திரநாயிகா
5.மந்திரிணி
6. சசிவேசானி
7.ப்ரதானேசி
8.சுகப்ரியா
9.வீணாவதி
10.வைணிகீ
11.முத்ரிணி
12.ப்ரியகப்ரியா
13.நீபப்ரியா
14.கதம்பேசி
15.கதம்பவனவாசினி
16.சதாமதா

No comments:

Post a Comment