நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Tuesday, 4 August 2015

சப்தரிஷிகள்

சப்தரிஷிகள்

அகத்தியர்:
அகத்தியர் என்பவர் சப்தரிஷிகளில் ஒருவராகவும், சித்தர்களில் முதன்மையானவராகவும் அறியப்பெறுகிறார். இவர் சிவபெருமானின் திருமணத்தினை காண அனைவரும் வடதிசைக்கு வந்தமையால், தென்திசைக்கு பயனப்பட்டு அதை சமன்செய்ததாகவும், சிவசக்தி திருமணத்தினை தமிழகத்திலிருந்து கண்டவராகவும், தமிழை சிவபெருமானிடமிருந்து கற்றவராகவும் அறியப்பெறுகிறார். இவரே அகத்தியம் எனும் முதல் தமிழிலக்கண நூலை எழுதியவர். இந்நூல் கிடைக்கப்பெறவில்லை. தொல்காப்பியத்தை

எழுதிய தொல்காப்பியனார், இவருடைய சீடராக அறியப்பெறுகிறார்.
மேலும் அகத்தியர், இந்துக் கடவுள்களைப் போல தீயவர்களை அடக்கியதாகவும், இராவணை வென்றவராகவும் அறியப்பெறுகிறார்


அத்ரி மகரிஷி:
இந்து சமயப் புராணங்களில் கூறப்படும் முனிவர் ஆவார். இவர் பிரம்மனின் மகன் என்றும் பிரஜாபதிகளில் ஒருவர் என்றும் கூறுவர். இவரது மகன்களுள் ஒருவர் தத்தாத்ரேயர் ஆவார். . இவரது மகன்கள் பலர் ரிக் வேதத்தைத் தொகுத்து உதவினர் என்று புராணங்கள் கூறுகின்றன. இவரது மனைவிஅனுசுயா தேவி ஆவார்
மருத்துவத்தில் சிறந்த ஆத்ரேயரும் அத்ரியிடம் இருந்து தோன்றியவரே
அத்ரி-அனசூயை தம்பதிபோல் தாம்பத்தியம் சிறக்க வாழ வேண்டும் என்று புதுமணத் தம்பதியை வாழ்த்துகிறது ரிக்வேதம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

நெல்லை மாவட்டம், ஆழ்வார்குறிச்சி கடனா நதி அனை அருகில் உள்ள அத்ரி மலையில்
ஸ்ரீஅனுசுயா தேவி அம்பாள் உடன் மார் ஸ்ரீஅத்ரி மகரிஷி கோவிலில் அமைந்து உள்ள
ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு பிரதி  மாதம்  ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று காலை 9.30 மணிக்கு மேல் அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீஅனுசுயா தேவி அம்பாள்உடனமார் ஸ்ரீஅத்ரி மகரிஷி மற்றும் ஸ்ரீ அகத்திய மகரிஷி .திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்


கலந்து கொள்ள வீரும்பும் பக்தர்கள் கிழ்கண்ட செல் நம்பரை தொடர்பு கொள்ளவும்

மேலும் தகவல்கள்களுக்கு
cell :9842078733
9043942091,
9843016651






காசிபர் மகரிஷி:
.காசிபர் இந்து தொன்மவியல் அடிப்படையில் சப்தரிகளுள் ஒருவராவார். இவர் மரீசி முனிவரின் புதல்வர். தேவர் குலம் மற்றும் அசுரர் குலம் இரண்டுமே கச்யபரிடம் இருந்து தோன்றின. அவரில் இருந்து வந்த மனுவிடம் இருந்து தோன்றியதே மனித குலம்! இவர் திதி, அதிதி, தனு, காட்டை, அரிட்டை, சுரசை, இளை, மினி, குரோதவசை, தாம்பிரை, சுரபி, சரமை, திமி என்ற பதிமூன்று தட்சனின் குமாரிகளையும், விந்தை, கத்துரு, பதங்கி, யாமினி ஆகியோரையும் மணந்தவர்




கௌதம மகரிஷி:
கௌதம மகரிஷி சப்தரிஷிகளுள் ஒருவர். வேத கால மகாரிஷிகளுள் இவரும் ஒருவர். இவர் இயற்றிய தர்ம சூத்திரம் இன்றளவும் பேசப்படுகிறது. அறம் காக்க அனைவருக்கும் அறைகூவல் விடுத்து போதித்தவர்.பல மந்திரங்களை இவர் உருவாகியுள்ளார். இவர் பேரைக்கொண்ட பல சுலோகங்கள் ரிக் வேதத்தில் உள்ளது. தேவி பாகவதத்தில் கோதாவரிநதிக்கு அப்பெயர் இவராலேயே வந்தது என்று கூறப்பட்டுள்ளது. இவரதி மனையாளின் பெயர் அகலிகை. இவர்களுக்கு, வாமதேவர், நோதாஸ்ஷாதனந்தா என்ற புதல்வர்கள் இருந்தனர். அவர்களும் வேதத்தில் பல சுலோகங்களை இயற்றயுள்ளனர். ரிக் வேதத்தின் ஆம் பாகம் இவர்களது குடும்பத்தை விவரிக்கிறது. பாரத்வாஜ மகரிஷியும், கௌதமருடன் அங்கரிசர் குளத்தில் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன


பாரத்வாஜ மகரிஷி
சப்தரிஷிகளுள் ஒருவர். ரிக்வேத காலமுனிவர்களில் ரிக்வேதத்தில் அதிக சூக்தங்கள் இயற்றியவர். இவர் பெரும் பெயர்பெற்றவர். பல மந்திரங்களை இவர் உருவாகியுள்ளார். துரோணாச்சாரியர்இவரது புதல்வரே. இவரது தவ வலிமையை பல புராணங்கள் எடுத்துக் கூறுகின்றன


பிருகு மகரிஷி:
சப்தரிஷிகளுள் ஒருவர். பிரம்மதேவரால் தன் படைக்கும் தொழிலில் உதவி புரிவததர்காக உருவாக்கப்பட்ட பிரஜாபதியில் ஒருவர். அவரது மானசபுத்திரராகவும் கருதப்படுகிறார். ஏறக்குறையா கி.மு3000 ஆம் ஆண்டு, திரேதா யுகத்தில், இவர் எழுதிய பிருகு சம்ஹிதா எனும் நூலே சோதிட சாஸ்திரத்தின் முதல் நூலாகக்கருதப்படுகிறது. இவரது துணைவியின் பெயர் கியாதி ஆகும். இவர் தக்க்ஷனின் மகளாவார். இவர்களுக்கு ததா, விததா, சுக்ரன் என்ற மகன்களும், ஸ்ரீ என்ற மகளும் உண்டு.
கும்பகோணம் அருகே உள்ள சுவாமி மலை அறுபடை வீடுகளில் நான்கவதாக முருகனுக்கு அமைந்த வீடு. அப்படியென்றால் பெருமாளை பிரதான படுத்தி ஞானத்தை கூறிய பிருகு முனிவருக்கும் இந்த இடத்திற்கும் என்ன சம்பந்தம் என்று தோன்றும்?? மேலும் இங்கு தான் முருக பெருமான் பிரணவத்தின் ரகசியத்தை தகப்பனுக்கு உணர்த்திய இடம்.
புராணங்கள் பிருகு முனி இங்கு கடும் தவம் புரிந்ததாகவும், அந்த தவத்தை யார் கலைதாலும் அவர்கள் தன் நினைவு எல்லாம் மறக்கும் என்ற எச்சரிக்கையும் விடுத்தார். ஆனால் அவரின் தவம் மிக கடுமையாக இருந்தது. தலையில் இருந்து கிளம்பிய அக்னி ஜவாலை தேவலோகத்தை தாக்கியது. தேவர்கள் பயம் கொண்டு ஈஸ்வரனை சரண் அடைந்தனர். ஈசன் தன் கையால் பிருகுவின் தலையில் இருந்து கிளம்பிய அக்னி ஜவாலை மூடினார். இதனால் பிருகுவின் தவம் கலைந்தது அதனால் அத்தன் பிரணவத்தை மறந்தார். அதனை மறுபடியும் முருக பெருமான், தந்தைக்கு நினைவு படித்தினார்

விஸ்வாமித்திரர் மகரிஷி:
பண்டைய இந்தியாவின் மிகப்பெரும் முனிவராகக் கருதப்படுபவர். குசநாபரின் மகன். கௌசிகன் என்ற பெயருடைய மன்னன்.வசிட்டரோடு ஏற்பட்ட போட்டியின் காரணமாக, கடுமையான தவங்களைச் செய்து பிரம்ம ரிஷியானவர். காயத்ரி மந்தரம் உட்பட பழமையான ரிக் வேதத்தின் பல பகுதிகளை எழுதியதாக கருதப்படுகிறார். புராணங்களின் படி ஆதி முதல் 24 ரிஷிகளே முழு ஞானத்தையும் சக்தியையும் பெற்றவர்களாக இருந்தாக கூறப்படுகிறது
.விஸ்வாமித்தர முனிவர் கடுந்தவம் புரிந்தார். அவருடைய தவத்தின் கனல் தேவலோகத்தில் இருக்கும் இந்திரனுக்கு அச்சத்தினை உண்டாக்கியது. எனவே தேவ கன்னிகையான மேனகையை விஸ்வாமித்தரர் முன் நடனமாடச் செய்து, முனிவரின் தவத்தினை கலைக்க கட்டளையிட்டான். அவ்வாறே மேனகை விஸ்வாமித்திரர் முன் நடனமாடினாள்.

அவளுடைய நடனத்தினால் முனிவரின் தவம் கலைந்தது. அத்துடன் மேனகையை மனைவியாக ஆக்கிக்கொண்டார் விஸ்வாமித்திரர். இவர்கள் இருவருக்கும் சகுந்தலைஎன்ற மகள் பிறந்தாள்.
விஸ்வாமித்திரருக்குத் தனிக் கோவில் தமிழ்நாட்டின் திருநெல்வேலிமாவட்டம், ராதாபுரம் வட்டம் விஜயாபதி உள்ளது

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு பிரதி மாதம் அனுஷம் நட்சத்திர தினத்தன்று சிறப்பு அபிஷகம், புஷ்பாஞ்சலி ஆராதனை,அன்னதானம் நடைபெறும் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்
மேலும் தகவல்கள்களுக்கு:
98428 58236
87540 16236
98420 78733






No comments:

Post a Comment