நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Saturday, 1 August 2015

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் நடைபெறும் 13ம் ஆண்டு ஸ்ரீ சகஸ்ர சண்டீ மஹா யக்ஞம்



அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்த்தமாய் வாழ வேண்டி

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் நடைபெறும் 13ம் ஆண்டு 
ஸ்ரீ சகஸ்ர சண்டீ மஹா யக்ஞம்

நிகழ்ச்சி நிரல்
*******************





10-08-2015 திங்கள் கிழமை ஆடி மாதம் 25 மாலை 
5-00 மணிக்கு
******************************************************
ஸ்ரீ விக்னேஷ்வர பூஜை, சங்கல்பம்,

ஸ்ரீ சண்டி தேவி கலச ஸ்தாபனம்

11-08-2015,செவ்வாய்கிழமைஆடி மாதம் 26 காலை 7-00  மணிக்கு
******************************************************

ஸ்ரீ லக்ஷ்மி கணபதி ஹோமம்,
(செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றி பெற )

ஸ்ரீ நவக்ரக ஹோமம்,

ஸ்ரீ மஹா ம்ருத்ஞ்ஜய ஹோமம்,
(ஆயுள் விருத்தி )

பிற்பகல் 12-30
 மணிக்கு  ----- பூர்ணாஹுதி

மாலை 5-00
 மணிக்கு---- ஆவரண பூஜை

ஸ்ரீ தக்ஷிண காளி ஹோமம்
(வளங்கள் அணைத்தும் பெற)

ஸ்ரீ ராஜா மாதங்கீ ஹோமம்
(கல்வி கல்வித்துறை வளர்ச்சி கிடைக்க )

ஸ்ரீ மஹா வாராகி ஹோமம்
(தொழில் வெற்றி பெற பகையை வெல்ல)

ஸ்ரீ சதுஷ் ஷஷ்டி பைரவ பலி பூஜை ஹோமம்
(செல்வம் பெருகி பொன்னும் பொருளும் நிலைத்திட)

தொடர்ந்து ஸ்ரீ சப்த சதி பாராயணம்
இரவு 9-00
 மணிக்கு தீபாராதனை

12-08-2015,புதன் கிழமை ஆடி மாதம் 27 காலை 7-00
 மணிக்கு 
******************************************************
ஸ்ரீ சங்கடஹர கணபதி ஹோமம்,

ஸ்ரீ லக்ஷ்மீ நாராயண ஹோமம்,

ஸ்ரீ ஸுக்த ஹோமம்,

ஸ்ரீ மஹா சுதர்ஸ்ன ஹோமம்,
(நினைத்த காரியங்கள் தடையின்றி நடைபெற )

ஸ்ரீ மஹா புத்ர காமேஷ்டி ஹோமம்
(மகப்பேறு -குழந்தைச்செல்வம் பெற )

ஸ்ரீ மஹா தன்வந்த்ரீ ஹோமம்
(நோயற்ற வாழ்வு நீண்டஆயுளை பெற)

பிற்பகல் 12-00 
 மணிக்கு

பூர்ணாஹுதி

மாலை 5-00 
 மணிக்கு

ஸ்ரீ ஸ்வயம்வரா பார்வதி ஹோமம்(திருமணத் தடை நீங்கித் திருமணம் நடைபெற)

ஸ்ரீ சப்த சதி பாராயணம்
அர்ச்சனை,தீபாராதனை

இரவு 9-00
 மணிக்குபூர்ணாஹுதி

13-08-2015,வியாழ கிழமைஆடி மாதம் 28 
காலை 
7-00  மணிக்கு
******************************************************

ஸ்ரீ ருண மோசன கணபதி ஹோமம் (கடன் நோய் கஷ்டகள் நீங்க)

ஸ்ரீ சண்டீ ஆவரண தேவதா ஹோமம்
ஸ்ரீ சண்டீ ஹோமம்

ஸ்ரீ சுவாஸுனி வடுக கன்யா பூஜை

பிற்பகல் 12-30
 மணிக்கு பூர்ணாஹுதி

14-08-2015,வெள்ளி கிழமைஆடி மாதம் 29 காலை
 7-00  மணிக்கு
******************************************************

ஸ்ரீ வாஞ்ஜா கல்பலதா கணபதி ஹோமம்
(சகல செளபாக்கியங்கள் வேண்டியவரர்க்கு வேண்டிய வண்ணம் கிடைக்க )

9-00
 மணிக்கு ஸ்ரீ தச மஹா வித்யா பூஜை

பிற்பகல் 11-00 
 மணிக்குபூர்ணாஹுதி,
பிற்பகல் 11-30  மணிக்கு தீபாராதனை

மாலை 5-00 மணிக்கு

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா ஹோமம்

இரவு 7-00மணி பூர்ணாஹுதி

இரவு 8-00 மணிக்கு கடம் புறப்பாடு,அம்பாளுக்கு பாத சமர்ப்பணம்,ப்ரஸாதம்

விநியோகம்,

அனைவரும் இந்த ஸ்ரீ சகஸ்ரசண்டி மஹா யாக பெருவிழாவில் கலந்து கொண்டு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள்ஆசிர்வாதம் பெற்று ஆனந்த்தமாய் வாழ வேண்டும் என்று மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.
அனுமதி இலவசம் ,24மணி நேரம் எப்போதும் அன்னதானம்
மேலும் தகவல்கள்களுக்கு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell :+91 98428 58236

No comments:

Post a Comment