நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Tuesday, 9 August 2016

வரலக்ஷ்மி விரதம்


வரலக்ஷ்மி விரதம்
 
12.08.2016 வெள்ளி கிழமை




 


வரலக்ஷ்மி விரதம். இது கர்னாடகாவிலும், ஆந்திராவிலும், தமிழகத்திலும் மிக உற்சாகமாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. 

வருடாந்திரமாக பெண்கள் செய்யும் பூஜைகள் சிலதே. அதிலும், ஆழ்ந்து செய்யும் பண்டிகைகளில் ஒன்று இது. வேலை முதுகை ஒடித்து விடும் தான், ஆனாலும் பூஜை செய்யும் போதும் செய்து முடித்த பிறகும் உண்டாகும் அமைதிக்கு எதுவுமே இணையில்லை. மிகவும் ஸ்ரத்தையோடு செய்ய வேண்டும் என்பதே அடிப்படை.
“பாக்யாத லக்ஷ்மி பாரம்மா- நம்மம்ம நீ சௌபாக்யாத லக்ஷ்மி பாரம்மா….’ “சலங்கை கட்டிய கால்களினால் மெதுவாக அடியெடுத்து வைத்து, அந்த இனிமையான சலங்கை ஒலியால், உன்னை தஞ்சமடைந்து பூஜை செய்யும் பக்தர்களுக்கு தயிரிலிருந்து வரும் நறுமணமான வெண்ணெயைப்போல் வருவாய் தாயே’ என்று அற்புத மான ஸ்ரீராகத்தில் , மத்யமாவதி ராகத்திலும் பாடலைப் பாடும்போதே கண்களில் நீர் பெருகும்; மனம் மகிழ்ச்சியில் பொங்கிடும்;
வரலட்சுமி விரதம் என அழைக்கப்படும் இவ் விரதத்தை விவாகமாகி சுமங்கலியாக வாழும் சுமங்கலிப் பெண்களும், கன்னிப் பெண்களும் மகாவிஷ்ணுவின் தேவியான இலட்சுமி தேவியைக் குறித்துச் அனுஷ்டிக்கும் மிகச் சிறப்பான விரதமாகும்.இதை யார் வேண்டுமானாலும் செய்ய முடியாது. திருமணமான பெண்கள், ஒரு குரு முகமாக எடுத்துக்கொண்டே செய்ய வேண்டும். க்ருஹ ல‌க்ஷ்மியான மருமகள், திருமணமான முதல் வருடத்தில் தீ‌க்ஷை பெற்றுக்கொள்வதானால் எந்த தமிழ் மாதத்தில் இப்பண்டிகை வந்தாலும் பெற்றுக்கொள்ளலாம். இல்லையென்றால், எந்த வருடத்தில் ஆவணி மாதத்தில் வருகிறதோ அப்போது தான் எடுத்துக்கொள்ள முடியும். சாதாரணமாக, நீண்ட வருடங்களாக பூஜை செய்து வரும், இவ்விரதத்தின் தாத்பரியம் நன்கு அறிந்த ஒரு பெண்ணையே குருவாக வரித்து அவர் வந்து பூஜை எப்படி செய்ய வேண்டும் என்று சொல்கிறதை வைத்துத் தான், இம்மி பிசகாமல் ஒவ்வொரு வருடமும் செய்ய வேண்டும். தீக்ஷை பெற்றுக்கொண்ட பிறகு வாழ்நாள் முழுதும் செய்யும் பண்டிகை. ஏதாவது தவிர்க்க முடியாத காரணத்தால் செய்ய முடியாது போனால், அடுத்த வெள்ளிக்கிழமை செய்யலாம்.
ஆடி மாத பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையில்12.08.2016 வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த விரதம் வெள்ளிக்கிழமை நாட்களில் அமைந்தால் அம்பிகை அருள் பூர்ணம்மாக நிறைந்த நாளாக கொள்ளப்பெறுகின்றது.
சகல சௌபாக்கியங்களையும் தரும் லக்ஷ்மியை (அஷ்டலக்ஷ்மியை) வணங்குவதால் வரலக்ஷ்மி விரதம் (வரம் தரும் இலக்ஷ்மி விரதம்) என்றழைக்கப்பெறுகின்றது. மிகவும் பக்தி சிரத்தையோடும், மடியோடும் (ப்ரம்மசர்யம், விரதம், சைவ சாத்வீக உணவு, அஹிம்ஸை, சுத்தம், அழகு, இனிமை, ஒரு முகப்பட்ட மனது எல்லாம் கலந்தது) இந் நாளில் நோன்பிருந்து வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் பெற்று சுமங்கலியாக வாழலாம் என்பது ஐதீகம். இவ் விரதத்தை நியம விதிப்படி வீட்டினில் அனுஷ்டிப்பதனால் இலக்குமிதேவி வீட்டினுள் வாசஞ்செய்வாள். இயலாதவர்கள் ஆலயங்களிலும் இவ் விரதத்தை அனுஷ்டிக்கலாம்.
உள்ளத் தூய்மையுடனும் உடல் தூய்மையுடனும் ஆசாரசீலர்களாக அஷ்ட இலக்குமியாக விளங்கும் அம்பிகையை வழிபட்டால்; அம்பிகையின் அருள் கிடைத்து மகிழ்ச்சியான வாழ்க்கை அமைந்துவிடும். இந்த விரதத்தை அனுஷ்டிப்பதனால், இல்லத்தில் செல்வம் கொழித்துக் களித்தோங்கும். கணவன் நீண்ட ஆயுழுடன் வாழ்வதால்மனைவியர் தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியம் கிடைக்கப் பெறுகின்றனர். அத்துடன் பிள்ளைப் பேறு இல்லாதவர்கள் “பாக்கிய இலட்சுமியின்” அருளினால் மக்கள்பேறு பெறுகின்றனர். அதனால் இந்த விரதத்தை சுமங்கலிப் பெண்கள் (குடும்பப் பெண்கள்) எல்லோரும் விரும்பிப் அனுஷ்டிக்கின்றனர். கன்னிப் பெண்கள் இவ்விரதத்தை அனுஷ்டிப்பதால் செல்லவச் சிறப்போடு வாழும் சிறந்த கணவன் கிடைக்கப் பெற்று சிறப்பான குடும்ப வாழ்க்கை அமையப் பெறுவர் என ஆகமங்கள் கூறுகின்றன.

மகாலட்சுமியை தனலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தானலட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என அஷ்டலட்சுமிகளாகப் பிரித்துள்ளனர். இலட்சுமிதேவி எட்டு வகை செல்வங்களை வாரி வழங்குபவளும் என்றும், பொறுமை மிக்கவள் என்றும். அவள் அனைவருக்கும் நன்மையே செய்வாள் என அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக பெண்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் அவளால் பொறுத்துக் கொள்ள முடியாது. அவள் நித்திய சுமங்கலி. மஞ்சள் பட்டு உடுத்தி காட்சி தருபவள். கணவரான திருமாலின் மார்பில் குடியிருப்பவள். 

பெண்களுக்கே உரித்தான கருணை உள்ளம், அழகு, வெட்கம், அன்பு, புத்தி ஆகியவற்றிற்கு அதிபதியும் அவளே. வரலட்சுமி விரதம் இருந்து அவளைப் பூஜித்தால் எல்லா எல்லாப் பலன்களும் கிடைக்கும் என ஆகமங்கள் கூறுகின்றன.

விரத அனுஷ்டிக்கும் முறை: 

இந்த விரதம் அனுட்டிப்பதற்கு வீடு அல்லது கோயில்களில் தென்கிழக்கு மூலையில் ஒரு சிறு மண்டபம் எழுப்ப வேண்டும். அதில் சந்தனத்தால் செய்யப்பட்ட வரலட்சுமியின் முகத்தை வைக்க வேண்டும். 

வசதி மிக்கவர்கள் வெள்ளி சிலை வைக்கலாம். சிலையை தாழம்பூவால் அலங்கரித்து அதை ஒரு பலகையில் வைக்க வேண்டும். சிலை முன் வாழை இலை போட்டு அதில் ஒரு படி பச்சரிசியை பரப்ப வேண்டும். அரிசியின் மீது தேங்காய், மாவிலை, எலுமிச்சை, பொன், பழங்கள் ஆகியவற்றை வைத்து சிலைக்கு மஞ்சள் ஆடை அணிவிக்க வேண்டும். ஒரு கும்பத்தை எடுத்து அதில் புனித நீர் நிறைத்து, சந்தனம் குங்குமம் வைத்து, மாவிலையுடன் தேங்காய் வைத்து அரிசியின் நடுவில் வைக்க வேண்டும்.

பின் ஐந்து வகையான ஆரத்தி தட்டுகளால் பூஜை செய்ய வேண்டும்.
அஷ்டலட்சுமிகளுக்கும் விருப்பமான அருகம்புல்லை சிலையின் மீது தூவி பூஜை செய்வது நல்லது. பூஜையின் போதுஅஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றை படிக்கலாம். வீட்டிற்கு வந்திருக்கும் பெண்களுக்கு தேங்காய், மஞ்சள்கயிறு, குங்குமம் கொடுக்க வேண்டும்.நைவேத்யமாக கொழுக்கட்டை படைக்கலாம். பின் கலசத்தை அரிசி பானையில் வைத்துவிட வேண்டும். இதனால் அன்னபூரணியின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சந்தனத்தில் செய்யப்பட்ட லட்சுமி வடிவங்களை மறுநாள் நீர்நிலையில் கரைத்துவிட வேண்டும்.இந்த விரதம் இருப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். செல்வ வளம் சேரும். மங்கள வாழ்க்கை அமையும். கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.
சுமங்கலிப் பெண்கள் இந்த விரதத்தின்போது தாலிக் கயிற்றை வைத்து பூஜை செய்து, அதனை அணிந்து கொள்வார்கள்.

 இதனால் அவர்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பார்கள். இந்த வரலட்சுமி விரதத்தை கடைபிடிக்கும் குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு உயர்ந்த ஞானம் கிட்டும். சுமங்கலிப் பெண்களுக்கு மங்கள வாழ்க்கை அமையும். மாங்கல்ய பாக்கியம் நிலைத்து நீடிக்கும். குடும்பத்திற்கு எட்டுவித ஐஸ்வரியங்கள் உண்டாகும். இந்த விரதம் மேற்கொள்வோர் விரும்பிய நலன்கள் எல்லாம் கிட்டும்.
தனியாக வீட்டில் விரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள் அயலில் உள்ள ஆலயங்களில் நடைபெறும் வரலக்ஷ்மி பூசைககளில் கலந்தும் விரதம் அனுஷ்ட்டிக்கலாம். 

பெரும் பாலான இந்தியநாட்டவர்கள் வீட்டில் கும்பம் வைத்து வழிபடுகின்றனர். ஆனால் இலங்கையில் அனேகமானோர் அம்பிகை ஆலயங்களுக்குச் சென்று அங்கு நடைபெறும் விசேஷச பூசைகளில் பங்குபற்றி தம் விரதத்தை நிறைவேற்றுகின்றனர். உள்ளத்தூய்மையுடனும் உடல் தூய்மையுடனும் ஆசாரசீலர்களாக அஷ்ட இலக்குமியாக விளங்கும் அம்பிகையை வழிபட்டால் அம்பிகையின் அருள் கிடைத்து மகிழ்ச்சியான வாழ்க்கை அமைந்துவிடும்.

உங்கள் இல்லத்துக்கு மகாலட்சுமி குடி கொள்ள வேண்டுமா? முதலில் உள்ளத்தையும், வீட்டையும் சுத்தமாக வைத்திருங்கள்.

மனிதவாழ்க்கையில் தெய்வீகமும், ஆசார, அனுஷ்டானமும் சேர்ந்திருப்பது உத்தமம். ஆசார, அனுஷ்டானங்கள் முறையாக இருந்தாலே, அங்கு தெய்வீகமும் ஏற்பட்டு விடும். முன்னோரது ஆன்மிக வாழ்க்கை, ஆசார, அனுஷ்டானங்களுடன் கூடியது. காலையில் பல் தேய்த்து, குளித்து, நெற்றியில் திலகம் இட்டு தெய்வ வழிபாடு செய்த பிறகே உணவு எடுத்துக் கொள்வர்.

​விவசாயம் மற்றும் வெளி வேலைகள் சம்பந்தமாக வெளியே போகிறவர்கள் கூட எவ்வளவு காலதாமதமாக வீடு திரும்பினாலும், குளித்து, நெற்றிக்கு விபூதி, பொட்டு வைத்துக் கொண்டு, சுவாமி படத்துக்கு பூ போட்டு விட்டுத்தான் உணவு எடுத்துக் கொள்வர். இதுவே, ஆசார, அனுஷ்டானமுள்ள குடும்பம்.
அப்படிப்பட்டவர்களையும், அந்த வீடுகளையும் பார்க்கும் போதே ஒரு தெய்வீக களை இருக்கும். பெண்கள் எழுந்ததும், குளியல், வாசல் தெளித்து கோலம் போடுதல், பூஜைக்கு வேண்டியவற்றை தயார் செய்தல் என, இவைகளையும் கவனித்த படியே சமையலையும் செய்து முடிப்பர். இவர்களும் இந்த ஆசார, அனுஷ்டான விஷயத்தில் சிரத்தையோடு இருப்பர்.
விடியற்காலையில் மகாலட்சுமி வந்து கொண்டே இருப்பாளாம். எந்த வீட்டு வாசலில் சாணம் தெளித்து, கோலம் போட்டு, தீபம் ஏற்றி வைக்கப்பட்டுள்ளதோ, அந்த வீட்டுக்குள் வந்து விடுவாள் என்பது ஐதீகம். இதுபோன்ற வீடுகளில் சுபிட்சத்துக்கும், ஷேமத்துக்கும் குறைவே இராது. தூய்மையில்லாத வீடுகளிலும், மனத்தூய்மையில்லாதவர்கள் வாழும் இடங்களிலும் இலட்சுமி தேவி வாசஞ்செய்ய மாட்டாள். பதிலாக மூதேவிதான் குடிகொள்வாள் என்பது ஆன்றோர் வாக்கு.
இப்போது எல்லாமே இயந்திர, நாகரிக வாழ்க்கையாகி விட்டது. காலையில் படுக்கையில் இருந்தபடியே காபி, பிறகு டிபன், பிறகு, எங்கேயாவது ஓடுவது, உழைப்பது; சினிமா, டிராமா, பொழுதுபோக்கு, இரவு வீடு திரும்பியதும் சாப்பாடு, தூக்கம். ஆண்கள் தான் இப்படியென்றால், பெண்கள் கூட ஆசார, அனுஷ்டானத்தில் சிரத்தை காட்டுவதில்லை. ஒரு இடத்தில் குப்பை இருந்தால், அதே இடத்தில் மேலும், மேலும் குப்பையைக் கொண்டு வந்து கொட்டுவர். அந்த இடம் குப்பை மேடாகி விடும். ஆசார, அனுஷ்டானக் குறைவு குடும்பத்தில் யாரிடமாவது இருந்தாலும் போதும், மற்றவர்களுக்கு அதில் சிரத்தை இல்லாமல் போய் விடும்.
“தாத்தா குளிக்காமலே சாப்பிடுகிறாரே! நான் மட்டும் ஏன் குளிக்க வேண்டும்?’ என்று பேரன் கேட்டால், ஆச்சரியப்பட வேண்டியதில்லை. அப்பாவோ, தாத்தாவோ, பூஜை செய்தால், பேரனும் பக்கத்தில் உட்கார்ந்து, மந்திரம் சொல்வான், மணியடிப்பான், ஊதுவத்தி ஏற்றி வைப்பான். இப்படி, புத்தி அவனுக்கும் செல்லும். நாம் தான் வழிகாட்ட வேண்டும். ஆசார, அனுஷ்டானத்தோடு இருப்பது கவுரவக் குறைச்சல் என்று எண்ணினால், அந்த வீட்டில் மகாலட்சுமி தங்க மாட்டாள்; அவளுடைய “அக்கா’ (மூதேவி)தான் சந்தோஷமாக வாசம் செய்வாள்!
​வரலட்சுமி விரதம் பற்றிய புராணக் கதைகளை காண்போம்:

1. பத்ரச்ரவா என்னும் சவுராட்டிர மன்னனின் மனைவி கசந்திரிகா. மன்னன் எப்பொழுதும் மங்கலச் சொற்களையே பேசுபவன், கேட்பவன். குணம், கல்வி, தர்மம், கற்பு ஆகிய நற்பண்புகள் கொண்ட கசந்திரிகா நிலவைப் பழிக்கும் அழகு கொண்டவள்; சினத்தை ஒழித்து எப்பொழுதும் குளிர்ந்த சாந்தமான முகத்தை உடையவள். இவர்கட்கு 7 ஆண் மகவுகளும் ஒரு பெண் குழந்தையும் பிறந்தன. பெண் குழந்தையை சியாமா எனப் பெயரிட்டு வளர்த்து வந்தனர்.
கசந்திரிகாவின் நற்குணங்களும், நற்செயல்களும் கண்டு மகாலட்சுமி அவளிடம் கருணை கொண்டாள். ஒரு வெள்ளிக்கிழமை துவாதசி திதியன்று மகாலட்சுமி ஒரு பழுத்த சுமங்கிலி உருவெடுத்து அந்தப்புறத்தில் நுழைந்தாள். வயிறார உண்டு வாய்நிறையத் தாம்பூலம் தரித்து அமர்ந்திருந்த அரசி, “தாயே! சுமங்கிலியே! தாங்கள் யார்? எதற்க்காக வந்தீர்கள்?” என் வினவினாள். அவளை நோக்கி மகாலட்சுமி,”கசந்திரிகா! நீ நல்லவள். உத்தமி. ஆனால், லட்சுமி தேவியின் அவதார தினமான இன்று வயிறார உண்டு தாம்பூலம் தரித்துக் கொண்டுள்ளாயே! இது நியாயமா?” எனக் கேட்டாள். செய்த தவறைச் சுட்டிக் காட்டியவுடன் கோபமே கொள்ளாத கசந்திரிகாவுக்கு சினம் கொப்பளித்து வந்தது. உடனே மகாலட்சுமியின் கன்னத்தில் அறைந்து, ”இங்கிருந்து போய்விடு” என்றாள். கண்கள் கலங்கி கண்ணீர் தளும்பிய முகத்துடன் வெளியேறிய மகாலட்சுமியைக் குழந்தை சியாமா கண்டு, ”அம்மா! ஏன் அழுகிறீர்கள்? என்ன வேண்டும்?” என்றாள்.
கண்களைத் துடைத்துக்கொண்டு மகாலட்சுமி, ”பெண்ணே! உன் தாயாருக்கு நல்லது சொன்னேன். அதற்க்காக என்னை அடித்து அவமானப்படுத்தித் துரத்தி விட்டாள். அதனால்தான் திரும்பிப் போகிறேன்” என்றாள். உடனே சியாமா மகாலட்சுமியை உபசரித்து, அமரவைத்து, “அந்த நல்லதை எனக்குச் சொல்லிக்கொடுங்களேன்” என்றாள். மனம் குளிர்ந்த மகாலட்சுமி, சியாமாவுக்கு வரலட்சுமி விரதம் கொண்டாடவேண்டிய வழிமுறைகளை உபதேசித்தாள். அன்று முதல் சியாமா, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தவறாது வரலட்சுமி விரதத்தைக் கடைப்பிடித்தாள். லட்சுமிதேவியை அவமதித்ததால் பத்ரச்ரவா மன்னனிடமிருந்த செல்வங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கின. மனம் நொந்த மன்னன் இராச்சியம் கையைவிட்டுப் போவதற்குள் மகளுக்குத் திருமணம் செய்ய எண்ணி மாலாதரன் என்ற மன்னனுக்கு மணமுடித்துக் கொடுத்தான். புகுந்த வீடு சென்றபின்னும் சியாமா விரதத்தைத் தொடர்ந்தாள். மாலாதரனுக்கு செல்வம் குவிந்தது. பத்ரச்ரவாவும் கசந்திரிகாவும் பகைவர்களால் விரட்டப்பட்டு காட்டுக்கு ஓடி உணவுக்கு வழியற்று ஊர் ஊராகத் திரிந்தனர்.
செய்தியறிந்த சியாமா வருந்தி, அவர்களைத் தன் நாட்டிலேயே தங்கவைத்துத் தன் சேவகன் மூலம் உணவளித்துக் காத்து வந்தாள். நாட்கள் கழிந்தன. ஒருநாள், நிறையத் தங்க நாணயங்களை ஒரு பாத்திரத்தில் போட்டு மூடிக் கொடுத்து, “இதை வைத்துக்கொண்டு எங்காவதுபோய்ப் பிழைத்துக் கொள்ளுங்கள்” என்றாள். சியாமா அவ்விடத்தை விட்டு அகன்றதும், மூடிய பாத்திரத்தைத் திறந்து பார்த்த பத்ரச்ரவா, பொன்னுக்குப் பதில் கரித்துண்டுகளைக் கண்டு அதிர்ந்து போனான். இதை சியாமாவுக்குத் தெரியப்படுத்தினர். உடனே, சியாமாவுக்குத் தன் தாய் மகாலட்சுமியை அவமதித்தது நினைவுக்கு வந்தது. தன் அம்மாவை அழைத்து நடந்தவைகளை நினைவுபடுத்தி, அவள் செய்த தவறைச் சுட்டிக்காட்டி, விரதமிருக்கும் வழிமுறைகளையும் சொல்லிக் கொடுத்தாள்.
அவ்வாறே கசந்திரிகா வரலட்சுமி விரதமிருந்துவர நாளுக்கு நாள் நல்லவைகள் நடந்தன. பத்ரச்ரவாவுக்கும் மனதில் தைரிய லட்சுமி குடியேரியதால், தன் ஆதரவாளர்களைத் திரட்டிப் படையெடுத்து வந்து தன் நாட்டை மீட்டான். பெற்றோர் நல்ல நிலையை அடைந்ததைக் கண்ட சியாமா மகிழ்ந்தாள்.
2. சித்திரநேமி என்ற தேவகுலப் பெண் நீதிபதியாக இருந்தாள். அவள் தேவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு நடுவராக இருந்து தீர்ப்பு வழங்குவாள். ஒருமுறை அவள் பாரபட்சமாக நடந்துகொண்டதால் அன்னை பார்வதி அவளை குஷ்டரோகியாகும்படி சாபம் கொடுத்தாள்.
சித்திரநேமி சாபவிமோசனம் கேட்டு பார்வதியில் காலில் விழுந்தாள். வரலட்சுமி விரதத்தை கடைபிடித்தால் நோய் நீங்கும் என பார்வதி அருள் செய்தாள். அவள் பூலோகம் வந்து, ஒரு குளக்கரையில் அமர்ந்து வரலட்சுமி பூஜை செய்து சாபம் நீங்கப்பெற்றாள். புண்ணிய நதிகளில் தீர்த்தமாடுவது, வரலட்சுமி விரதம் இருந்ததற்கு ஒப்பானதாகும். குறிப்பாக கங்கை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, காவிரி, தாமிரபரணி ஆகிய புண்ணிய தீர்த்தங்களில் நீராடினால் காலம் முழுவதும் வரலட்சுமி விரதம் இருந்த பலன் கிடைக்கும். நாளை பெண்கள் புண்ணிய நதிகளில் தீர்த்தமாடியும் வரலாம்.மாமனார் மற்றும் மாமியாருக்கு பணிவிடை செய்யும் மருமகள்களுக்கும், வரலட்சுமி விரதம் அனுஷ்டித்த பலன் கிடைக்கும். மகத நாட்டில் வசித்த சாருமதி என்ற பெண் தனது கணவன், மாமனார், மாமியார் மற்றும் உறவினர்களை கடவுளின் வடிவமாக கருதி அவர்களுக்கு பணிவிடை செய்ததால் வரலட்சுமி விரதம் இருந்ததின் பலன் முழுவதும் கிடைத்து கணவனுடன் நீண்டநாள் வாழ்ந்தாள்.
2. பத்ரசிவன் என்ற மன்னன் சிறந்த விஷ்ணு பக்தன். அவன் மனைவி கரசந்திரிகா. இவர் களது ஒரே மகள் சியாமபாலா. அவளைத் திருமணம் செய்து கொடுத்தபின் தாய் துயருற்றாள். அவளது கவலையைத் தீர்த்து அவளுக்கு ஒரு ஆண் மகவு பிறக்க அருள் செய்ய எண்ணினாள் மகாலட்சுமி. அதனால் வரலட்சுமி விரதம் பற்றி எடுத்துக்கூற வயதான சுமங்கலி வடிவில் அவளிடம் சென்றாள். ஆனால் வந்திருப்பது லட்சுமிதேவி என்று அறியாத கரசந்திரிகா அவளை அவமானப் படுத்தி அனுப்பி விட்டாள்.
அங்கிருந்து சியாமபாலாவிடம் சென்ற மகாலட்சுமி நடந்தவற்றைக் கூறி, தான் போனால் எல்லா யோகங்களும் அரண்மனையை விட்டுப் போய்விடும் என்று கூறினாள். தன் தாயின் தவறுக்காக வருந்தி மன்னிப்புக் கோரிய சியாமபாலா, வரலட்சுமி விரதத்தைப் பற்றிக் கேட்டறிந்து சிரத்தையுடன் அதைக் கடைப் பிடித்து வரத் தொடங்கினாள். அதன் பிறகு அவளுக்குச் சுபிட்சம் பொங்கிய அதே நேரத் தில் அவளது பெற்றோர் அனைத்து செல்வங் களையும் இழந்தனர்.
தன் பெற்றோரது வறுமையை அறிந்த சியாமபாலா ஒரு குடம் நிறைய பொற்காசுகளை அவர்களுக்கு அனுப்பி வைத்தாள். அக்குடத் தில் கரசந்திரிகா கை வைத்ததும் பொற்காசுகள் கரியாகி விட்டன. இதையறிந்த மகள் அந்த ஆண்டு தன் தாயுடன் வரலட்சுமி விரதம் மேற் கொண்டாள். விரதத்தின் மகிமையால் கர சந்திரிகா தன் முந்தையை சுபிட்ச நிலையை எய்தியதோடு ஆண் வாரிசும் பெற்றாள். வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்கள் அஷ்ட போக பாக்கியங்களைப் பெறுவார்கள் என்பதை இவ்வரலாறு எடுத்துரைக்கிறது.
விரத தினத்தன்று லட்சுமி துதி, லட்சுமி வரலாறு போன்றவற்றைச் சொல்லி தங்களை முழுமையாக வழிபாட்டில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அன்று மாலை சுமங்கலிப் பெண்களை வீட்டிற்கு அழைத்து, பூஜை முடிந் ததும் மங்கலப் பொருட்களுடன் தட்சணையும் வைத்துக் கொடுத்து அனுப்ப வேண்டும்.

​ வரம் தரும் லக்ஷ்மி என்பதால் வரலக்ஷ்மி. மிகவும் பக்தி ச்ரத்தையோடும், மடியோடும் (ப்ரம்மசர்யம், விரதம், சைவ சாத்வீக உணவு, அஹிம்ஸை, சுத்தம், அழகு, இனிமை, ஒரு முகப்பட்ட மனது எல்லாம் கலந்தது) செய்வார்கள். மற்ற நாட்களில் எப்படியிருந்தாலும் இந்த ஒரு நாள் மற்ற கவலைகளை கஷ்டங்களை மறந்து, அம்பிகையை ஆத்மார்த்தமாக, தன் வீட்டுப்பெண்ணாக பாவித்து செய்வார்கள். தனக்கு ஒரு மகள் இருந்தால் அவளை எப்படியெல்லாம் ஆராதிப்பார்களோ அது போல் வரல‌க்ஷ்மியை தன் செல்ல மகளாக பாவித்து, அலங்காரம் செய்து, விதவிதமான உணவு வகைகளை நைவேத்யம் செய்து, பூச்சூட்டி, புத்தாடை புனைந்து, உயிருக்கு உயிராகக் கண்ணுக்கு கண்ணாக வரித்து பூஜிப்பார்கள்.

எத்தனை ஏழ்மையிலும் தன்னால் முடிந்த வரை பக்தியுடன் இப்பூஜை செய்பவர்களுக்கு அவள் நிச்சயம் அருள் பொழிவாள் – அப்போது கஷ்டப்பட்டாலும், தர்மத்துக்கே இறுதியில் வெற்றி என்பது போல, நிச்சயம் வருங்காலம் வளமானதாக இருக்கும். இது பணத்தினால் வரும் கஷ்டமாக இருந்தாலும் சரி, வேறு எந்த காரணமாக இருந்தாலும் சரி, அவள் கைவிடுவதேயில்லை. நடுவில் கடந்து போகும் காலங்களும் எப்படியோ அதிக கஷ்டம் தெரியாமல் போய்விடும்.​ ​

அனைத்து வளங்களையும் வாரி வழங்கும் வரலட்சுமியை வழிபட்டு நலம் பெறுவோமாக.​

No comments:

Post a Comment