நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Saturday, 6 August 2016

பண புழக்கத்திற்க்கு எளிய பரிகாரம்

பண புழக்கத்திற்க்கு எளிய பரிகாரம்

மேலை நாடுகளில் கடைபிடித்து வரும் தாந்த்ரீக முறைகளில் சிலவற்றை இனி உங்களுக்கு அளிக்கலாம் என உள்ளேன். இவை அனைத்தும் பரிசோதிக்கபட்டவை ஆகும். ஆகையால் அனைவரும் செய்து பயன் அடையலாம்.

இதை  இரவு (வெள்ளிக்கிழமைகளில்) 8-9 மணிக்குள் செய்தால் பலன் இரட்டிப்பு ஆகும்.சாதாரண நாட்களிலும் செய்யலாம்-கால நேரம் பார்க்க வேண்டியதில்லை.

சிறிய வெள்ளி அல்லது கண்ணாடி கிண்ணம் எடுத்து கொள்ளவும். அதில் சம அளவு உப்பு, சர்க்கரை மற்றும் அரிசி சேர்க்கவும்.

அதற்கு நடுவில் ஒரு புத்தூசி அல்லது காப்பூசி எனப்படும் சேஃப்டி பின் ஒன்றை மேல் நோக்கி இருக்குமாறு சொருகவும். பின்பு கிண்ணத்தை கையில் ஏந்தி பிரபஞ்சத்திடம் (கடவுளிடம்) தங்களுக்கு என்றும் உணவு, உடை, உறைவிடம் மற்றும் செல்வம் தங்கியிருக்க பிரார்த்தனை செய்து கொண்டு, கிண்ணத்தை வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் (கிண்ணத்தை மூடாமல்) வைத்து விடவும். தென் மேற்கு மூளையில் கிழக்கு நோக்கியும், வட கிழக்கு மூளையில் மேற்கு நோக்கியும் வைப்பது இரட்டிப்பு பலன் தரும். இதை தினமும் ஒரு முறை பார்த்து மனதினுள் மேற்கண்ட பிரார்த்தனை செய்து வந்தால் போதும்.மந்திர உச்சரிப்புகள் ஏதும் தேவை இல்லை. அன்றாடம் சிறு முன்னேற்றமாவது வந்து கொண்டே இருப்பதை கண் கூடாக காணலாம். இவை தூசி படர்ந்து அழுக்கானவுடன், வேறு இதே முறையில் மாற்றி வைக்கவும். வாழ் நாள் முழுதும் செய்யலாம். முடிந்த அளவு பொருட்கள் சேர்த்தால் போதும்-அவரவர் வசதிக்கேற்ப்ப.

No comments:

Post a Comment