நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Wednesday, 17 August 2016

ஆனந்த வாழ்வளிக்கும் ஆவணி அவிட்டம் வழிபாடு

ஆனந்த வாழ்வளிக்கும் ஆவணி அவிட்டம் வழிபாடு



ஆவணி அவிட்டம் - 18.08.2016

ஆவணி மாத அவிட்ட நட்சத்திரத்தன்று பூணூல் அணியும் விழாவை சிறப்பாகக் கொண்டாடுவர் பிராமணர்கள். பொற்கொல்லர்கள், தேசிகர்கள் ஆகியோர் பூணூல் அணிபவர்கள். இவர்கள் அன்று குருமுகமாக பூஜை செய்த பின் பழைய பூணூலை அகற்றி விட்டு புதுப்பூணூல் அணிந்து கொள்வார்கள். இதை வீட்டில் செய்ய இயாலதவர்கள் குழுக்களாக ஒன்றுகூடி கோயிலுக்குச் சென்று அணிந்துகொள்வார்கள். உபநயனம் என்ற பூணூல் கல்யாணத்தை, பூணூல் அணிபவர்கள் தங்கள் வீட்டு ஆண் குழந்தைகளுக்கு மூன்று முதல் ஏழுவயதிற்குள் நடத்துவார்கள். இதையொரு கல்யாண வைபம் போலவே சீரும் சிறப்பாகச் செய்வார்கள். அப்போது குழந்தையை தந்தைமீது அமரவைத்து பிரம்மோபதேசம் செய்வார்கள்.

அதன்பின் புதிய பூணூலை முதன் முறையாக அக்குழந்தைக்கு அணிவிப்பார்கள். தந்தை தான் குழந்தையின் முதல் குரு. மனிதர்களுக்கு இயற்கையாக இருக்கும் இரு புறக்கண்களுடன் மூன்றாவதாக உள்ள கண்தான் அகக்கண். அந்த அறிவுக்கண்ணைத் திறந்து வைப்பதற்கான நிகழ்ச்சிதான் உபநயனம். அறிவைத் தேடி புறப்படும் குழந்தைக்கு தந்தையின் உபதேசமும் தாயின் ஆசியும் கிடைக்கச்செய்யும் நிகழ்ச்சிதான் உபநயன விழா. காயத்ரி மந்திரத்தில் 24 எழுத்துக்கள் உண்டு. 11 சொற்கள் கொண்டது இம்மந்திரம். இதைவிட சிறந்த மந்திரம் வேறில்லை என்பர். ஞானம் பெற விரும்பிய முனிவர்கள் வேதக்கடலைக் கடைந்தபோது த்ரயி என்ற வேதாசாரம் கிடைத்தது.

அதை காணமதி என்ற மத்தினால் கடைந்தவுடன் காயத்ரி தேவியின் வடிவம் தோன்றியது வேதங்களின் தாய் காயத்ரி. இத்தனை சிறப்புமிக்க காயத்ரிதேவிக்கு ஐந்து முகங்களும் பத்து கரங்களும் உண்டு. சரஸ்வதி, பார்வதி, மகேஸ்வரி, லட்சுமி, மனோன்மணியாகிய இந்த முகங்கள் பவள நிறம், பொன்னிறம், ஆகாய நீலம், தூய வெண்ணிறம், முத்து போன்ற நிறங்களை உடையவை. இவை சிவனைப்போல ஐந்தொழில்களைப் புரிகின்றன. காயத்ரிதேவி காலையில் குழந்தையாகவும், மதியம் நடுத்தர வயதினளாகவும், மாலையில் முதிய தோற்றத்துடன் காட்சிதருகிறாள். காலை பிரம்ம சொரூபிணியாகவும் நடுப்பகல் ருத்ர சொரூபிணியாகவும், மாலையில் விஷ்ணு சொரூபிணியாகவும் அருள்புரிகிறாள். காயத்ரி தேவியின் வாகனம் அன்னம்.

காயத்ரி மந்திரம் 24 எழுத்துக்கள், 11 சொற்கள் கொண்டது.

ஓம், பூர், புவஸ்ஸுவ
தத், ஸவிதுர், வரேண்யம்,
பர்கோ, தேவஸ்ய தீமஹி
தியோ, யோநஹ், ப்ரசோதயாத்.

உபநயனம் முடிந்தபின் முப்புரி நூலாகிய யக்ஞோபவீதத்தை அணிந்து கொண்ட பிள்ளைகள் தினமும் மூன்று வேளை சந்தியாவந்தனம் செய்ய வேண்டும் அப்போது இந்த காயத்தரி மந்திர ஜெபம் செய்ய வேண்டும். இதை எல்லாரும் சுலபமாகச் செய்யலாம். இதற்கு தண்ணீர் தவிர வேறு திரவியம் தேவையில்லை. ஆயுட்காலம் உள்ளவரையும் உடலில் தெம்பு உள்ளவரையும் தினம் தவறாமல் கண்டிப்பாக செய்ய வேண்டும். தினமும் காலையில் கிழக்கு முகமாக நின்றபடி, இருகைகளையும் துணியால் மூடி, முகத்திற்கு நேராக கைகளை வைத்தபடி ஜெபிக்க வேண்டும்.

மதியம் கிழக்குமுகமாக அமர்ந்தும் மாலையில் மேற்குமுகமாக அமர்ந்தும் சூரியனைப் பார்த்தபடி ஜெபிக்க வேண்டும் 21 முறை, 108 முறை, 1008 முறை என்ற எண்ணிக்கையில் ஜெபிப்பதும் நலம். 11 சொற்களை, கையில் 11 இடங்களைத் தொட்டுத் தொட்டு இந்த ஜெபத்தைச் செய்ய வேண்டும். முதலில் சுண்டுவிரல் அடியிலிருந்து மூன்று கணுக்களைத் தொட்டும், மோதிவிரல் நுனி, நடுவிரல் நுனி, ஆள்காட்டி விரல் நுனி, கட்டைவிரலில் இரு கணு, ஆள்காட்டி விரல் கீழ்க் கணு, நடுவிரல் கீழ்க் கணு, மோதிர விரல் கீழ்க் கணு என மொத்தம் 11 இடங்களில் தொட்டு ஜெபிக்க வேண்டும்.

உச்சரித்தல் பயன்:

வாய் திறந்து ஜெபித்தால் 10 பங்கு பலன்; வாயசைத்து ஜெபித்தால் 100 பங்கு பலன் மவுனமாக ஜெபித்தால் 1,000 பங்கு பலன் பெறலாம். அஷ்டமாசித்தியும் அஷ்ட ஐஸ்வர்யமும் பெற முடியும். ஆரோக்கியம் அறிவு, பிரம்மதேஜஸ், அழகு கிடைக்கும். மூடனும் ஞானியாவான் தரித்திரனும் செல்வனாவான். மங்களம் உண்டாகும். விரும்பிய லோகம் செல்லலாம். பூவுலகில் வாழும்வரை இகபர சுகம் அனுபவிக்கலாம். நல்ல ஒழுக்க நெறியுடன், உள்ளத்தூய்மையுடன் ஜெபித்தால் மட்டுமே மேற்கண்ட பலன்களைப் பெறலாம்.

No comments:

Post a Comment